மனிதன் முதலில் தோன்றிய காலத்தில் உடைகள் இன்றி இருப்பிடம் இன்றி வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை கொண்டே உயிர் வாழ கற்றுக் கொண்டான். இப்படிப்பட்ட கதைகளை நாம் படித்திருப்போம். ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் தற்பொழுதும் வேட்டையாடி உண்டு வாழும் மக்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மூர்க்கத்தனமான பழங்குடியினர் நம் இந்தியர்கள் என்றால் நம்ப முடிகிறதா? உலகில் தற்போது சில பழங்குடியினர் வாழ்வது, அவர்களின் வாழ்வியல் முறை, உணவு முறை போன்றவையும் அவர்களின் புகைப்படங்கள், மொழி போன்றவையும் வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. எனினும் நாம் அறியாத நம்முடன் தொடர்பில் இல்லாத பழங்குடியினர்கள் இன்றும் இந்தியாவில் இருக்கின்றனர்.
அழகிய தீவு
அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள வண்டூர் கிராமத்திற்கு மேற்கே இத்தீவு 36 கிலோ மீட்டர் தூரத்திலும் அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேயருக்கு மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்திலும் தெற்கு சென்டினல் தீவு தீவிற்கு 59.6 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த வடக்கு சென்டினல் தீவு அமைந்துள்ளது. இது ஏறக்குறைய சதுர வடிவத்தை கொண்டுள்ளது. இதனுடைய நீளம் 8 கிலோமீட்டர், அகலம் 7 கிலோமீட்டர், இதன் மொத்த விட்டம் 60 சதுர கிலோமீட்டர் மட்டுமே. ஆர்ப்பரிக்கும் அலைகளும், சுத்தமான காற்றும், அடர்ந்த காடுகளும், தெளிந்த கடல் நீரும் அந்த தீவின் அழகை மேலும் அலங்கரிக்கிறது. இதன் அழகிய தோற்றம் நம்மை விடுமுறை நாட்களில் சென்று ஆனந்தமாக இந்த தீவை கண்டு களித்து இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்து வர வேண்டும் என்று நினைக்கச் செய்யும். இங்கு செல்லலாம், ஆனால் திரும்பி வர முடியாது.
தடை
மிகவும் பழமையான தீவாக உள்ள சென்டினல் தீவுவை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு எந்த சுற்றுலா பயணிகளும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பாதுகாப்பில் உள்ள காவல் படையினரும் அந்த தீவை சுற்றி ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்கப்பலும் அந்த தீவை நெருங்காது. இப்படி பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் என்னவென்றால், இங்கு வைரங்களும் வைடூரியங்களும் தங்கம் போன்றவை இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை. இங்கு வாழும் மக்கள் மிகவும் கொடூரமாக வேட்டையாடுபவர் ஆகவும் மனிதர்களை உண்ணும் மாமிச உன்னி ஆக இருப்பதாகவும் கூறுகின்றனர். 1956 ஆம் ஆண்டில் பழங்குடியினருக்கு இயற்றப்பட்ட பாதுகாப்பு விதியின்படி அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் பாதுகாப்புக்காக வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது இதன் காரணம் அங்கு உள்ள பழங்குடியினர் தொற்று நோய்க்கு ஆளாகாமல் தடுப்பதற்காக.
சிறப்பு
மலபார் சில்க் காட்டன் மரங்கள், பிராட்லீப் மரங்கள்,இந்தியன் காட்டுப்பன்றி, இந்தியன் ஆமைகள், இந்தியாவில் காணக்கூடிய மீன் வகைகள் போன்றவை மட்டுமே இங்கு காணக்கூடிய அரிய வகை பொருட்கள். வேறு எந்த அற்புதமான இயற்கை வளங்களும் இங்கு இருப்பதாக தெரியவில்லை. எனினும் இத்தீவு காக்கப்பட பாதுகாக்கப்பட சில காரணங்கள் உள்ளன. கிடைக்கப்பட்ட தகவலின் படி தற்போதும் 100 இல் இருந்து 200க்கு மேற்பட்ட மனிதர்கள் காட்டுவாசிகளை போல் தற்போதும் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. விவசாயம் செய்யாமல் தற்போதும் மிருகங்களையும் அங்கு உள்ள இயற்கையை சார்ந்தும் கடல் மீன்களை உட்கொண்டும் அவர்களே செய்த சிறிய அளவிலான மிதவைகளைக் கொண்டு கடலோரங்களில் மட்டுமே உள்ள மீன், ஆமைகளையும் உண்டு வாழ்கின்ற கற்கால மனிதர்களாக இந்த சென்டினியர்கள் உள்ளனர். இவர்களை நாம் இவ்வாறு அழைப்பது கூட இவர்களுக்கு தெரியாது. இவர்கள் பேசும் மொழி எந்த பழங்குடியினரும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் 60,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினரிடம் இருந்து தனித்து வந்தவர்கள் என மற்ற பழங்குடியினர் கூறுகின்றனர். மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தது 20,000 வருடங்களுக்கு முன்புதான். இவர்கள் விவசாயத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அதற்கு முன்னதாகவே இவர்கள் இத்தீவில் தனித்து வசித்து வருவது தெரிகிறது.
நரகத்தின் மறு புள்ளி
1567-ம் ஆண்டு இந்த தீவு இருப்பதற்கான வரைபடம் கிடைத்துள்ளது. 1867-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய வணிக கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது மிகப்பெரிய மழையினால் சேதமடைந்து இந்த சென்டினல் தீவில் கரை ஒதுங்கி உள்ளது. இந்த கப்பலில் பயணத்த 106 பயணிகளும் தன்னைக் காப்பாற்ற யாரேனும் வருவர் என்று இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் அந்த கப்பலிலேயே கழிக்கின்றனர். அப்பொழுது மூன்றாவது நாள் நிர்வாணமாக கையில் ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்தி சில காட்டுவாசிகள் இவர்களை தாக்க முயற்சித்த போது 106 பேரும் கையில் கிடைத்தவற்றை கேடயமாக உபயோகித்து இவர்களை விரட்டி அடித்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த பிரிட்டிஷ் கப்பல் மூலம் தன் உயிரைக் காப்பற்றி கரை சேர்ந்துள்ளனர். இவர்கள் கூறியதின் அடிப்படையிலேயே அங்கு மனிதர்கள் வாழ்வது உலகிற்கு தெரியவந்துள்ளது. மனிதர்களை கொன்று உண்ணும் கேணிபில்ஸ் என்பவர்கள் இங்கு இருப்பது அப்பொழுது தான் தெரியவந்தது. சிலர் இத்தீவை நரகத்தின் மறு புள்ளி என்று அழைக்கின்றனர்.
தோற்றம்
இங்கு வாழும் பழங்குடியினர் உயரமாகவும், கருப்பு நிற தோளையும், வெள்ளை நிற பளிச்சிடும் பற்களையும் கொண்டவர்களாகவும் உடைகள் இன்றி இலைகளை வைத்து இடுப்பில் பெல்ட் போன்று ஆண்கள் அணிந்திருந்தனர் என்கின்றனர். ஆண்கள் வேட்டையாடுபவர்களாகவும் பெண்கள் ஆண்களை கட்டுப்படுத்தவர்களாகவும் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.
நட்பு
இந்தியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பொழுது பிரிட்டிஷார் அந்த தீவை நெருங்கினர். அங்கு உள்ளவர்களின் மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களுடன் நட்பு கொள்ள முடியாததால் பிரிட்டிஷார் அங்கு உள்ள வயதான இருவரையும் அவர்களின் நான்கு பிள்ளைகளையும் கடத்திக் கொண்டு அவர்களின் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள முயற்சித்துள்ளனர். அப்பொழுது அந்த வயதான இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். நான்கு பிள்ளைகளுக்கும் நோய் தொற்று பரவியது. நான்கு பிள்ளைகளும் இறக்க நேரிடும் என்பதால் அவர்களிடம் சில பரிசு பொருட்களை கொடுத்து அத்தீவிலேயே திரும்பவும் விட்டுச் சென்றுள்ளனர். நமக்கு ஏற்படும் சாதாரண சளி, இருமல் தொற்றையும் இவர்களால் தாங்க முடியாது. இதற்குப் பிறகும் பலமுறை இவர்களுடன் நட்பு கொள்ள பல மக்கள் முயற்சித்துள்ளனர் எனினும் இவர்கள் அதை விரும்பவில்லை.
உண்மை
வடக்கு சென்டினல் தீவில் உள்ள மக்கள் தங்கள் தீவை தொடும் மனிதர்களை கொன்று அங்கு கரையோரங்களில் புதைத்து உள்ளனர். இதனால் அந்த தீவிற்கு சென்று அங்கு உள்ள மக்களிடம் நட்பு ரீதியாக பழக வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மனிதர்களைக் கொன்று உண்பது நிரூபிக்கப்படாத ஒன்றாக உள்ளது. இவர்கள் தங்கள் தீவையும் தற்போது உள்ள 100-200க்கும் மேற்பட்ட மக்களையும் காப்பதையே குறிக்கோளாக வைத்திருப்பது தெரிகிறது. தங்களையும் தங்கள் இருப்பிடத்தையும் சுற்றி உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் தனித்து இருக்கவே இவர்கள் விரும்புகின்றனர். இவர்களை அவர்களுக்கு உரிய பாணியிலேயே இருக்க விடுவதற்காகதான் இந்த தீவுக்கு செல்வது இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் செயற்கைக்கோள் அனுப்பும் அறிவியல் வளர்ச்சியைப் பெற்ற இந்தியர்களும் இந்தியாவிலும் இத்தகைய மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது நம்ப முடியாத உண்மையாகும்.
விவசாய நிலத்தை சர்பாசி சட்டத்தின் கீழ் ஏலம் விட நடவடிக்கை எடுத்தது ஏன்? வங்கி மேனேஜர் ஆஜராகி பதில் அளிக்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
https://theconsumerpark.com/notice-under-sarfaesi-act-against-agriculture-land