ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் மொத்த மக்கள் தொகை 820 கோடி. இந்த அறிக்கையின்படி தற்போது இந்திய மக்கள் தொகை 146.30 கோடியாகும். பல ஆண்டுகளாக உலகில் மிகுந்த மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்திய சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது.
உலகின் மொத்த நிலப்பரப்பு 510,072,000 சதுர மைல்கள் ஆகும். உலக நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம் மட்டுமே (3,163,751 சதுர மைல்கள்). ஆனால், உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதம் இந்தியாவாகும். உலக மக்கள் தொகையில் சுமார் 5 – ல் ஒருவர் இந்தியர் ஆவார்.
பரப்பளவில் பெரிய நாடுகளும் மக்கள் தொகையும்
இடம் | நாடு | பரப்பளவு சதுர மைல்களில்(உலக நிலப்பரப்பில் சதவீதம்) | மக்கள் தொகை |
01 | ரஷ்யா | 17,098,246 (12.6%) | 14.40 கோடி |
02 | கனடா | 9,984,670 (7.07%) | 40.10 கோடி |
03 | சைனா | 9,596,960 (7.22%) | 141.6 கோடி |
04 | அமெரிக்கா (USA) | 9,525,067 (7.36%) | 34.7 கோடி |
05 | பிரேசில் | 8,510,346 (6.28%) | 21.2 கோடி |
06 | ஆஸ்திரேலியா | 7,741,220 (5.60%) | 2.6 கோடி |
07 | இந்தியா | 3,163,751 (2.05%) | 146.3 கோடி |
பெருக்கம்
கடந்த 1960 இல் இந்தியாவின் மக்கள் தொகை 43.6 கோடியாக இருந்த நிலையில் கடந்த 65 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்குக்கு மேல் தாண்டி உள்ளது. இந்தியாவில், கடந்த 1960 -ல் ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது. பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.1 -ல் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. வரும் 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதமானவர்கள், அதாவது 10.4 கோடி மக்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
ஆயுட்காலம்
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 72.48 ஆண்டுகள் ஆகும். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உலக அளவில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 125 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், உலகில் 45 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மேலும், உலக நாடுகளில் சுமார் 55 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 75 ஆண்டுகளாக உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுள் காலம் சுமார் 85 ஆண்டுகள் ஆகும்.
தனிநபர் ஜிடிபி
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) என்பது ஒரு நாட்டின் தனிநபர் பொருளாதார உற்பத்தியின் அளவீடு ஆகும். இது ஒரு நாட்டின் மொத்த ஜிடிபி-ஐ அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2,934 டாலராக தற்போதைய நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் தனிநபர் ஜிடிபி தற்போது 54, 949 டாலர்களாகவும் கனடாவில் 53, 558 டாலர்களாகவும் பிரான்சில் 46, 892 டாலர்களாகவும் உள்ளன. மொத்த ஜிடிபி என்று பார்த்தால் இந்தியா உலகில் நான்காவது இடம் பிடிக்கிறது என்பதை வைத்து நாடு முன்னேறி விட்டது என்று கருத இயலாது. இந்தியாவின் மொத்த செல்வத்தில் 95 சதவீதம் 5 சதவீத செல்வந்தர்களிடம் உள்ளது மீதமுள்ள 5 சதவீத செல்வம் மட்டுமே 95 சதவீத மக்களிடம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ அனைவரது வருமானமும் உயர வேண்டுமெனில் தனிமனிதர்களின் ஜிடிபி உயர வேண்டும்.