Advertisement

தமிழகத்தில் உதயமாக உள்ள சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையம்

கடந்த ஜூலை முதலாம் தேதி அன்று அமைதிக்கான உத்திகள் அமைப்பின் இணையதள தொடக்க விழா நடைபெற்றது.  “எங்கள் நோக்கம் ஒரு புதுமையான – உன்னத உத்திகள் மூலம் அமைதி கலாச்சாரத்தை உருவாக்குவதாகும். அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் வியூகம் வகுத்து அதற்கேற்ப செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வெளியீடு மற்றும் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை உருவாக்குதல், ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூகப் பொறியியலை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் நாம் ஒன்றாக சேர்ந்து வளருவோம்” என இந்த இணையதளத்தின் முகப்பு பக்கம் தெரிவிக்கிறது.

அமைதிக்கான உத்திகள்

வெளியீடு மற்றும் ஊடகப்பிரிவு, மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரிவு, சமூக பொறியியல் பிரிவு என மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அமைதிக்கான உத்திகள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் இணையதள தரவுகள் மற்றும் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம்   தெரிய வரும் சங்கதிகளின் பிரதிபலிப்பே இந்த கட்டுரையாகும்.

வெளியீடு மற்றும் ஊடகப்பிரிவு

வெளியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சார்பாக நுகர்வோர் பூங்கா தமிழ் இணைய இதழும் (Consumer Park – Tamil), பூங்கா இதழ் தமிழ் இணைய இதழும் (News Park – Tamil),  ஆராய்ச்சி பூங்கா ஆங்கில இணைய இதழும் (Research Park – English),   வெளியாகி கொண்டு இருப்பதாகவும் விரைவில் ஆங்கிலத்தில் நுகர்வோர் பூங்கா இணைய இதழையும் (Consumer Park – English),  செய்தி பூங்கா இணைய இதழையும் (News Park – English),   அச்சு வடிவத்தில் “நுகர்வோர் பூங்கா, பூங்கா இதழ்” இதழ்களையும் (Print Media) வெளியிட உள்ளதாகவும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு மற்றும் ஊடகப் பிரிவின் சார்பாக மதிப்பு மிக்க புத்தகங்களை வெளியிடுதல் (Book Publishing), ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை வெளியிடுதல் (Research Thesis Publishing) மற்றும் சமூக ஊடகங்களுக்கான உள்ளடக்கங்களை எழுதுதல் ஆகியவற்றை செய்ய தொடங்கியுள்ளதாகவும் விரைவில் ஆவண படங்கள் (Documentary Films), பண்பலை வானொலி (FM Radio), தொலைக்காட்சி (Television) நிகழ்ச்சி தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரிவு

ஒரு குறிப்பிட்ட செயல்முறை மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்குதல் (Image Building), கட்டமைக்கப்பட்ட செயல்முறை மூலம் வளர்ச்சிக்கான வியூகங்களை வகுத்தல் (Strategy Framing) மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான இணையதளங்களை உருவாக்குதல் (Websites Development) ஆகியன இந்த பிரிவின் பணிகளாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்குகள், பட்டறைகள், மாநாடுகள் மற்றும் ஒத்த நிகழ்வுகளை நடத்துதல், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்காக புத்தகத் திருவிழாக்கள், கண்காட்சிகள் மற்றும் பேரணிகளை நடத்துதல், திட்டமிடல் -செயல்படுத்தலுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குதல் ஆகியனவும் இந்த பிரிவின் பணிகளாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, சட்டம், சிவில், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துதல், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல், திட்டமிடல்  மற்றும் திட்ட மேம்பாடு ஆகியவற்றின் சேவை வழங்குதல் (Service for Project Planning and Project Development) ஆகியவை தங்களது பணிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தனிநபர்களின் நல்வாழ்வுக்கான சமூக திட்டங்கள், மாணவர்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவற்றில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரிவு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொறியியல் பிரிவு

தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க டிஜிட்டல் மற்றும் தனித்துவமான நூலகங்களை உருவாக்குதல், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கல்வி நிறுவனங்களை நிறுவுதல், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கல்வி சேவைகளை வழங்குதல், சமூக நல முன்முயற்சியின் சேவையை வழங்குதல், சமூக சேவை நிதிகளைப் பெற்று சேவைத் திட்டங்களை நிர்வகித்தல், சங்கங்கள், அறக்கட்டளைகள் போன்ற சட்டப்பூர்வ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் ஆகியன சமூக பொறியியல் பிரிவின் பணிகளாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்களின் நல்வாழ்வு, நாகரிகத்தின் முன்னேற்றம், தனிநபர்களிடையே ஒற்றுமை ஆகியவற்றில் சமூக பொறியியல் பிரிவு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி  மையத்தை விரைவில் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையம்

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு. “அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சமூக பொறியியல் பிரிவின் சார்பில் சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தை (International Institute of Peace Strategies) விரைவில் தமிழகத்தில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். தொடக்கத்தில் இந்த மையம் டிஜிட்டல் முறையிலானதாக அமையும். அமைதி கலாச்சாரத்துக்கான கல்வியை போதித்தல் மற்றும் பயிற்சி அளித்தல், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக குறுகிய கால படிப்புகளை நடத்துதல் ஆகியன இந்த கல்வி மையத்தின் முதல் கட்ட பணிகளாக இருக்கும். சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி மையத்தில் கீழ்க்கண்ட துறைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது”.

01.  அமைதி உத்திகளுக்கான கல்வி மற்றும் ஆய்வுத்துறை

02.  வாக்காளரியல் மற்றும் அமைதி கலாச்சார துறை

03.  விண்வெளி அமைதி கலாச்சார துறை

04. உள்நாட்டு மோதல்கள், போர் & குற்றங்களால் பாதிக்கப்பட்டோரியல் மற்றும் அமைதி கலாச்சார துறை

05. சர்வதேச உறவுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைதி கலாச்சார துறை

06.  அரசியல் அறிவியல், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அமைதி கலாச்சார துறை

07. பொருளாதார வளர்ச்சி, நுகர்வோர் உரிமைகள் மற்றும் அமைதி கலாச்சார துறை

08.  சமூக, பண்பாட்டு உரிமைகள் மற்றும் அமைதி கலாச்சார துறை

09. நல்லாட்சி, ஊழல் எதிர்ப்பு மற்றும் அமைதி கலாச்சார துறை

10. ஊடகவியல் மற்றும் அமைதி கலாச்சார துறை

11. மனித உரிமைகள் மற்றும் அமைதி கலாச்சார துறை

12. குழந்தை உரிமைகள் மற்றும் அமைதி கலாச்சார துறை

சர்வதேச அமைதிக்கான உத்திகளை நிறுவுதல், கற்றல் மற்றும் அறிவு பெறுதலை ஊக்குவித்தல், சமூக சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு தகுந்த ஒத்துழைப்பை பொதுமக்களிடமிருந்து அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

முழுமையான விவரங்களுக்கு: 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles