Wednesday, July 23, 2025
spot_img

மனித உரிமைகள் கமிஷனை பற்றி பெரும்பாலும் தெரியும். உங்கள் மாவட்டத்திலேயே உள்ள மனித உரிமை நீதிமன்றத்தை பற்றி தெரிந்துள்ளீர்களா?

தேசிய மனித உரிமை ஆணையம் (கமிஷன்), மாநில மனித உரிமை ஆணையங்கள் நடத்தும் விசாரணைகள் மற்றும் அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் குறித்து அடிக்கடி   பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கேள்விப்படுகிறோம்.  ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்து   கேள்விப்பட்டது உண்டா என்று விசாரித்தால் இல்லை என்றே பலரும் பதில்  சொல்வார்கள்.

கடந்த 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தையும் மாநிலங்களில் மாநில மனித உரிமைகள் ஆணையங்களையும் மாவட்டங்களில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களையும் அமைக்க வழி வகுத்தது.  சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இந்த அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.  

மனித உரிமை மீறல் குற்றங்களை நிகழ்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில்   இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை வழங்கும் அதிகாரங்களை அதிகாரத்தை மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் பெற்றுள்ளன.  இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (செசன்ஸ் கோர்ட்) அல்லது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (சி.ஜே.எம் கோர்ட்) மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றமாக செயல்பட செயல்படுகிறது.

தேசிய ஆணைய இணையதள தகவலின்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் தேசிய மனித உரிமைகள்   ஆணையத்தில் 1,32,274 புகார்கள் பதிவாகியுள்ளன.  ஆனால், தமிழக ஆணைய இணையதளத்தில் பதிவான வழக்குகளின் புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை.  எவ்வாறு இருப்பினும்   ஆயிரத்துக்கும் குறையாத புகார்கள் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன என அதிகாரப்பூர்வமற்ற வகையில் அறிய முடிகிறது.  ஆனால்,  2022 ஆம் ஆண்டில் தண்டனை வழங்கும் அதிகாரங்களை பெற்றுள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும்  இரட்டை இலக்க  எண்களை விட கூடுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. 

தமிழ்நாட்டில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 167 மட்டுமே.  இதில் ஏழு வழக்குகளில் மட்டுமே மனித உரிமை நீதிமன்றங்கள் தண்டனை வழங்கியுள்ளன.  இத்தகைய வழக்குகளிலும் மேல்முறையீட்டு முடிவுகள் எதுவும் தெரியவில்லை.  இந்த தரவுகள் தகவல் அறியும் உரிமை சட்டப்படி திரட்டப்பட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்த டாக்டர் வீ. ராமராஜ் அப்போது வழக்கறிஞராக இருந்து வந்தார். தற்போது தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கு முன்னர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாகவும் நுகர்வோர் நீதிபதியாகவும் பணியாற்றியவர் ஆவார்.

ஆணையங்களைப் போல் அல்லாமல் தண்டனை வழங்கும் அதிகாரங்களைக் கொண்ட மனித உரிமை  நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பது   கவனிக்கத்தக்கதாகும்.  முதலாவதாக, மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை எனலாம்.  இரண்டாவதாக மனித உரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க மாவட்ட அளவில் தனித்த காவல் அமைப்புகள் இல்லை என்பதாகும்.  மூன்றாவதாக, மனித உரிமை நீதிமன்றங்களின்  நடைமுறைகள் தெளிவாகவும் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். இத்தகைய குறைகளை களைந்து மனித உரிமை குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை   மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பதே மக்கள்   விருப்பமாக இருக்க இயலும்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: மனித உரிமைகளை பாதுகாப்போம். மனித உரிமை மீறல்களை தடுப்போம். மனித உரிமை மீறல் குற்றங்களை புரிவோருக்கு தகுந்த தண்டனை வழங்குவோம்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles