பாண்டிச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முடியுமா? என்பதைப் போல
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்தது போல தற்போது புதுச்சேரி பிரதேசமாக உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சுமார் 280 ஆண்டுகள் பிரான்ஸ் நாடு ஆட்சி செய்தது. கடந்த 1954 நவம்பர் முதல் தேதியில் இந்த பகுதிகளை பிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு வழங்கிய போதிலும் கடந்த 1963 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு புதுச்சேரி சுதந்திரம் பெற்றது
வழக்கறிஞர் தொழிலில் அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக (மேஜிஸ்ட்ரேட்/முன்சீப்) பதவிகளில் நியமித்து வருவது சரியா?
தமிழகத்தில் இளநிலை நீதிபதியான பணியிடங்கள் பல காலியாக உள்ள நிலையில் அடுத்து வரும் இளநிலை நீதிபதி தேர்வுகளுக்கு உயர் நீதிமன்ற விதிமுறைகள் மாற்றப்பட்டு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்களா? அல்லது சட்ட பட்டம் மட்டும் படித்து எவ்வித வழக்கறிஞர் தொழில் அனுபவம் இல்லாதவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவில் நவம்பர் மாத தேர்தலுக்கு ஓராண்டராக பிரச்சாரம் ஏன்? அமெரிக்காவைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடியுரிமை பெற்று வாழ்பவர்களில் முதலிடம் பிடித்திருப்பது மெக்சிகோ நாட்டவர்கள் ஆவார்கள். இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய பரம்பரையினர் ஆவார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் தனித்தனி அரசியலமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கொடி உள்ளது.
பொதுமக்களுக்கு எதிராக சட்டங்கள் உள்ளதால்தான் எதிர்க்கிறோம் -வழக்கறிஞர் தலைவர் இரா. அய்யாவு சிறப்பு பேட்டி. ...
வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதலாவதாக, வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதிக்கப்படும் போதும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதும் நடத்தும் போராட்டங்கள். இரண்டாவதாக, பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் போது அதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டங்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பொதுமக்களின் நலனுக்கான போராட்டமாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் எங்களது போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவு உள்ளது. இன்னொன்றை சொல்ல வேண்டும் என்றால் கூட்டாட்சி நடைபெறும் இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வரும் நிலையில் சட்டத்தின் பெயரை சமஸ்கிருத மொழியில் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.
உறவுகள் மேம்பட: வெள்ளகோயில் அருள்மிகு வீரக்குமார் கோவிலில் பங்காளிகள் திருவிழா
ஓர் ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஆதி மூலமான ஓர் ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஓர் ஆணையும் சேர்த்து அடங்கும் பங்காளிகள் கூட்டத்தை ஒரே குலத்தினர் அல்லது ஒரே கூட்டத்தினர் என்று அழைக்கின்றனர்.
தமிழகத்தின் சுவிட்சர்லாந்துக்கு போவோமா?தமிழக அரசு சுற்றுலாவை மேம்படுத்துமா?
மன்னவனூரை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் கொடைக்கானலுக்கு உடுமலைப்பேட்டையில் இருந்து செல்லும் வகையில் மாற்று சாலையாகவும் மேல் மலை கிராம மக்களுக்கு இணைப்பு சாலையாகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து மன்னவனூருக்கு சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வழக்கறிஞர்களின் போராட்டம் மக்களுக்கானதா? போராட்டம் வெற்றி அடையுமா?
இந்த போராட்டத்தை வழிநடத்துவதிலும் கையாளுவதிலும் உள்ள அம்சங்களை பொறுத்தே வருங்காலத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
படித்ததில் பிடித்தது – தந்தையின் ஆசிகள்
இதைக் கேட்ட சுல்தான் மிகவும் உற்சாகம் அடைந்து, ‘உங்களுடைய கிராம்புகள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு நீங்கள் என்ன விலை கேட்கிறீர்களோ அதை தருகிறேன்’ என்றார். அப்பாவின் ஆசிகள் மகனை இங்கும் தோல்வி அடைய செய்யவில்லை. இது மறுக்கமுடியாத உண்மை. நம் பெற்றோரின் ஆசிகளில் அளவிட முடியாத சக்தி இருக்கிறது. அந்த ஆசிகளை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கணமும் நம் வேலையின் பலனைத் தருவது அந்த ஆசிகள்தான். நாம் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை எதுவெனில், நாம் நம்முடையை மூத்தவர்களை மதித்து நடப்பதுதான்
“இந்தியா” கூட்டணி சேர்ந்துள்ள அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
தெற்காசியாவில் பதட்டத்தை குறைக்கவும் அண்டை நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்தி அமைதியை நிலவச் செய்யவும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இந்திய அரசின் தலையாயப் பணிகளில் ஒன்றாகும்.
வழக்கறிஞர் சங்கங்கள் பிளவுபட்டு நிற்கலாமா? அனைத்து வழக்கறிஞர்களும் படிக்க வேண்டிய கட்டுரை. அனைத்து வழக்கறிஞர்களுக்கும் அனுப்பலாமே!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஒற்றுமையா? அல்லது வேற்றுமையா? என்பதை காலம் முடிவு செய்து விடும் என்றே கருதப்படுகிறது. கூட்டமைப்பா? கூட்டு நடவடிக்கை குழுவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல வழக்கறிஞர் சங்கங்களிடையே எழுந்துள்ள கேள்வி. ஒற்றுமையா? வேற்றுமையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதுதான் கேள்வியாகும்.