தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறுகின்றனவா? சிறப்பு செய்தி தொகுப்பு & கடந்த ஏழு நாட்கள் (11-18 ஆகஸ்ட்...
தற்போது நிலவும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாற்றம் கண்டுள்ளனவா? என யோசிக்க வைப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எவ்வாறு இருப்பினும் 2026 தமிழக சட்டமன்ற களத்தில் திமுக, அஇஅதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு தலைமைகளில் நான்கு கூட்டணிகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எந்த எந்த கூட்டணியில் எந்த எந்த கட்சிகளோ?
பிரதமர் தவறான புள்ளி விவரத்தை வழங்கினாரா? எதிர் கட்சித் தலைவருக்கு அவமரியாதையா?+ 5, சிரிக்க போனசாக 12 ஜோக்ஸ்!
இந்தியாவுடன் நல்ல நட்பில் இருந்த மாலத்தீவு தற்போது இந்தியாவை விட்டு விலகிச் சென்று சீனாவுடன் உறவு காட்டுகிறது என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று வந்தார். இதன் பின்னர் அதிரடி வியூகத்தால் 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மாலத்தீவு என்ற தகவல் சமூக ஊடங்களில் வேகமாக பரவியது. மக்களிடையே இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறந்தது என்பதை காட்டுவதற்கு இத்தகைய தகவல் பரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையில் எந்த ஒரு தீவையும் மாலத்தீவு இந்தியாவின் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கவில்லை என்பதுதான் உண்மையான சங்கதியாகும். பொய்யை உரக்கச் சொன்னால் நம்பி விடுவார்களோ?
தேவை மக்களுக்கான இரண்டாம் விடுதலைப் போர்
வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடு இல்லாமை, வேலையில்லாமை, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவதற்கான இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இதுவாகும். அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த போரில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
இன்று அழியும் வனவிலங்குகள் – பல்லின உயிர் சுழற்சி தடைபட்டால் நாளை என்ன நடக்கும்?
1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) என்பது அரசு மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். 45, 300 க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர உயிரினங்கள் அழிந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்த அமைப்பு தெரிகிறது. இந்த சிவப்பு பட்டியல் என்பது உலகின் பல்லுயிர் ஆரோக்கியத்தின் முக்கியமான குறிகாட்டியாகும். இயற்கையை பாதுகாக்க தவறினால் உயிர் வாழ தேவையான பிராணவாயு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு மனித குலத்துக்கு மிகுந்த ஆபத்தாக அமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மகத்தான சாதனை – எப்படி தெரியுமா?
ஒலிம்பிக்கில் இந்தியா மகத்தான வெற்றி பெறும் 145 கோடி மக்களின் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிற்கு கிடைக்காமல் வேறு யாருக்கு வெற்றி கிடைத்து விடும். இந்தியா உலகிலேயே நிலப்பரப்பில் ஐந்தாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு. இந்தியாவுக்கு வல்லரசு நாடுகள் வரிசையில் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று வீர வசனம் பேசினால் மட்டும் போதாது.
கடந்த ஏழு நாட்கள்: தமிழக ஆளுநர் எவ்வாறு பதவியில் தொடர்கிறார்? அ.இ.அ.தி.மு.க- ல் பிளவு ஏற்படுமா? உள்ளிட்ட செய்திகளும்...
தமிழக ஆளுநரின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவரால் ஆளுநரின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவிட்டதாகவோ அல்லது ஆளுநரை மீண்டும் நியமித்து உத்தரவிட்டதாகவோ அதிகார தகவல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து பதவி வகித்து வருவது எப்படி? என்று சிலர் வினா எழுப்பி உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா? அரசியல் தந்திரமா?
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களை போன்ற சிறிய பகுதிகளை கூட மாநிலங்களாக மாற்றியமைப்பதன் மூலம் மாநிலங்கள் நகராட்சி போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் மாநிலங்களுக்கான சுயாட்சி, மாநிலங்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்கு உள்ளாகும் இந்தியா என்ற தேசம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையால் கட்டப்பட்டுள்ளது.
மீண்டும் தேவை அறிவொளி இயக்கம் படித்தவர்களுக்காக.
தற்போது எளிதாக ஒருவரை ஒரு மணி நேரம் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது நிபுணத்துவத்தையும் அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது அவசியமாக உள்ள நிலையில் வாசிப்பு திறன் குறையும்போது தனி மனிதர்களின் சமூகத்தின் வளர்ச்சியும் குறையும் என்பதை மறுக்க இயலாது இத்தகைய சூழலில் வாசிப்பு திறனை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் மேற்கொள்வது அவசியமான தருணம் இதுவாகும். வாசிப்பை வளர்ப்போம்! நூலகங்களை அதிகப்படுத்துவோம்! வளர்ச்சியை உறுதி செய்வோம்!
சந்தன மரமாக வாழ விரும்புகிறீர்களா? கரிக்கட்டையாக வாழ விரும்புகிறீர்களா? முடிவு உங்கள் கையில்
அறியாமையை அகற்ற நாம் வாழும் ஒவ்வொரு நாளிலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உள்ள அர்த்தங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது வாழ்க்கையை கரிக்கட்டையாக அல்லாமல் சந்தன மரமாக வாழ்வதற்கான முயற்சியாகும். வாழ்க்கையை சந்தன மரமாக வாழ்வதா? அல்லது கரிக்கட்டையாக வாழ்ந்து விட்டு செல்வதா? என்பது என்பது ஒவ்வொருவரின் கைகளில் தான் இருக்கிறது.
இந்தியா வெளியே – சீனா, பாகிஸ்தான் உள்ளே
தெற்கு ஆசியாவில் உள்ள வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்தும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறி இருப்பதும் இந்தியாவுக்கு கவலை தரக்கூடிய அம்சமாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்தூக்கி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறினால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த இயலாது.