காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.
ஆனால் ஒரு நிபந்தனை. “நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார். சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்ட தெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”
“புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்…!”.
நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here) |
“பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது”என்றார் ஞானி
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத் திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? ” சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்க வில்லை”.
இப்போது ஞானி சொன்னார், “இது தான் திருமணம்…!”.
——————————————————————————————————
மறுபுறத்தையும் பார்க்க வேண்டும் என்பதை காட்டும் ஒரு நிமிடக் கதை
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு. ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்த குருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு. ஆனா, அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு.
சரின்னு அடுத்த இரண்டாவது மரத்துக்கிட்டே போய் அந்தக்குருவி கேட்டுச்சு.. இடம்தானே தாராளமா இருந்துக்கோனு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம். ஒரே மாசம்தான் ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது. ஆனால், குருவிக்கு இடம் கொடுத்த இரண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
முதல் ஆலமரத்தைப் பார்த்த குருவி அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்னு. எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது. ஆனால்,
“வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா. என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன். குருவியே, நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது”.
இப்படிதான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை. நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு. நம் மகிழ்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு. மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும். மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும் சீர் செய்யும் பெற்றோர்களும் சகோதரர்களும் கூட தியாகிகள்தான். சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும் ஆனால், கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: காதலுக்கும் திருமணத்துக்கும் வித்தியாசத்தை உணராமல் காதலை ஏற்றுக் கொள்வது தவறாகும். இருபுறமும் தெரிந்து கொள்ளாமல் எந்த கருத்தையும் மேற்கொள்ளக்கூடாது.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!