Advertisement

21 நவம்பர் 2024 – தாம்பரம் சற்குரு சபையின் 78 ஆம் ஆண்டு குருபூஜை – நமது “பூங்கா இதழுக்கு” புதிய ஆசிரியர் பொறுப்பேற்பு – உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா?

நமது “பூங்கா இதழுக்கு” புதிய ஆசிரியர் பொறுப்பேற்பு

கடந்த 1959 ஆம் ஆண்டில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள வாகரை கிராமத்தில் பிறந்த நா. சின்னச்சாமி அவர்கள் அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் வருவாய் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று பெற்றுள்ளார். மக்களுக்கு வரும் வகையில் சிந்தனையை தூண்டிவிடும் மிகச்சிறந்த பேச்சாளர். எழுத்து, கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமும் சமூக அர்ப்பணிப்பும் கொண்டவர். பூங்கா இதழ் இணையதள தமிழ் பதிப்பின் புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள நா. சின்னச்சாமி அவர்களுக்கு அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துக்கள்!
21 நவம்பர் 2024 – தாம்பரம் சற்குரு சபையின் 78 ஆம் ஆண்டு குருபூஜை 
ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அறிவே சற்குரு, சற்குருவே கடவுள், பகுத்தறிவுள்ளவர் தத்துவஞானி ஆவார் என்பவை உள்ளிட்ட கோட்பாடுகளையும் ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்திய சற்குரு சச்சிதானந்தத்தின் 78 ஆம் ஆண்டு குருபூஜை  சென்னை -தாம்பரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்   கேம் ரோடு என்ற இடத்தில் உள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் தலைமையகத்தில் வரும் 21 நவம்பர் 2024 அன்று நடைபெற உள்ளது.

1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பட்டி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலுக்கு திடீரென வந்த சுவாமிகளின் முகவசீகரம் கணக்கன்பட்டி மக்களை கவர்ந்தது. அவர் எங்கு பிறந்தார்? எங்கிருந்து வந்தார்? என்பது போன்ற அவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் அவர்களுக்கு  தெரியவில்லை.அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டியதாக கணக்கன்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றியதாக சாதுக்கள் தெரிவிக்கின்றனர். மீண்டும் தமிழகத்துக்கு ’ வந்து, கணக்கன்பட்டியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை கணக்கன்பட்டியில் நிறுவினர்.

1945-ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநரின் முகாம் அலுவலரான தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு குருபரன் விதேக முக்தி அடைந்தார்கள். அவரை அடக்கம் செய்த இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் வார குரு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை ஒன்றில் ஆண்டு குரு பூஜை நடத்தப்படுகிறது.

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியில் தோன்றிய அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபைக்கு தலைமையகம் சென்னையில் இருந்த போதிலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கிளை சபைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு சபையிலும் சச்சிதானந்தம் என்று அழைக்கப்படும் குருநாதனின் கொள்கைகளை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் சாதுக்கள் பணியாற்றி வருகிறார்கள்.  ஒவ்வொரு சபைக்கும் நிர்வாக குழுவும் அன்பர்களும் உள்ளார்கள்.

மக்களின் நம்பிக்கை எங்கு உள்ளதோ அந்த இடத்தை தேடி ஆன்மீகப் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் சச்சிதானந்த    குருகுலம் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா? 

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.
 
ஆனால், அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன். நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..

மகனோ, எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.

வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்!

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்? இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles