Advertisement

தமிழக நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – விரிவான விவரங்களுடன்.

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட 17 வகையான பணிகளுக்கு 2,329 நபர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த 28 ஆம் தேதி இணையதளத்தில் விளம்பரம் வெளியாகி உள்ளது.

தன்னாட்சி பெற்ற தேர்வு குழு

இந்த காலி பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள  ஆள் சேர்ப்பு பிரிவு பணியாளர்களை தேர்வு செய்கிறது.  இந்த குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.  இந்த பணியாளர்   தேர்வுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி தொடர்பு இல்லை.  தேர்வு செய்யப்படுபவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் நேரடி நிர்வாக கட்டுப்பாட்டில் பணியாற்ற வேண்டும்.

விரிவான விவரங்கள்

விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள “நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் – அறிவிக்கை எண் 75 முதல் 171 வரை, நாள் 28 -04- 2024 என்ற அறிவிக்கையை பதிவிறக்கம் (Common Instructions to the candidates- (28th April 2024 – pdf file) செய்து முழுமையாக படித்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தேர்வுகள்இட ஒதுக்கீடு

இந்த ஆட்சேர்ப்பில் தேவைப்படும் எழுத்துத் தேர்வு, செயல்முறை தேர்வு போன்றவை நடத்தப்படும். தமிழ்நாடு   அரசில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். 

இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டி உள்ளதால் இணையதளத்தின் வேகம் குறைவாக உள்ளது (server issues) என்பது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பம் செய்யுங்கள்.  வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles