செய்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சிக்கு மாணவர்- இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் நுகர்வோர் பூங்கா (theconsumerpark.com), பூங்கா இதழ் (thenewspark.in) ஆகிய இணைய இதழ்கள் தமிழில் வெளியாகி வருகின்றன. வரும் 2024 ஜூலை முதல் தேதியில் இருந்து ஆராய்ச்சி பூங்கா...
மாதவிடாய் கால சானிட்டரி நாப்கின்கள் – வரமா? சாபமா?
பெண்களின் மாதவிடாய் கால உரிமைகளை (Right of Mensuration Period) அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளாலும் தனிநபர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதையே அருவருப்பான செயலாக பலர் கருதுவது கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொடைக்கானல்: அறிந்ததும் அறியாததும் – பழனியில் இருந்து பறப்பது எப்போது?
பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல 65 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தின் போது பழனியில் இருந்து பால சமுத்திரம், பாலாறு அணை, ஐந்து வீட்டு அருவி வழியாக கொடைக்கானலில் உள்ள வில்பட்டி என்ற இடத்துக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூர பயணத்திலேயே செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதையை அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயம் செழிப்பதோடு சுற்றுலா பயணிகளுக்கும் உபயோகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. அதே சமயத்தில் குறுகிய தூரத்தில் கொடைக்கானல் சென்றடைவதால் தற்போதுள்ள வழியில் செல்ல பயணத்துக்கு ஏற்படும் எரிபொருளும் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என்பதே உண்மையாகும்.
அதிக வருமானம் தரக்கூடிய கண்வலி கிழங்கு விவசாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
மனதை கொள்ளை கொள்ளும் அழகை கொண்ட செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் மாநில மலராகும். இந்த மலரே ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகும். மிக அதிகமாக கார்த்திகை மாதத்தில் இந்த பூ மலர்வதால் இதனை கார்த்திகை பூ என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்றவற்றிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசறிவியலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் – அரசறிவியல் பேராசிரியர் வலியுறுத்தல்
இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் அரசு, அரசாங்கம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி தெரிந்து கொள்வது என்பது இன்றியமையாத ஒரு செயலாகும். மனிதனுடைய ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல். அரசறிவியல் பாடத்தின் தந்தையாக கருதக்கூடிய அரிஸ்டாட்டில் இப்பாடத்தை பற்றி கூறும் பொழுது மனிதன் அன்றாடம் இயங்குவதற்கு தேவைப்படக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல் என்று கூறினார். இன்று மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு இந்தியா வரை பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு பாடமாக அரசறிவியல் இருந்து வருகின்றது.
சமரச தீர்வில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் தகராறுகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான வழிமுறை ஏற்படுத்தப்படவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் 2019 ஆம்...
மயில்களின் இனப்பெருக்கம் விவசாயிகளுக்கு பிரச்சனையாக உள்ளதா?
தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும் இயற்கையின் கொடையாக உள்ள உணவு சங்கிலி முறைக்கும் மயில்களின் இனப்பெருக்கம் ஆபத்தாக அமையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது உடனடி தேவையாகும்.
உலகப் புகழ்பெற்ற பத்து மலை முருகன்
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து என்ற பெயர் கொண்ட ஆற்றின் அருகே பத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவிலுக்குள் பல குகைகள் உள்ளன. முருகன் கோவில் அமைக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் இந்த குகைகளில் மலேசிய பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஏமாத்த ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
நடுத்தர வர்க்கத்தில் வசிக்கும் சரளாவிற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் இந்த விளம்பரம் அவருக்கு பிடித்து போனது. விளம்பரத்தில் உள்ள கம்பெனிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் அவருக்கு உள்ள விருப்பத்தை தெரிவித்த போது விளம்பரம் செய்த கம்பெனி தங்களின் மொபைல் ஆப்பை Mobile App) டவுன்லோடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
இணையதள தாக்குதல்களை எவ்வாறு கையாள போகிறோம்?
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாக திகழ்வது இணையதள தாக்குதலும் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளும்தான். சர்வதேச அளவில் இணையதள தாக்குதலுக்கு உட்படும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக நம் நாடு இருந்து வருகின்றது.