Advertisement

முட்டைக்கு ஆபத்து! அறிந்த அறியாத சங்கதிகளை தெரிந்து கொள்ளுங்கள்! இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தமிழகத்தின் நாமக்கல்!

2023 ஆம் ஆண்டில் உலகில் முட்டை உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் பால்வளத்துறை வெளியிட்டுள்ள கையெட்டின்படி உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம்   வகிக்கிறது. முட்டை உற்பத்தியில் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு 1,600 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 13,800 கோடி.

நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள்
“நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)

கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் முட்டை உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் தெலுங்கானா மூன்றாம் இடத்திலும் மேற்கு வங்காளம் நான்காம் இடத்திலும் உள்ளது. தற்போதைய தரவுகளின் படி முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நாமக்கல் கே சிங்கராஜ் தெரிவிக்கிறார்.

கடந்த 2023-24  ஆம் நிதியாண்டில், மொத்த உற்பத்தியில் ஆந்திர பிரதேசத்தில் 17.85 சதவீத முட்டைகளும் தமிழ்நாட்டில் 15.64 சதவீத முட்டைகளும் தெலுங்கானாவில் 12.87 சதவீத முட்டைகளும் மேற்கு வங்காளத்தில் 11.30 சதவீத முட்டைகளும் உற்பத்தி   செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் பாதிக்கு மேல் தென்னிந்திய மாநிலங்களில் நடைபெறுகிறது.

2023 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்வதில் நெதர்லாந்து முதலாம் இடத்தையும் போலந்து இரண்டாம் இடத்தையும் இந்தியா 20-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. உலகில் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருந்தபோதிலும் உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியில் 20 ஆம் இடத்தையே பெற முடிகிறது.

உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா?

“சரியும் புத்தக வாசிப்பால் ஏற்படும் தீமைகள்?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம்.

இந்தியாவில் இருந்து 23 நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியாகிறது. ஓமன், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு நாடுகள், குவைத், இலங்கை மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்யும் பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கு மேல் தமிழகத்திலிருந்து (54.7%) ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை ஏற்றுமதியில் தமிழகம் முதலாம் இடத்தையும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும் கேரளா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழகத்திலிருந்து செய்யப்படும் முட்டை ஏற்றுமதியில் 90 சதவீதத்துக்கு மேல் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால்தான் நாமக்கல் முட்டை நகரம் என்று அழைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் லாரி தொழிலும் ஆழ்குழாய் அமைக்கும் தொழிலும் செய்யப்படுகிறது. தரமான பள்ளி, கல்லூரிகளை கொண்டதாகவும் நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது.

கட்டுரைகளை வரவேற்கிறோம்  

** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  

** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும்.  

** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1200 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 5.5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. 

நாமக்கல்லில் இருந்து தமிழ்நாடு, கேரளா மற்றும் அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கு தினமும் முட்டை லாரிகள் மூலம் செல்கின்றது. இதனைத் தவிர ஓமன் துபாய் கத்தார் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும் 24 லட்சம் முட்டை சராசரியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் இருந்து 50 முதல் 52 கிராம் எடையுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்யும் கத்தார் நாட்டின் அரசாங்கம் 60 கிராம் மற்றும் அதற்கு மேல் எடையுள்ள முட்டைகளை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்று புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 

ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு கோடி முட்டைகளை இந்தியாவிலிருந்து பெற்று வந்த ஓமன் நாட்டு அரசாங்கம் தற்போது உள்நாட்டு முட்டை உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை இறக்குமதிக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.  இதனால் நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

K.Singaraj, President, All India Poultry Products Exporters Assosciation

முட்டை ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் கோழிப்பண்ணையாளர்களும் கோழி பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் வர்த்தகர்களும் முட்டை உபயோகிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். முட்டையை ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்வதன் மூலம் நாட்டின் வருமானமும் தனிநபர்களின் வருமானமும் தொடர்ந்து நீடிக்கும். இந்த பிரச்சினையை  அரசு விரைவில் சரி   செய்ய வேண்டும் என்பதே  அனைவரின் கோரிக்கையாக உள்ளது. கோழி தீவன விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, போக்குவரத்து செலவுகள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால்     முட்டை உற்பத்தி தொழில் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று பூங்கா இதழுக்கு தொலைபேசி வழியாக வழங்கிய பேட்டியில் “அகில இந்திய கோழிப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நாமக்கல் கே. சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் நாடுகளின் புதிய முட்டை இறக்குமதி கொள்கையால் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கோடிக்கணக்கான முட்டைகள் நடுக்கடலில் இறக்குமதி செய்யும் நாடுகளின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. 

முட்டை ஏற்றுமதியில்  ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.  மத்திய அரசு உடனே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதே முட்டை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளாக உள்ளது.

முட்டை ஏற்றுமதி பிரச்சனையால் பாதிக்கப்படுவது முட்டை உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல. முட்டை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், முட்டை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மேல் மூட்டை ஏற்றுமதியால் இந்தியாவுக்கு கிடைத்த வந்த வருமானமும் அந்நிய செலவாணியும் குறைகிறது. 

கோழி தீவனம் விலை உயர்வு, தொழிலாளர்   ஊதிய உயர்வு, போக்குவரத்து செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஏற்கனவே முட்டை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை உடனடியாக சரி செய்வது அவசியமானதாக உள்ளது.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: மக்களின் உணவு பழக்கத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள முட்டை உற்பத்தி  ஏற்றுமதியிலும் சிறப்பான பங்கை வகிக்கும் தமிழகத்துக்கு முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சிக்கல் ஆனதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!

இதையும் படிக்கலாமே?  

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?  

ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

இதையும் படிக்கலாமே?

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!  

நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ்  குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்

நாட்டு நடப்புஅரசியல்
மாநிலம்
தேசம்
சர்வதேசம்
சிறப்பு படைப்புகள்
கருத்து
நேர்காணல்
அறிவு பூங்கா  
அரசு
நிர்வாகம்
அரசியல்
பிரச்சனைகள்
பாதுகாப்பு
அமைதி
வாக்காளரியல்  
பொருளாதாரம்சமூகம்
நிதி
உற்பத்தி
சேவைகள்
தொழில்
வர்த்தகம்
விவசாயம்
உணவு -வீடு  
மக்கள்
கல்வி – வேலை
ஆன்மீகம்-ஜோதிடம்
வாழ்க்கை
கலை – இலக்கியம்
பொழுதுபோக்கு
விளையாட்டு  
கதம்பம்நாங்கள்
நீதி -சட்டம்
குற்றம்
புலனாய்வு
இயற்கை
அறிவியல்
ஆரோக்கியம்
களஞ்சியம்  
நாங்கள் 
புரவலர்கள்
ஆதரிங்கள்
பங்களியுங்கள்  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles