உலகின் வட துருவத்தில் ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களின் மத்தியில் அமைந்துள்ள நாடுதான் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து (largest island). கிரீன்லாந்து வடக்கிலிருந்து தெற்காக 2,670 கிலோமீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக 1,050 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. கிரீன்லாந்தின் கடற்கரை 39,330 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த நாட்டை ஒட்டி இந்த நாட்டுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான குட்டி தீவுகள் உள்ளன.
இந்தியா 32,87,263 சதுர கி.மீ (extent of Greenland) பரப்பளவைக் கொண்டுள்ளது. கிரீன்லாந்தின் பரப்பளவு 2,166,086 சதுர கிலோமீட்டர். இந்திய பரப்பளவில் பாதிக்கும் மேல் அளவிலான நிலப்பரப்பை கொண்ட கிரின்லாந்தின் மொத்த மக்கள் தொகை 56,583 (2022 கணக்கெடுப்பின்படி). உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி குறைந்த நாடாகும் (low density). பெரும்பான்மையான மக்கள் டேனிஷ் மற்றும் மேற்கு கிரீன்லாண்டிக் கலாலிசூட் (Language) இரண்டையும் பேசுகிறார்கள். தற்போது ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் சுற்றுலாவாசிகள் (Tourist) இங்கு வந்து செல்கிறார்கள்.
கிரீன்லாந்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் தலைநகரான நூக்கில் வசிக்கின்றனர். இந்த ஊரில் வெப்ப பருவ காலங்களில் சராசரி வெப்பநிலை மைனஸ் 5.1 முதல் 9.9 டிகிரி சென்டி கிரேட் (climate). இந்த நாட்டின் வடக்கு பகுதியில் மைனஸ் 69.6 செண்டி கிரேட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிரீன்லாந்து உலகிலேயே அதிக தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளது. கிரீன்லாந்து எதிர்கொள்ளும் மற்றொரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினை அதிக குடிப்பழக்க விகிதமாகும்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
கிரீன்லாந்தின் வடக்கு எல்லை வட துருவத்திலிருந்து (north pole) 800 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 25 முதல் ஜூலை 25 வரை சூரியன் மறைவதில்லை. கிரீன்லாந்தின் 81% பகுதி நிலப்பரப்பு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. நாட்டின் மீதமுள்ள பகுதி நிரந்தர உறைபனியால் சூழப்பட்டுள்ளது (ice and glaciers). இங்கு தாவரங்கள் பொதுவாக அரிதானவை, கேப் ஃபேர்வெல்லுக்கு அருகிலுள்ள தீவிர தெற்கில் உள்ள நானோர்டலிக் நகராட்சியில் மட்டுமே காடுகள் நிறைந்த நிலம் காணப்படுகிறது.
கிரீன்லாந்தில் மீன்பிடித்தல் (fishing) ஒரு முக்கிய தொழிலாகும். கிரீன்லாந்தில் வேட்டையாடப்படும் மீன், மட்டி மற்றும் பிற விலங்குகளைத் தவிர, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் நாடு இறக்குமதி செய்கிறது. துருவ கரடி, கலைமான், ஆர்க்டிக் நரி, ஆர்க்டிக் முயல், கஸ்தூரி எருது, காலர் லெம்மிங், எர்மைன் மற்றும் ஆர்க்டிக் ஓநாய் போன்றவை இங்கு காணப்படுகிறது. கடற்கரையில் சீல்கள் மற்றும் திமிங்கலங்கள் உள்ளன.

2.16 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும், குடியிருப்புகளை ஒன்றோடொன்று இணைக்கும் சாலைகள் அல்லது ரயில் அமைப்புகள் எதுவும் இல்லை (no roads). நகரங்களுக்குள் சாலைகள் உள்ளன. ஆனால் அவை புறநகர்ப் பகுதிகளில் முடிவடைகின்றன. ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து இன்னொரு குடியிருப்பு பகுதிக்கு செல்ல விமானம் ஹெலிகாப்டர் அல்லது படகு போன்றவற்றையே இங்கு பயன்படுத்துப்படுகிறது. இதனைத் தவிர, ஸ்னோமொபைல் (roads) என்றமோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் அல்லது நாய்களால் இழுக்கப்படும் ஒரு நாய் சவாரி (Dog riding) பனியின் மீது பயணிக்கப் பயன்படுகின்றன.
டென்மார்க் (Denmark) நாட்டில் ஒரு தன்னாட்சி பெற்ற பிரதேசமாக கிரீன்லாந்து விளங்குகிறது. புவியியல் ரீதியாக வட அமெரிக்க கண்டத்தின் (North America) ஒரு பகுதியாக கிரீன்லாந்து இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஐரோப்பாவுடன் (Europe) தொடர்புடையது. 1721 முதல், டென்மார்க் கிரீன்லாந்தில் காலனிகளைக் கொண்டிருந்தது, ஆனால் அந்த நாடு 1953 -ல் டென்மார்க்கின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

1979 -ல் டென்மார்க் கிரீன்லாந்திற்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியது. மேலும் 2009 -ல் விரிவாக்கப்பட்ட சுய ஆட்சி (self rule) தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட டென்மார்க் சட்டப்படி கிரீன்லாந்துக்கு விரிவாக்கப்பட்ட சுய ஆட்சியை டென்மார்க் நாடு வழங்கியது. ராணுவம், வெளியுறவு போன்ற ஒரு சில துறைகளில் அதிகாரங்கள் மட்டும் டென்மார்க் மத்திய அரசில் உள்ளது. சர்வதேச சட்டங்களை பொருத்தவரை கிரீன்லாந்து டென்மார்க்கின் அங்கமாகும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இந்த நாடும் அமெரிக்கா அங்கம் வைக்கும் நேட்டோ ராணுவ கூட்டணியில் ஒரு உறுப்பினர்தான். இருந்தபோதிலும் இந்த நாட்டை அமெரிக்கா கைப்பற்ற துடிப்பது ஏன்? ராணுவ ரகசியங்கள் என்ன? என்பது இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதியாக நாளை வெளிவரும்.




