அரசியலமைப்பு கூறும் மக்களவைத் துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கலாமா? எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து ஏன்...
இந்திய அரசியலமைப்பின் 93 ஆம் கோட்பாடு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஒரு தலைவரும் ஒரு துணை தலைவரும் (அதாவது சபாநாயகரும் துணை சபாநாயகரும்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவது வழக்கமான மரபாக இருந்து வரும் நிலையில் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருப்பது சரியானது அல்ல.
கல்லூரிகள் இரு மொழி புலமையை மாணவர்களுக்கு பலப்படுத்த வேண்டும்
தமிழக சட்டமன்றத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய சட்ட அமைச்சர் தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சட்ட தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்...
வலை பக்கத்தில் படித்ததில் பிடித்து புல்லின் நிறம் நீலம் என நீதிமான் தீர்ப்பு வழங்கியது சரியா?
முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள், ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது மாயமான நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனமும் – மக்களின் எதிர்பார்ப்புகளும்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதும் மனித உரிமைகள் தொடர்பான புகார்களை விரைவில் விசாரித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவே புகார்களை சமர்ப்பிக்கவும் சமர்ப்பிக்கப்பட்ட புகார்களின் நிலையை அறியவும் தேவையான வசதிகளை புதிய தலைவர் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
சீரழிவு கருவிகளாக துல்லிய தாக்குதல்கள் நடத்தும் போதை பொருட்கள், பாலியல் அத்துமீறல்கள், இணைய அடிமைத்தனம்
போதை பொருட்கள், பாலியல் அத்துமீறல்கள், இணைய அடிமைத்தனம் ஆகிய சமுதாய சீரழிவு கருவிகளை முற்றிலும் தடுப்பதும் மூலத்தை கண்டுபிடித்து வேரறுப்பதும் தற்போதைய அவசிய தேவையாகும். இதனை செய்ய தவறினால் நாளைய தேசம் சீரழிவுக்கு உள்ளாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது – வெற்றியைத் தரும் நேர்மறை அணுகுமுறை
ஒவ்வொருவரிடமும் கணக்கில் அடங்காத திறமைகள் இருக்கின்றன. அந்த திறமைகளை, வெளிப்படுத்துவதற்கு நேர்மறையான மனோபாவமும், அன்பான நோக்கமும் தேவைப் படுகின்றன. நேர்மறையான அணுகுமுறை இருக்கும் போது, எல்லாவிதமான கடினமான சூழ்நிலைகளையும் இலகுவாகத் தீர்த்து விடலாம்.
அரிய விழாவான முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது எப்படி? – விரிவான தகவல்கள்
இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் முருக வழிபாடு சிறந்து விளங்கும் நிலையில் உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் இந்து சமய துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 வரும் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற உள்ளது.
பெங்களூர் – மதுரை வந்தே பாரத் ரயிலின் இயக்கம் – மதுரை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்களின்...
மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையில் நேரடியாக இல்லாமல் சுற்று வழியில் திருச்சி வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் மதுரை திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்கும் பயணிகள் 100 கிலோ மீட்டர் தூரத்தை கூடுதலாக பயணிக்க வேண்டும். இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு கூடுதல் நேரமும் பணமும் வீணாகிறது.
தங்கள் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்
வாழ்க்கையின் இலக்குகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். ஒருவருக்கு மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். மற்றொருவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக தினமும் வாழ வேண்டும் என்பது எண்ணமாக இருக்கலாம். இன்னொருவருக்கு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம். மற்றொருவருக்கு ஆன்மீக பணியில் ஈடுபட வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம்.
தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் மறு ஜென்மம் பெறுமா?
மூன்று ஆண்டுகள் பதவியில் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 13 மாதங்களே பணியாற்றி உள்ளார்கள். எஞ்சிய 23 மாதங்கள் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அவர்களால் பணியாற்ற இயலவில்லை. அவர்களது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த வகையில் கடந்த 27 மாதங்களாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தகைய போக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் மிகுந்த ஆபத்தானதாகும்.