Thursday, April 3, 2025
spot_img

தமிழக முதல்வராக தற்போதைய நிலையில் மக்களின் விருப்பத்தேர்வு யாருக்கு உள்ளது? கருத்துக்கணிப்பா? கருத்து திணிப்பா?

தமிழகத்தில் முதல்வர் பதவிக்கு விரும்பத்தக்கவர் யார்? என்ற கேள்வியை பிரதானமாக வைத்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் (opinion poll) முடிவுகளை ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதில் முதல்வர் பதவிக்கு மு. க. ஸ்டாலின் ஸ்டாலினை 27 சதவீதம் பேர் ஆதரிக்கிறார்கள் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்   விஜய் 18 சதவீத  ஆதரவை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் என்றும் எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 10 சதவீதம் ஆதரவுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்பது சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

இந்த கருத்துக் கணிப்பில் விஜய்க்கு 18 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து மக்களின் விரும்பத்தக்க முதல்வர் தேர்வாக அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்ற கருத்து வியப்புக்குரியதாக உள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் இத்தகைய புள்ளி விவரம் சரியானதுதானா? என்பதை யோசிக்க வைக்கிறது. ஏனெனில், தமிழகத்தில் கருத்துக் கணிப்பு நடத்துவது என்றால் மொத்த மக்களையும் கருத்து கேட்டு முடிவை வெளியிடுவது இயலாத காரியம். அதே சமயத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகளை தேர்வு செய்து அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் கருத்துக்களை கேட்டு ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியும். நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அவ்வாறு நடத்தப்பட்டதா? என்பது நமக்கு தெரியாது. அதே சமயத்தில் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது போன்ற சங்கதிகளும் தெரியவில்லை.

லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.

தற்போது கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களிடம் கருத்துக்களை திணிப்பதற்கும் வியூக வகுப்பாளர்கள் (strategy framers) அரசியல் கட்சிகளுக்கு முழு நேர பணியாக செய்து வருகிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. கருத்துக் கணிப்புகள் நியாயமாகவும் நேர்மையாகவும் (free and fair) தேர்தல் நடத்தும் அமைப்பை போல இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபரை முன்னிலைப்படுத்த (promote) வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் வியூக வகுப்பாளர்களின் செயல்பாட்டுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு நிறுவனங்கள் இருந்துவிடக் கூடாது. 

தற்போதைய தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் (Tamil Nadu Lokayuktha) உறுப்பினரும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும் சுமார் 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய டாக்டர் வீ. ராமராஜ் (Dr V. Ramaraj அவர்களால் கருத்துக்கணிப்பு குறித்து கடந்த 2007 ஜூன் 6 அன்று தினமணி நாளிதழில் எழுதப்பட்ட “கருத்துக்கணிப்பு மந்திரங்கள்” என்ற கட்டுரை இங்கு கவனிக்கத்தக்கதாகும். அதனை தாங்கள் வாசிப்பது கருத்துக்கணிப்பு குறித்த ஒரு பார்வையை தங்களுக்கு ஏற்படுத்தும். இதனையும் வாசியுங்கள்! இதன் மூலம் கருத்துக்கணிப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்!

நன்றி: தினமணி

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கருத்துக்கணிப்பு எப்போது நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுகிறதோ அப்போதுதான் அந்த கருத்துக்கணிப்பு மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles