Advertisement

1. வெடித்த மனைவி, 2. சிரித்த கணவன் 3. பூரித்த வாரிசுகள் – சிரிக்கவும் சிந்திக்கவும் படிக்க வேண்டிய முத்தான ஒரு நிமிட கதைகள்

இத்தனை நாள் இதுலாம் தெரியாம சமையல் ஈசின்னு நினைச்சுட்டு இருந்தேன். மன்னிச்சுடு தாயி..

ஒரு நாள்…டி வி யில் தினப்பலனைக் கேக்கலைன்னு நினைக்கிறேன். என் இல்லத்தரசியிடம் “ஏண்டி…எப்ப பாத்தாலும் சமைக்கிறேன், சமைக்கிறேன்கிறியே.. சமையல் என்ன பெரிய வேலையா?”-ன்னு கேட்டுட்டேன்..

நாக்கிலே சனி..’யோவ்…..”என்னம்மா பொசுக்குன்னு யோவ்..னு கூப்பிடறே.’ (மைன்ட் வாய்ஸ்) “கேட்டுக்கையா.. நாங்களே காய்கறி வாங்கி வரனும், அதை பிரிச்சு எடுத்து வைக்கனும், நாங்களே காய்கறி வெட்டிக்கனும், நாங்களே சமைக்கனும், நாங்களே பரிமாறனும், நாங்களே எடுத்து வச்சு க்ளீன் பண்ணி பாத்திரமும் அலம்பி வைக்கனும்..

இதுக்கிடையில பேனா காணோம், துண்டை காணோம், Pan கார்டு எங்கன்னு அடிக்கடி கூப்பிட வேண்டியது..அடுப்படியிலேயே இருந்தா ஹோட்டல்ல கல்யாணத்துல சமைக்குறவன் அடுப்புல பாத்திரத்தை வச்சிட்டு தம்மடிக்க வெளியில் போய்வரான். நீ என்னமோ அடுப்படியிலேயே நின்னுக்கிட்டு நகர மாட்டேங்குறியேன்னு லொள்ளு பேசவேண்டியது…நீங்க கேட்டதை எடுத்துக்குடுக்க வெளியே வரும்போது பால் பொங்கி வழிஞ்சா கவனம் எங்க இருக்குன்னு கேட்டு இம்சிக்க வேண்டியது…”

“என்னம்மா நான் சாதாரணமாத்தானே கேட்டேன் இதுக்கு போயி கோச்சுக்கிறியே…” 

“யோவ் இன்னங்கேளுய்யா.. சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான். ஆனா, தினமும் சமைக்கணும். தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்.. வருஷம் ஃபுல்லா சமைக்கணும்… சமைக்கணும்,… நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது… இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது, புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கணும்…

உப்பு, உரைப்பு கூடிடக்கூடாது…பெரியவங்களுக்கும் குழந்தைகளுக்கும் சோறு குழைவா இருக்கணும், மத்தவங்களுக்கு சோறு ஒண்ணோடு ஒண்ணு ஒட்டக்கூடாது.. சமைக்கும் காய்கறிகள் தானியங்கள் யாரோட உடலுக்கும் ஒத்துக்காததாகவோ இல்ல பிடிக்காததாவோ இருந்தால் வேற சமைக்கணும். 

இருக்குறதை வச்சு சமைக்கணும்,.. வேஸ்ட் பண்ணாம சமைக்கணும்.. பண்டிகை, பிறந்த நாள் , கல்யாண நாள்ன்னா ஸ்பெஷலா சமைக்கணும்.. அக்கம் பக்கத்துல கொடுக்கும் பண்டம் நல்லா இருந்தால் அதை கத்துக்கிட்டு சமைக்கணும்…சர்க்கரையில் எறும்பு வராம இருக்க கிராம்பு போட்டு வைக்கனும். இப்படி ஒவ்வொண்ணுத்தையும் பாதுகாக்கணும்.

குழம்பு கரண்டியால் பால் எடுத்தா பால் கெட்டுப்போகும்.. அதனால் தனித்தனி கரண்டி பராமரிக்கணும்..சில அடாவடிக வீட்டில் இருந்தால் தனக்குன்னு தனி தட்டு, டம்ப்ளர் கேட்கும்..சமைக்கணும், சாப்பிடணும், சாப்பிட்டதை கழுவணும், கழுவும்போதே அடுத்த வேளைக்கு யோசிச்சு ரெடியாகணும்,

இரவு படுக்கும்போது நாளைக்கு இதையே மீண்டும் தொடங்கனுமேன்னு மலைப்பா வரும்..ஆனா, நாளைக்கு விடியும், நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கணும்..வீட்டில் எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் சமைக்கணும்.. அவங்களுக்கு சமைக்குறதுக்காகவே இருக்கோம்ன்னு நினைப்பு வரும்.

வக்கணையா தின்னுக்கிட்டே உப்பில்லை, உரைப்பில்லன்னு குறை சொன்னா கோவம் வருமா வராதா..?சாப்பிட்ட தட்டைக்கூட சிங்கில் கொண்டு போய் போடாத ஆட்கள் வீட்டில் இருந்தால் வெறுப்படிக்கும். ஹோட்டலில்ல, கல்யாணத்துல சமைக்கும் ஆட்களை கூப்பிட்டு பாராட்டும் ஆட்கள் எத்தனைபேர் வீட்டில் தனக்காக சமைக்கும் பெண்களை கூப்பிட்டு பாராட்டி இருக்கீங்க?!

காய்ச்சலில் படுத்து கிடந்தால் கூட சாம்பார் வச்சு அப்பளம் மட்டும் பொறிச்சுடு போதும்ன்னு சொல்வீங்களே தவிர, நான் சமைக்குறேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. இதையே தன் வாழ்நாள் முழுதும் சமைக்குறதுக்காகவே அவ பிறந்திருக்கான்னு அவள் சுமையையே சுகமாக்கி திணிச்சு வச்சிட்டு சமைக்குறது கஷ்டமான்னு அடிக்கடி கேள்வி வேற!…”

“இத்தனை நாள் இதுலாம் தெரியாம சமையல் ஈசின்னு நினைச்சுட்டு இருந்தேன். மன்னிச்சுடு தாயி..” இனிமே யாராவது வீட்டில் சும்மா தானே இருக்கேன்னு கேப்பீங்க…?

பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு, பிரச்சனை பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

*மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது_தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று? ஆனால்… இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம் இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்….

டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்…”இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,…கணவரின் காதில் விழவில்லை எனில்…. சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள். பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள் எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்” என்றிருந்தது.

அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே குஷி. அடுத்தநாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்…இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள். பதில் எதுவும் இல்லை… பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை, ஹாலில் இருந்து கேட்டாள், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .கணவரிடமிருந்து  பதிலே இல்லை. போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக…. “இன்னைக்கு பையனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு?” கேட்டாள். காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே… அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,

”ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன், அது உன் காதில் விழவில்லையா?

காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க…? என பொரிந்துத் தள்ளிவிட்டான்… மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள். தவறு தன்னிடம் தானா?. இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு…அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். என்ன விசித்திரம்!!!

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

தியாகம் செய்வதில் யார் முதன்மையானவர்? தாயா? தந்தையா?

ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கடினப்பட்டு தியாகம் செய்தது நீங்களா…? அல்லது அப்பாவா…? என்று. அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கடினமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

உங்க அப்பா என்னை திருமணம் செய்து கொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீங்கள் ஒவ்வொருவராக பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, நலம் மற்றும் உங்கள் உயர்வுக்கு கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வையால் கடின உழைப்பால் உருவானவர்கள்.

மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார். அவரின் பதில் இந்த மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு துயர் அடைந்தாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் ஓயாத உழைப்பு தான் இந்த குடும்பத்தை/உங்களை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் அடிக்கடி வாதம் செய்தாள்.. அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. நான் எப்படியோ பரவாயில்லை, அவளின் நிறைவு காலத்திலாவது அவளுக்கு ஏதாவது விருப்பம் இருக்கலாம். ஆனால் என்னிடம் கூட கேட்டது கிடையாது. நீங்கள் எல்லோரும் நிறைவேற்றுவீர்கள் எனநம்புகிறேன் என்றார்.

மகன் தனது சகோதர/சகோதரிகளிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் பாக்கியசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான். பெற்றோர்கள்   ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.

இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
 
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories). மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புஅரசியல்
மாநிலம்அரசு
தேசம் நிர்வாகம்
சர்வதேசம்அரசியல்
சிறப்பு படைப்புகள்பிரச்சனைகள்
கருத்துபாதுகாப்பு
நேர்காணல்அமைதி
அறிவு பூங்காவாக்காளரியல்
பொருளாதாரம்சமூகம்
நிதிமக்கள்
உற்பத்திகல்வி – வேலை
சேவைகள்ஆன்மீகம்-ஜோதிடம்
தொழில் வாழ்க்கை
வர்த்தகம் கலை – இலக்கியம்
விவசாயம்பொழுதுபோக்கு
உணவு -வீடுவிளையாட்டு
கதம்பம்நாங்கள்
நீதி -சட்டம்நாங்கள் 
குற்றம்புரவலர்கள்
புலனாய்வுஆதரிங்கள்
இயற்கை பங்களியுங்கள்
அறிவியல்படியுங்கள் – நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆரோக்கியம்
களஞ்சியம்

Related Articles

1 COMMENT

  1. மிகவும் அருமையான பதிவு .அனைத்து குழந்தைகளும் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும். பயனுற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles