காவல்துறையின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்
காவல் நிலையங்கள் போன்றவை இருப்பது மட்டுமல்லாமல் மாநில காவல் தலைமையகத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உளவு பிரிவு அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள். மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் பிரிவுகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) எனப்படும் மத்திய அரசின் உளவு பிரிவும் மத்திய அரசின் வேறு உளவு பிரிவுகளும் எத்தகைய அலுவலகங்களும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய் – தேவை கவனம்
உலகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் 18 லட்சம் மக்களும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் 9,16,000 மக்களும் கல்லீரல் புற்றுநோயால் 8,30,000 மக்களும் வயிறு புற்றுநோயால் 7,69,000 மக்களும் மார்பக புற்றுநோயால் 6,85,000 மக்களும் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் கடந்த 1990 ஆம் ஆண்டு 18 லட்சம் மக்கள் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 3 கோடியே 26 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நீதிமன்றங்களின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்
சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் பிரச்சனை ஏற்படும் போதும், தனி நபர்களுக்கு இடையேயும், தனி நபர்களுக்கும் அரசு இடையேயும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயும், ஒரு மாநில அரசுக்கும் மற்றொரு மாநில அரசுக்கும் இடையேயும் பிரச்சனைகள் ஏற்படும் போதும் சட்டப்படி விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அமைப்பாக அரசியலமைப்பால் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் அமைப்பு முறையை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
முதல் நாள் தேர்தல், இரண்டாவது நாள் முடிவு, மூன்றாவது நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றம் .. ஆச்சரியம் ஆனால் உண்மை
தேர்தல் களத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இந்திய வாக்காளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் முதல் நாடாளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்படும். இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் போது வாக்காளர்கள் இந்த ஆணையத்தில் புகார் செய்து நடவடிக்கைகளை அரசின் மீது மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை எந்த வகையில் வழங்கினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆணையத்தில் வாக்காளர்கள் புகார் தாக்கல் செய்யலாம்.
லஞ்சத்துக்கு எதிரான தேசிய அமைப்பான லோக்பாலில் புகார் செய்வது எப்படி?
பிரதம அமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அலுவலர் முதல் கடை நிலை ஊழியர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது. இதனைத் தவிர மத்திய அரசின் வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்ட சங்கங்கள், அறக்கட்டளைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் அமைப்புகள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளையும் வெளிநாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கு மேல் நிதி உதவி பெறும் சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உள்ளது.
நீதித்துறை, வழக்கறிஞர் சார்ந்த தேர்தல் அறிக்கை/கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
பசுமை தீர்ப்பாயம், வருமான வரி தீர்ப்பாயம் என பல தீர்ப்பாயங்கள் நீதி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இவை சம்பந்தப்பட்ட துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கருத இயலும். தீர்ப்பாயங்களின் நீதி வழங்கும் பணியை சுதந்திரமானதாக மாற்ற நாட்டில் இயங்கும் அனைத்து தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றத்தின் கீழ் தனி பிரிவாக கொண்டு வர தகுந்த சட்டத்தை அரசியல் கட்சிகள் இயற்ற வாக்குறுதி அளிப்பார்களா?
குழந்தைகள் உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், இளையோர் நீதி சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், விடுதிகள் நெறிப்படுத்துதல் சட்டம் போன்ற பல சட்டங்கள் உள்ள நிலையில் இவற்றை ஒருங்கிணைத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (Children’s Code) இயற்றப்படுமா?
வாக்காளர்களின் தேர்தல் அறிக்கை -அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
இந்திய தேசத்தின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் சாமானிய வாக்காளர்களின் தேர்தல் அறிக்கையாக சில கேள்விகள் அரசியல் களத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்கு முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு அரசியல் கட்சியினர் பதிலளிப்பார்களா? இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள கோரிக்கைகளை ஆட்சியில் அமரும் கட்சி நிறைவேற்றி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆறு மாத காலத்துக்குள் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி...
நடைபெறும் தேர்தல் திருவிழாவில் வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சியை அமைக்கும் அரசு ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள் சேவை உரிமை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா?
வாக்களிக்காவிட்டால் அரசு வேலை, வங்கிக் கடன் கிடையாது. எங்கு தெரியுமா?
1932 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் கட்டாயம் வாக்களிப்பது சட்டமாக உள்ளது. பிரேசிலில் வாக்களிக்க தவறினால் பாஸ்போர்ட், பல்கலைக்கழகங்களில் சேர்க்கை, அரசு வேலை வாய்ப்பு, வங்கியில் கடன் முதலானவற்றை பெற இயலாது.