Thursday, April 3, 2025
spot_img

உடலில் ஐந்து உறுப்புகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான்? இன்று சிறுநீரகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!

மனித உடலில் மொத்தம் எழுபத்தெட்டு முக்கிய உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு உறுப்பு அமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த 78 உறுப்புகளில் இதயம் (heart), மூளை (brain), சிறுநீரகம் (kidney), கல்லீரல் (lever) மற்றும் நுரையீரல் (lungs) ஆகிய ஐந்து உறுப்புகள் உயிர்வாழ்வதற்கு அவசியமானவை. இந்த ஐந்து உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சில நொடிகள் கூட செயல்படாமல் இருந்தால் மரணம் ஏற்படும். 

கடந்த 27 பிப்ரவரி 2025 அன்று இதயத்தைப் பற்றிய விரிவான கட்டுரை பூங்கா இதழில் வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையின் இணைப்பு    இறுதியில் வழங்கப்பட்டுள்ளது.  இன்று சிறுநீரகத்தை பற்றி பார்ப்போம்.

உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உயிர்களைக் கொல்லும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது என்றும் இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 – 2.5 லட்சம் மக்கள் (வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10%)  புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் சிறுநீரகத்தின் முக்கியத்துவம், அதில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

அமைவிடம்

வயிற்றின் உறுப்புகளுக்குப் பின்புறம் மேற்பகுதியில் முதுகெலும்பிற்கு இருபுறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகங்கள் மனித உடலில் உள்ளன.   அவரை விதை வடிவத்தில் காணப்படும்   இரண்டு சிறுநீரகங்களில் வலது சிறுநீரகமானது இடது சிறுநீரகத்தை விட சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும், 10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 86.5 செ.மீ. அகலமும் கொண்டது. மனிதரில் ஒரு சாதாரண சிறுநீரகத்தில், 800,000 தொடக்கம் 1.5 மில்லியன்கள் வரையிலான நெப்ரான்கள் (Nephron- சிறுநீரகத்தி) உள்ளன.

வேலை

சிறுநீரகம் என்பது உடலில் கழிவுகளை வடிகட்டி, சிறுநீர் வழியாக வெளியேற்றும் முக்கிய உறுப்பு ஆகும். இரத்தத்திலிருக்கும் கழிவுகளைத் தூய்மைப்படுத்துவதும் உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்கு படுத்துவதும் சிறுநீரகத்தின் பிரதான இரண்டு வேலைகள் ஆகும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ஒரு லிட்டருக்கு மேல் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. சிறுநீரகத்தில் நுழையும் ஐந்தில் ஒருபங்கு இரத்தம் மட்டுமே வடிக்கப்படுகிறது.சிறுநீர்க்கலம் (Urinary tract – சிறுநீர்ப்பாதை) தன்னுள் பாயும் ரத்தத்தை வடித்தல், மீளுறிஞ்சல், சுரத்தல், கழிவகற்றல் ஆகிய நான்கு செயல்முறைகளால் மாற்றுகிறது. 

இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுப் பொருட்களை வடிகட்டுதல், சிறுநீர் வழியாக கழிவுகளை வெளியேற்றுதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், சில ஹார்மோன்களை உற்பத்தி செய்தல், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியில் பங்கு வகித்தல் உள்ளிட்ட வேலைகளை செய்யும் சிறுநீரகமானது மனிதன் நலமுடன் வாழ மிக அவசியமானதாகும்.

நெப்ரான்கள்

இரத்தத்தை வடிகட்டுவதன் மூலமும், பின்னர் தேவையான பொருட்களை மீள உறிஞ்சி, தேவையற்றவற்றை கழிவாக அகற்றுவதன் மூலமும், உடலிலுள்ள நீரின் அளவு, சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம் மற்றும் பைகார்பனேட் போன்ற அயனிகளின் (ions) அளவு, வளர்சிதைமாற்ற இடைநிலைப் பொருட்கள் (metabolic intermediates), உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் சமநிலையைப் சமநிலையைப் பாதுகாக்கும் முக்கிய பணியை சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் செய்கின்றது. இதன் மூலம் ரத்தத்தின் அளவு, ரத்த அழுத்தம், ரத்தத்தின் பி எச் (pH- பி எச்- காரகாடித்தன்மைச் சுட்டெண்) என்பவற்றை ஒழுங்கமைக்கின்றது.  இயக்குநீர் (Antidiuretic hormone), அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல்) வளரூக்கி ஆல்டோஸ்டிரோன் (aldosterone), இணைகேடய வளரூக்கி போன்றவைகளினால் நெப்ரான்களின் வேலைகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரகங்கள் படிப்படியாக சேதமடைந்து, சரியாக வேலை செய்யாத நிலையில் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD- Chronic Kidney Disease), சிறுநீரகங்களில் திரவத்தால் நிரப்பப்பட்ட பல சிறிய கட்டிகள் தோன்றி ஏற்படும் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் (Polycystic kidney disease),   நீரிழிவு நோயால் (சர்க்கரை நோய்) சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் நீரிழிவு நெப்ரோபதி (Diabetes Nephropathy), ரத்த அழுத்த நோயால் சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis), சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் கடினமான வைப்புகளாக மாறி உருவாக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை (kidney stones) சிறுநீர் பாதைத் தொற்று (urinal tract infection), சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும் ஐஜிஏ நெஃப்ரோபதி போன்றவை முக்கியமான சிறுநீரக நோய்களாகும்.

சிறுநீரகங்கள் கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை இரத்தத்திலிருந்து வடிகட்டுவதிலிருந்து திறம்பட செயல்படாமல் போவது நாள்பட்ட சிறுநீரக நோயின் கடைசி கட்டமாகும் சிறுநீரகம் செயலிழப்பு (Kidney failure) நாள்பட்ட சிறுநீரக நோயின் கடைசி கட்டமாகும். இந்நிலை ஏற்படுமானால், இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்றுவதற்கான செயற்கை செயல்முறை டயாலிசிஸ் (dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (kidney transplantation) இல்லாமல் ஒருவர் உயிர்வாழ முடியாது.

அறிகுறிகள்

சோர்வு, கணுக்கால், பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம், சிறுநீரின் நிறம் மற்றும் அளவில் மாற்றம், முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, குமட்டல், பசியின்மை போன்றவை சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் நிறம் மாறுதல் (இருண்ட அல்லது ரத்தத்துடன்), சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல், தோல் வறண்டு அரிப்பு ஏற்படுவது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது, சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியேறுதல் போன்றவை சிறுநீரக நோய்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இத்தகைய அறிகுறிகள் தோன்றும் போது சிறுநீரக பிரச்சனையா என்பதை கண்டறிய தகுந்த நிபுணரை அணுகி ஆய்வு செய்வது அவசியமாகும்.

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துக் கொள்வது சிறுநீரக பாதுகாப்புக்கு அவசியமானதாகும். புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும்.  நடைபயிற்சி, நீச்சல், யோகா போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்வது, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகத்துக்கு ஆரோக்கியமானதாகும். சிறுநீரக செயல்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள அவ்வப்போது வழக்கமான மருத்துவ சோதனைகளை செய்து கொள்ளலாம்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
 வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் குறைவாக உள்ள உணவுகள் மற்றும் மெலிந்த புரதங்கள், காய்கறிகள், பழங்கள், இலை கீரைகள், மீன், முட்டை போன்ற உணவுகள் உட்பட்டவை சிறுநீரகத்துக்கு சிறந்தவையாகும். பூண்டு, வெங்காயம், அவுரிநெல்லிகள் போன்ற உணவுகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் உதவுகின்றன. உங்கள் உடலுக்கு ஏற்ற சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு வகைகளை ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகத்தை பாதுகாப்போம்! வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்!

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இந்தக் கட்டுரை தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை அல்லது பரிசோதனைக்கு நிபுணரைத் தொடர்பு கொள்வது அவசியமானதாகும்.

கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles