Sunday, April 13, 2025
spot_img

மூன்று கூட்டணிகள், விஜய் தனியே, சீமான் உள்ளே, சிவப்பு நகரமான மதுரை, உச்ச நீதிமன்றம் எழுதிய அரசியலமைப்பு திருத்தம் – வாக்காளர் சாமி!

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “தாங்கள் கடந்த முறை இன்னும் ஒரு மாதத்துக்குள் தமிழக அரசியலில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன் என கூறிவிட்டு சென்ற பின்னர் அவசர அவசரமாக எடப்பாடி பழனிச்சாமி புது தில்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது, அண்ணாமலையை மாற்றுவது உறுதி என்ற நிகழ்வுகள், ஆளுநருக்கு கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு,  செங்கடலான மதுரை என்ற பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது சாமி” என்றதும் கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆம் அகில இந்திய மாநாடு (CPI M: Communist Party of India Marxist) கடந்த ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் (Madurai) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகளும் மாநாட்டின் இறுதி நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கும் ஊர்வலத்துக்கும் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தோழர்களும் குவிந்தனர். இம்மாநாடு (All India Conference) குறித்து இன்று ஜூனியர் விகடனில் வெளியான பின்வரும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.” என்றார் வாக்காளர் சாமி.

* சிபிஎம் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களாலும் தோழர்களின் பேரணியாலும் மதுரையே செங்கொடியாக செங்கடல் போல காட்சி அளித்தது. 

* கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஐந்து நாட்களும் மதுரையிலேயே தங்கியிருந்து பாதுகாவலர்களை கடந்து கட்சியினருடன் உலா வந்தார். அவர் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தாலும் தமுக்கம் மைதானத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட உணவையே வரிசையில் நின்று பெற்று சாப்பிட்டார். 

* மாநாட்டுக்கு வந்த கேரளா அமைச்சர்களும் முன்னாள் மேற்குவங்க அமைச்சர்களும் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் வரிசையில் நின்று உணவைப் பெற்று சாப்பிட்டனர். 

* திரைப்பட இயக்குனர்கள் சசிகுமார், ராஜு முருகன், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ஞானவேல், மாரி செல்வராஜ், பிரகாஷ்ராஜ், ரோகிணி உள்ளிட்ட பலரும் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 

* மாநாட்டுச் செலவுகளுக்காக வழக்கம்போல பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் நன்கொடை பெற்றார்களே தவிர பெரு நிதியாக யாரிடமும் குறிப்பாக, திமுக அமைச்சர்களிடம் கூட எந்தத் தொகையும் அவர்கள் கேட்கவில்லை என்பது வியப்பான அம்சமாகும்.  

“ஐந்து   லட்சம் தோழர்கள் கூடினாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் படையினர் (Red army) அவர்களை ஒழுங்கு படுத்தினர். பல்லாயிரக்கணக்கான பெண் தோழர்கள் எவருக்கும் தோழர்களில் எவருக்கும் பாலியல் சீண்டல்கள் (sexual issues) இல்லை. பொதுக்கூட்ட மைதானத்திலும் பேரணி நடைபெற்ற இடங்களிலும் மதுபான பாட்டில்களை (liquor bottles) பார்க்க முடியவில்லை. மாநாட்டின் இறுதி நாளில் நடைபெற்ற பேரணியை ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேல் கம்யூனிஸ்ட்களின் செந்தொண்டர் படை அணிவகுத்து நிற்க, பல கிலோமீட்டர் நீளத்தில் தோழர்கள் கலந்து கொண்டு மிகப் பிரமாண்டமான பேரணி (rally) நடைபெற்றது. இதில் எங்கும் சலசலப்பு இல்லை. குறிப்பாக சாலையில் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்த போது உடனடியாக பேரணியில் சென்றவர்கள் ஒதுங்கி வழி விட்டு மீண்டும் அதே கட்டுப்பாடுடன் பேரணியில் கலந்து கொண்ட ஆச்சரியம் அளித்தது.  

மொத்தத்தில் மதுரை மாநாடு நடைபெற்ற ஐந்து நாட்களும் செந்நிறமாக மாறியது. சிகப்பு என்பது போராட்ட களத்தில் உயிர் நீத்த தோழர்களின் குருதியின் வண்ணம் என்று காண முடிந்தது.  உலகமயமாக்கலை (globalization) எப்போதும் இந்திய கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உலக வர்த்தகப் போர் உலகமயமாக்கலை முடிவு கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் வாக்காளர் சாமி”. 

“புது தில்லிக்கு எடப்பாடி பழனிச்சாமியை  அன்பாக அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home minister Amith Sha( பேச்சுவார்த்தை நடத்தினாலும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி (AIADMK Edapadi Palanisamy) செய்தியாளர்களோடு பேசும் போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என்று தெரிவிக்கவில்லை. ஆனால், உள்துறை அமைச்சர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் விரைவில் அதிமுகவுடன் கூட்டணி அமையும் என்பது போலவே சுட்டிக்காட்டி உள்ளார். 

பேச்சுவார்த்தையின் போது தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என்பதும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என்பதும் எடப்பாடி தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்றுபட்ட அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்த உதவும் என்று கணக்கு போடும் பாஜக தரப்பில் தமிழக அண்ணாமலையை (Annamalai) மாற்றுவதற்கு நடவடிக்கையை மேற்கொள்வது போலவே உள்ளது. இதன் அறிகுறியாகத்தான் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் நயினார் நாகேந்திரன் மேடையில் அமர வைக்கப்பட்டார். மாறாக, அண்ணாமலை பார்வையாளர்களின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் என்பதை காண முடிகிறது. ஆனால், இரண்டாவது முறையாக பாஜக மாநில தலைவராக தொடர அண்ணாமலை இன்னும் முயற்சி   செய்வதை கைவிடவில்லை என்றே தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி. “உண்மைதானே சாமி!?” என்றேன் நான்.

“ஒன்றுபட்ட அதிமுக என்பதை ஏற்படுத்த அக்கட்சியில் செங்கோட்டையனை தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்க பாஜக முயற்சிப்பதாக தெரிகிறது இல்லையெனில் கூட்டணியில் 40 சதவீத இடங்களை பெற்று சசிகலா, ஒபிஎஸ், தினகரன் (Sasikala, OPS, Dinakaran) ஆகியோரை உள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக திட்டமிடுவதாகவும் கருதப்படுகிறது. இந்த உள் கூட்டணியில் சீமானும் வேல்முருகனும் (Seeman and Velmurugan) இணைக்கப்படலாம்.  இவ்வாறான அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோரது முழு ஆதரவும் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் மீதான வைகைச் செல்வனின் தாக்குதல்களும் சைதை மீதான துரைச்சாமி மீதான முனுசாமியின் தாக்குதல்களும் அதிமுக தொண்டர்களை அதிருப்திபடுத்தியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “இதைப் பார்த்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக மற்றும் இதர கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி திமுகவுக்கு எதிராக தயாராகி விட்டது போல் அல்லவா உள்ளது சாமி!” என்றேன் நான்.

“பொதுவெளியில் திமுகவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகளின் (VCK) முழக்கம் குறைந்துவிட்டது. கம்யூனிஸ்டுகளின் அனலை குறைக்கும் வகையில்முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று முழங்கியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த ஓரிரு சிறு கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதை நிகழ்வுகள் காட்டுகின்றன. 

இப்படி பார்க்கும்போது விஜய் (Vijay Actor) தனியாகத்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க வேண்டி இருக்கும் என்ற நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் மோதப்போவது உறுதியாகிவிட்டது. இதில் பாமக (PMK) தற்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறினாலும் இறுதியில் பாஜக உள் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன வாசனை (G.K.Vasan) பொருத்தவரை பாஜக கூட்டணியில் தொடர்வார் என்பது மாற்றமில்லை” என்றார் வாக்காளர் சாமி. “கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் சாமி! பொறுத்திருந்து பார்ப்போம்” என்றேன் நான்.

தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்து இருந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு மூலமாக இந்திய அரசியலமைப்பில் புதிய திருத்தத்தை உச்ச நீதிமன்றம் எழுதியுள்ளது. (Supreme Court written a historical constitutional amendment) சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு எவ்வளவு காலத்துக்குள் ஆளுநர் (Governor) ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற எந்த விபரமும் இந்திய அரசியலமைப்பில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக சில ஆளுநர்கள் மாநில சட்டமன்றங்கள் இயற்றும் மசோதாக்களை சட்டமாக்க மிகவும் காலதாமதம் செய்கின்றனர் அல்லது கிடப்பில் போட்டு விடுகின்றனர். 

இந்த நிலை கடந்த 75 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 சட்டங்களுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உள்ள தீர்ப்பு முக்கியமான அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகும். 

தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநர் ஒப்புதல் தராத சட்ட மசோதாக்கள் அனைத்திற்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய வரலாற்றில் மாநில சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதனைத் தவிர மாநில சட்டமன்றம் சட்டத்தை இயற்றி அனுப்பி வைத்தால் ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அல்லது திருப்பி அனுப்பினாலும் இரண்டு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆளுநர் உத்தரவிட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் அதிகாரம் மிக்கவர் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பின் முக்கிய திருத்தம் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி இன்று இன்று என்று அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.  இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு, அரசியலமைப்பு அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மத்திய அரசு எழுப்பாமல் இருக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பை முடக்க பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றாமல் இருக்க வேண்டும்என்பது தமிழக மக்களின் ஆசையாக உள்ளது” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: சிறந்த கணிப்புகளையும் யூகங்களையும் தொடர்ந்து வழங்கும் வாக்காளர் சாமிக்கு நன்றி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles