பொதுவாக குடும்பம் என்ற ஒன்றே பெண்ணை மையமாக வைத்து தான் இயங்கி கொண்டு இருக்கிறது. எந்த வீட்டில் பெண் சந்தோசமாக இல்லையோ அந்த வீட்டில் நிம்மதி என்பது இருக்கவே இருக்காது. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை ஆணின் விருப்பத்தை விட, பெண்ணின் விருப்பம் தான் மிக முக்கியனானது. விருப்பம் இல்லாத பெண்ணுக்கு அன்பின் உருவமே கணவனாக அமைந்தாலும் குடும்பத்தில் அமைதி இருக்காது. ஆனால், ஒரு அசுரனே கணவனாக அமைந்தாலும் விருப்பம் உடைய #பெண் அமைந்தால் அந்த குடும்பம் இயங்கி கொண்டு இருக்கும்.
ஒரு ஆணுக்கு காதல் என்பது கண் வழியாகவும், பெண்ணுக்கு காதல் என்பது செவி வழியாகவும் நுழைகிறது. அதாவது முதல் பிடிப்பு ஆணுக்கு தோற்றத்தை வைத்தும், பெண்ணுக்கு பேச்சை வைத்தும் ஏற்படுகிறது. எந்த ஒரு பெண்ணால் கவிதைகளை ரசிக்க முடிகிறதோ… காதல் வசனங்களை ரசிக்க முடிகிறதோ…பாடல்களை ரசிக்க முடிகிறதோ… அவளுடன் குடும்பம் நடத்துவது கடினமான ஒன்று. மேலும் அவள் ஒரு ஏமாளியும் கூட….எப்படி என்றால்….கவிதைக்கு அழகே பொய் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த சின்ன சின்ன வார்த்தைகளில் மகிழ்ச்சி கொள்ளும் பெண்ணால், சின்ன சின்ன வார்த்தை கோபம் பேச்சுக்களையும் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது.
மேலும் ” நீ ரொம்ப அழகா இருக்க…. நீ சிரிச்சா அப்படி இருக்கு. உன் உடை அப்படி இருக்கு.” இது போன்ற வார்த்தைகளில் காதல் என்று நம்பி ஏமாறும் பெண்களே அதிகம். இப்போதுலாம் முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நிறைய பெண்கள் நிறைய போட்டோ போடுறாங்க. நிறைய நண்பர்களை இணைகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் நீங்க அழகா இருக்கீங்க என்று வரும் வார்த்தைகளை ரசிக்கத்தான். ஒன்னு அந்த பெண் திருமணம் ஆகாதவராக அல்லது காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு ஆண் தன்னை ரசிப்பதை பெண் விரும்புகிறாள். திருமணமான பெண்கள் போட்டோ போடுவதுக்கு காரணம் கணவர் சொல்ல தவறிய வார்த்தைகளை இணையத்தில் எதிர்பார்த்து தான்….ஒரு பெண்ணை ” அதை பண்ணாதே இதை பண்ணாத நீ இது தான் பண்ணனும் அது தான் பண்ணனும் இப்படி தான் இருக்கணும்” னு சொல்ற ஆண்களை அடிமைப்படுத்துவதாக பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் உங்களை அடிமை படுத்துபவர்கள் யார் தெரியுமா…உங்கள் அழகை வர்ணிப்பவர்கள்தான். ஒரு பெண்ணை அறிவு திறமை என வளர விடாமல் அவள் கவனத்தை அழகிலயே கொண்டு செல்லும் அடிமைத்தனம். ஆணின் சுய நலம்.
ஒரு பெண்ணின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆண் அவள் திறமைகளை பற்றி மட்டுமே அதிகம் பேசுவான். உனக்கு இது நல்லா வரும். இதை மாத்திக்கோ. அதை படி. இதை படி. முயற்சி பண்ணு. உன்னால் முடியும் போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே தருவான். ஒரு பெண்ணின் அழகை ஒருவன் வர்ணிக்கிறான். கவிதை காதல் வசனம் பேசுகிறான் என்றால் நிச்சயம் அது அவளை அடையவோ அல்லது அவள் பணத்தை அடையவோ தான் இருக்கும்.
காதலிக்கும்போது இருந்ததுபோலவே கல்யாணத்துக்கு அப்புறமும் பலர் இருப்பது இல்லை. காதல் திருமணம் செய்த பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். மேலும், அழகை வைத்து மட்டும் ஒரு ஆணின் உண்மையான அன்பை பெற்று விட முடியாது. வயது இருக்கும் காலத்தில் ஓகோ என்று கொடி கட்டி பறந்தவர்கள் வயதான காலத்தில் தனிமையில் வாடுகிறார்கள்.
ஆனால், திறமையான பொண்ணுங்க ஆரம்பம் முதலே அன்புக்கு மரியாதை செய்வார்கள். உண்மையான அன்பு வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் உங்கள் அழகை எப்போதும் முன் நிறுத்தாதீர்கள். கவிதை களுக்கும் காதல் வசனங்களுக்கும் மயங்காதீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு ஓடி கொண்டே இருங்கள். ஒரு பெண்ணின் திறமையை மதிப்பவனால் நிச்சயம் அவளை உண்மையாக நேசிக்கவும் முடியும். (திரு செழியன் குமாரசாமி அவர்களது வலைதள பதிவிலிருந்து)
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அன்பு என்பது இருபுறமும் இருக்க வேண்டும் ஏமாற்ற வேண்டும் என்ன மனிதர் இல்லாமல் இருக்க வேண்டும்.