Advertisement

காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல – “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய காதல்கள் நடத்தையில் தோல்வி கண்டு முறிந்து விட்டன.

நமக்கு திருமணமாகி 50 வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொல்லவில்லை” என்றாள் அவள்.  

அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாம் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பொழிந்தது. உடனே நான் என் மேலங்கியைக் கழற்றி உன்னை மூடினேன். உன்னை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். நான் மழையில் நனைந்ததால் நோய்வாய்ப்பட்டேன், உனக்கு எதுவும் ஆகவில்லை.” அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள். 

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை மகளைப் பார்த்துவிட்டு வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது. உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோலில் சுமந்து சென்றேன்” என்றான். அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள். 

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் கண் மருத்துவரிடம் சென்ற போது, எனக்கு கண் பார்வை மங்கப் போகிறது என்று மருத்துவர் சொல்ல, நான், “பரவாயில்லை எனக்கு வேறு இரு கண்கள் இருக்கின்றன. அதுதான் என் மனைவி. அவள்தான் என் கண்ணின் மணி” என்றேன்.  அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள். 

அதற்கு அவன்: இவைகள் அன்பின் வடிவங்கள் இல்லையா? என்றான். அதற்கு அவள்: நிச்சயமாக, நீ என்னை காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதனை சொல்லில் நான் கேட்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.  “ முதலில் நீ படிக்கட்டிலிருந்து விழுந்து விடாதபடி என் கையை நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்!  என்றான். இப்போது புரிகிறதா? நான் உன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறேன், உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்ககறேன் என்று’ என்றான். 

காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல, அது வினைச்சொல். காதல் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது நடத்தைகள். காதலில் வார்த்தைகளை விட நடத்தைதான் மிக முக்கியம். வார்த்தைகளில் “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய எத்தனை பல தொடர்புகள் நடத்தையில் தோல்வி கண்டு முறிந்து விட்டன. வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும். (வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது)

உங்கள் குழந்தைகளை சிரமத்தை அறிந்து கொள்ளும் வகையில் வளருங்கள்!

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்! ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை! ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது. பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை ! இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது! மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது. நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

பல பெற்றோர்கள் தான் அடைந்த துன்பத்தை தனது குழந்தைகள் அடையக் கூடாது என்று குழந்தைகளை சிரமம் என்பது என்று அறியாத வகையில் சொகுசாக வளர்த்து வருகிறார்கள். இத்தகைய குழந்தைகளில் பலர் வளர்ந்து இளைஞர்களாகி பின்னர் தனியாக வாழத் தொடங்கும் போது அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க சமாளிக்கும் சக்தி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நல்லது, கெட்டது எவை என்பதை சொல்லி குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு சிரமம் என்பது எது என்பதையும் அவர்கள் அறியும் வகையில் வளர்க்க வேண்டும். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான அடிப்படை திறமைகளில் ஒன்று வாழ்க்கையை புரிந்து கொள்வதாகவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே?  

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?  

ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா?  

விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரிப்பு – காரணம் என்ன? தங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் 14 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் பூங்கா இதழில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். தங்களது கருத்துக்களுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில்  இணைத்து அனுப்பவும்.
இதையும் படிக்கலாமே?

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!
 
நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய
இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ்  குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
பொருளூர் செல்வா
பொருளூர் செல்வா
கட்டுரையாளர் சமூக அறிவியல் சிந்தனையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles