பிரச்சனைகள் இல்லாத, போட்டிகள் இல்லாத தொழில் இல்லை. 30 வருடத்திற்கு முன்பு நிட்டிங் மிஷின் (பின்னலாடை உற்பத்தி இயந்திரம்)போடலாம் என்று இரண்டு மூன்று பேரிடம் கேட்டேன். நாங்களே வந்த விலைக்கு எடைக்கு மிஷின்களை விற்கலாம் என்று இருக்கிறோம் வேண்டுமானால் சொல்லுங்கள், பகுதி விலைக்கு தருகிறோம் என்று கூறினார்கள். சரி வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ஆப்செட் பிரிண்டிங் மெஷின் போடலாம் என்று இரண்டு மூன்று பேரிடம் கேட்டேன். இனி எல்லாம் கம்ப்யூட்டர் மயம்தான் இதற்கெல்லாம் எதிர்காலமே கிடையாது, நாங்களே விட்டுட்டு வேலைக்கு போலாம்னு இருக்கோம், அத்தனை கஷ்டம், ஆர்டர்களே கிடைப்பதில்லை என்று கூறினார்கள். சரி வேண்டாம் என்று விட்டுவிட்டோம். எலக்ட்ரிக் கடை, பெயிண்ட், இரும்பு கடை போடலாம் என்று இரண்டு மூன்று பேரிடம் கேட்டோம். கடன் வாங்கிட்டு அப்படியே போயிடறாங்க, கடன் கொடுக்கலைன்னா விற்க முடியவில்லை, நாமதான் சொத்த வித்து வாங்கின பொருளுக்கான கடனை அடைக்க வேண்டும் போல இருக்குது… இந்த பொழப்புக்கு கட்டட மேஸ்திரி வேலைக்கு போயிடலாம்னு இருக்குதுன்னு சொன்னாங்க. வம்பை பாரு வேண்டாம்னு விட்டுவிட்டோம். ஆனால் அதற்குப் பின்பு ஆரம்பித்த நிட்டிங் மிஷின், ஆப்செட் பிரிண்டிங், பெயிண்ட்,இரும்பு, எலக்ட்ரிக் கடைகள் எல்லாமே மிக சிறப்பாக பெரிதாக வளர்ந்துள்ளது. ஆக தோல்வியுற்றவர்களிடம் போய் கேட்டால் அப்படித்தான் சொல்வார்கள். வெற்றியடைந்தவர்களை பார்த்தால்தான் அதில் உள்ள பிரகாசமான வாய்ப்புகள் தெரியும். மேலும் ஒரே தொழிலில் இருப்பவர்கள் இன்னொருவர் போட்டியாக வருவதற்கு விரும்ப மாட்டார்கள். அவர்களிடம் போய் ஆலோசனை கேட்பதும் தவறு. டி மார்ட், ஜியோ ஸ்மார்ட் கடைகள் வந்துவிட்டது, இனி மளிகைக்கடைகள் எல்லாம் அவ்வளவுதான் ஓடாது என்று கூறினார்கள். ஆனால் உள்பக்கங்களில் இருக்கும் சிறு சிறு கடைகளில் இன்னும் வியாபாரம் அருமையாக நடந்து கொண்டுதான் உள்ளன. மிகப்பெரிய பிரமாண்டமான துணிக்கடைகள், நகைக்கடைகள் இருக்கும் இடங்களுக்கு அருகில்தான் சிறிய கடைகள் மிக அருமையாக நிம்மதியாக வியாபாரம் செய்து கொண்டு உள்ளார்கள். அந்தக் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த கடைக்கு வர மாட்டார்கள், இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த கடைக்கு செல்ல மாட்டார்கள். அப்படியே சென்றாலும் அது மிகச்சிறிய அளவில்தான் தற்காலிகமாகத்தான் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத, போட்டிகள் இல்லாத தொழில் என்று எதுவும் இல்லை. போட்டி இல்லாத தொழில் என்று பார்த்தால் மயான வேலைதான் இருக்கும். எல்லோரும் எல்லா இடங்களிலும் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரிடமும் தனி திறமையும் குணாதிசயங்களும் இருக்கும். அதை பொறுத்தே அவர்களின் வெற்றி தோல்விகள் அமையும். எப்பொழுதுமே இனி எல்லாம் தொழில் அவ்வளவுதான்…. முடிந்துவிட்டது என்பது போல வரும் எதிர்மறை விமர்சனங்களை, எதிர்மறை கருத்துக்களை காதில் வாங்க கூடாது. முயற்சி செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக மிக உச்சத்துக்கு போக முடியாவிட்டாலும் நிம்மதியான வருமானம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்.-அன்புடன் க. நடராஜன் |
வாய்ப்பு விலகும் போது கவலைபடாதே! ஒரு ஐடி நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தார். ஒரு சின்ன இண்டர்வியூ: என்னப்பா, தினமும் ஒழுங்கா வேலைக்கு வருவியா? முன் அனுபவம் இருக்கா? அதெல்லாம் கரெக்டா வந்துடுவேன் சார். முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் நல்லா வேலை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு சார். கடைசியில் அவரிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றார் துடைக்க வந்தவர்.’கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? அட ச்சே!’ என்று அவரை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் 1000 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 1000 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டான். இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார்! வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உங்களுக்காக காத்திருக்கும். |
மனித மூளையில் ‘சிப்’ பொருத்தினால் என்ன நடக்கும்?https://theconsumerpark.com/brain-chip