Thursday, April 3, 2025
spot_img

நவகிரக கோவில்கள்: சுயம்பு லிங்கமாக தோன்றி ஆலங்குடியில் காட்சி தரும் குரு பகவான்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிறப்பு மிக்க நவகிரக கோவில்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நமது பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் கோவில்களை பற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் நவகிரக கோவில்களில் முக்கியமானதாக விளங்கும் ஆலங்குடி குரு பகவான் கோவில் பற்றி இங்கு பார்க்க உள்ளோம். இந்தக் கட்டுரையின் இறுதியில் ஏற்கனவே வெளியான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் கோவில்கள் குறித்த படைப்புகளின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

குருதலம்

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிராமத்தில் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் குருதலமாக போற்றப்படுகிறது. இங்கு பார்க்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை குரு பகவான் உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் இக்கோவில் அமைந்துள்ள கிராமத்திற்கு ஆலங்குடி என பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோயில் தமிழ்நாட்டின் ஒன்பது நவக்கிரகக் கோயில்களில் ஒன்றாகும்,

அமைவிடம் 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரதலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மன்னார்குடி பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும், நீடாமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

தல வரலாறு 

சோழவள நாட்டில் சோழர்களால் கட்டப்பட்ட உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98 – வது  சிவத்தலமாகும். இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது.

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரதலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

அம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலத்தில் அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமணமங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது.

இத்திருக்கோயில் முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க மறுத்த அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது. விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. 

சன்னதிகள்

ஆலங்குடி கிராமத்தின் நடுவில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் இந்த தளம் காட்சியளிக்கிறது. குருபகவான் தட்சிணாமூர்த்தி, ஆபத்சகாயேஸ்வரஸ்வாமி, சுப்பிரமணியர், கலங்காமற் காத்த விநாயகர், ஏலவார்குழலி அம்மன், சனீஸ்வரபகவான், ஆக்ஞா கணபதி, நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ஆகியோர் சன்னதிகள் இங்கு அமைய பெற்றுள்ளன.

தரிசனம்

சுயம்பு லிங்கமாக தோன்றிய அருள்மிகு தட்சிணாமூர்த்தி குருவின் அம்சமாக ஆலங்குடியில் தோன்றி உள்ளதாக பார்க்கப்படுகிறது. சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக விளங்குகிறது. குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. 

இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தின் கிழக்கே அமைந்துள்ள பூளைவள ஆற்றில் இருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து ஐப்பசி மாதத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும். குரு பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர் திருவிழா, சித்திரை பௌர்ணமி விழா ஆகியவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஆலங்குடியில் அமைந்துள்ள குரு பகவானின் சன்னதியில் வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

நவகிரக அதிபதிகளில் முதன்மையான சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு கோவில்கள் – அதில் ஒன்று தமிழகத்தில்! முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/suriyanar-kovil-sun-temple-tamilnadu

சந்திர பகவானுக்குரிய பரிகாரதலமான கைலாசநாதர் திருக்கோயில் முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/thingalur-chandran-temple-tamil-nadu

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles