Sunday, May 11, 2025
spot_img

தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ட்ரோன் யுத்தம் பற்றி அறிவோம்!

ட்ரோன் 

பொதுவாக “ட்ரோன்கள்” (drone) என்று நம்மால் அழைக்கப்படும் சாதனமானது ஆளில்லா வான்வழி வாகனங்கள் அல்லது ஆளில்லா குட்டி விமான அமைப்பு (unmanned aerial vehicles (UAVs) or unmanned aircraft systems). பறப்பது (flight mode) மற்றும் பாதையை வழிநடத்துவது (navigation) ஆகிய இரண்டு அடிப்படை தொழில்நுட்பத்தை கொண்டதுதான் ட்ரோன். இதற்காக அனைத்து வகையான ட்ரான்களும் சென்சார் (sensor) மற்றும் ஜிபிஎஸ் (gps) பொருத்தப்பட்டதாக இருக்கின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) ட்ரோன் பயன்பாட்டில் அதிக இடத்தை பிடிக்க தொடங்கியுள்ளது. ட்ரோன் என்பது ஆளில்லாத தானியங்கி விமான அமைப்பு என்ற நிலையில்   ட்ரோன் செல்ல வேண்டிய பாதை (route) மற்றும்   செய்ய வேண்டிய செயல்கள் (action) ஆகியவற்றை வழி நடத்த கட்டுப்பாட்டு இயக்க அமைப்பு (controller) ட்ரோனின்   வடிவமைப்புக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட தொலைவில் இருக்கும். இங்கிருந்து தான் மனிதர் மூலமாக அல்லது ரோபோட் அல்லது கணினி மூலமாக இந்த ட்ரோன் இயக்கப்படுகிறது. 

வகைகள்

200 கிராம் அல்லது அதற்கு கீழான எடை உள்ள   நானோ ட்ரோன்கள் (nano), ஒரு கிலோ எடை அல்லது அதற்கு கீழாக உள்ள சிறிய ட்ரோன்கள் (small), சுமார் 100 கிலோ எடை வரை உள்ள நடுத்தர ட்ரோன்கள் (medium), அதற்கு மேலாக எடையுள்ள பெரிய வகை (larger) ட்ரோன்கள்   என ட்ரோன்களை வகைப்படுத்தலாம். மூன்று மைல்கள் வரை பறக்கக்கூடிய கூடியவற்றை   என்றும் மிக நெருக்கமான சுற்றுவட்ட ட்ரோன் (very close range)  என்றும் 31 மைல்கள் வரை பறக்கக்கூடிய கூடியவற்றை நெருக்கமான சுற்றுவட்ட ட்ரோன் (close range) என்றும் 93 மைல்கள் வரை பறக்கக்கூடிய அவற்றை குறுகிய சுற்றுவட்ட ட்ரோன் (short range)  என்றும் நானூறு மைல்கள் வரை பரக்கக் கூடியவற்றை நடுத்தர சுற்றுவட்ட ட்ரோன் (medium range) என்றும் 400 மைல்களுக்கு மேல்  பறக்கக்கூடியவற்றை நீண்ட தூர ட்ரோன் (long range)  என்றும் கூறப்படுகிறது ட்ரோன் இயங்குவதற்கான சக்தியை வழங்குவதற்கு பெட்ரோல், ஹைட்ரஜன் எரிபொருள், செல்பேட்டரி மூல மின்சாரம் அல்லது சூரிய மின்சாரம் அல்லது அணுசக்தி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

பயன்பாடு

பொதுமக்களின் உபயோகத்துக்கும் (civilian use) தொழில் சார்ந்த பணிகளுக்கும் (professional use) ட்ரோன் பயன்படுத்துவதை   ஒரு வகையாகவும் ராணுவ நடவடிக்கைகளுக்கு (military use) ட்ரோன் பயன்படுத்துவதை மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம். பொதுவாக டிரோன் மூலம் புகைப்படங்களையும் (photography) வீடியோக்களையும் (videography) எடுப்பதை சாதாரணமாக திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் தொடங்கி பொது கூட்டங்கள் மாநாடுகள் போன்ற இடங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயத்திலும் ட்ரோன் பயன்பாடு தற்போது அங்கம் வைக்க தொடங்கியுள்ளது. போக்குவரத்தை கண்காணிக்கவும் (traffic monitoring) வானிலையை அறியவும் (whether monitoring) பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் ட்ரோன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. கடலிலும் நிலத்திலும் ஏற்படும் விபத்து (accidents), இயற்கை பேரிடர் (disaster) உள்ளிட்ட காலங்களில் காணாமல் போவோரையும் வாகனங்களையும் தேடும் பணிக்கும் மீட்பு பணிக்கும் (search and rescue) ட்ரோன் மிகவும் உதவிகரமாக உள்ளது.

ட்ரோன் யுத்தம்

எல்லை கண்காணிப்பில் (border monitoring) ட்ரோன் ராணுவத்துக்கு மிக உதவியாக உள்ளது. உள்நாட்டில் நடைபெறும் கிளர்ச்சி குழுக்களின் மறைவிடங்களை கண்காணித்து அறிந்து கொள்ளவும் (monitor) அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தவும் (attack) ட்ரோன்கள் பயன்படுகின்றன. இதைப்போலவே, இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தங்களில் குறிப்பிட்ட பகுதிகளை கண்காணித்து அங்குள்ள நிலைமைகளை அறியவும் அதற்கடுத்தபடியாக குறிப்பிட்ட கட்டிடங்களை அல்லது ராணுவ கேந்திரங்களை   அழிக்க ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தவும்   ட்ரோன் தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதையே ட்ரோன் யுத்தம் (drone warfare) என்கிறோம். 

சரித்திரம்

1849 ஆம் ஆண்டு ஆளில்லா விமானத்துக்கு முன்னோடியாக விளங்கக்கூடிய பலூன் தொழில்நுட்ப (balloon carrier) ட்ரோன் போன்ற வகையான தாக்குதல் முதன்முதலாக நடத்தப்பட்டது. இருப்பினும் காற்றின் திசை, அதன் வேகம் போன்றவை காரணமாக பலூன் தொழில்நுட்ப ட்ரோன் மிக அதிகமாக முன்னேறவில்லை. படிப்படியாக வளர்ச்சி பெற்ற ஆளில்லா விமான அமைப்பானது 1980 களுக்கு பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு ட்ரோன்கள் மூலம் மிக்ஸியோ எல்லையை மெக்சிகோ எல்லையை கண்காணிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியது. தற்போது ட்ரோன் தொழில்நுட்பம் பல நாடுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. சில நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்காக மேம்படுத்தி உள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ராணுவ ட்ரோன்கள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் வெளிநாட்டின் மீது யுத்தம் நடத்தும் போது அந்த நாட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் மனிதர்களின்   உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யா தொடர்ந்து ட்ரோன்கள் மூலமாக   உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: தற்போது நடைபெறும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்திலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles