Monday, October 13, 2025
spot_img

அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியன மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து

நாமக்கல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்களின் சார்பில் வரவேற்பு விழாவும் கல்லூரி  முதல்வர்   அருண் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது.

Student of Government Law College Namakkal, who has completed the 100 hour internship programme on consumer protection law under the guidance of Dr.V.Ramaraj, Former Consumer Court Judge and T.R. Arun, Principal of the College.

சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினையை தூண்டும் எண்ணங்களும் வெறுப்பு பேச்சுகளும் மாணவர்களுடைய இருக்கக் கூடாது. இவற்றை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே சமூக ஒற்றுமையும் தேசத்தின் வளர்ச்சியும் ஏற்படும். சுய முன்னேற்றமும் சமுதாய முன்னேற்றமும் இரண்டு கண்கள் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றம், சமூக நீதி போன்றவற்றின் மூலமே தேசத்தின் வளர்ச்சியை எட்ட முடியும். தேசம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தனி மனிதர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று டாக்டர் வீ. ராமராஜ் கூறினார்.

வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் மூன்று சம பரிமாணங்களாகும்.  இந்த பரிமாண மதிப்புகள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளின் தரத்தை தீர்மானிக்கின்றன. வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின்   பரிணாமங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளாகும். என்று டாக்டர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

கால மாற்றத்துக்கு ஏற்றவாறு புதிய கல்வி பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும். வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் கல்வியாகும். வாக்காளரியல் கல்வியானது இன்னும் அரசியல் அறிவியல் பட்டப் படிப்புகளில் வாக்காளர்கள் குறித்த படிப்பு மற்றும் தேர்தல் நிர்வாகம் போன்ற துணைப் பகுதியாக இருந்து வருகிறது. அரசியல் அறிவியல் கல்வியும் வாக்காளரியல் கல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றாலும் உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு போதிக்கப்படுகிறது ஆனால், ஒரு சதவீதத்துக்கு கீழான பல்கலைக்கழகங்களில் மட்டுமே மக்களாட்சி மற்றும் தேர்தல் நிர்வாகம் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன என்று அவர் பேசினார்.

Dr.V.Ramaraj, Tamil Nadu Lokayuta is issued certificate to students

சட்டமே மேலானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய சட்டத்தை உருவாக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை மக்களிடம் உள்ள உச்ச அதிகாரமாகும். இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையம் போன்று பல்வேறு நாடுகளில் உள்ள தேர்தல் நடத்தும் அமைப்புகள் குறித்த ஒப்பீடுகள் மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்கள் குறித்த ஆய்வுகள் போதுமான அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. மக்களாட்சி மற்றும் தேர்தல் முறைகள் குறித்த ஆய்வுகளை சட்டக் கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்தல் நடைமுறைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் ஊழலை கண்டறிந்து தடுக்க முடியும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.

Dr.V.Ramaraj, Father of Voterolgoy

ஒவ்வொரு அரசியல் கட்சியும் கொள்கையையும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எத்தகைய செயல்திட்டத்தை வழங்க உள்ளது என்பதையும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். கொள்கைகளையும் செயல் திட்டத்தையும் அரசியல் கட்சிகள் அவர்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொள்கையோ செயல்திட்டமோ இல்லாத தனி மனிதர்கள் மீதான போதையில் இருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் காப்பாற்ற இயலும் என்று அவர் தெரிவித்தார். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து:  “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj) அவர்களால் உருவாக்கப்பட்டது, மேலும் அவர் வாக்காளரியலை வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் பற்றிய கல்வி என்று என்று வரையறுத்துள்ளார். “வாக்காளரியல்” என்ற சொல் ஆகஸ்ட் 20, 1999 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் வெளியிடப்பட்ட தினமணி தமிழ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்கும் தன்னார்வ அமைப்புகளின் மாநாடு, அவருக்கு “”வாக்காளரியலின் தந்தை (Father of Voterology)” என்ற பட்டத்தை வழங்கியது. “வாக்காளரியல் (Voterology)” என்பது உண்மையான ஜனநாயகம் மற்றும் உலக அமைதிக்கான பாதை என்று அவர் வலியுறுத்துகிறார். 1999 முதல், “வாக்காளரியல்” ஒரு கல்வித் துறையாக (academic field) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார், மேலும் “வாக்காளரியல்” கல்வி  உண்மையான ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதிக்கான பாதை என்று வலியுறுத்துகிறார்.

Dr.V.Ramaraj, Tamil Nadu Lokaukta, Freshers day Programme at Government Law College, Namakkal

வழக்கறிஞராகவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் 33 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டவர் டாக்டர் வீ. ராமராஜ். இவர் தற்போது மாநில அளவிலான ஊழல் புகார்கள் மீதான விசாரணை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.  டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் காவல் நிர்வாகத்தில் இளம் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.  அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக சட்டம், கிரிமினாலஜி மற்றும் காவல் நிர்வாகம், மனித உரிமைகள் ஆகியவற்றில் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார். ஜர்னலிசம் மற்றும் மக்கள் தொடர்பியல், சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல் ஆகியவற்றிலும் முதுகலை பட்டம் பெற்றவராவார். குற்றவியல் நீதி குழந்தைகள் உரிமைகள், சரித்திரம் உள்ளிட்டவர்களிடத்திலும் பட்டங்களை பெற்றுள்ளார்.

The term “voterology” was coined by Dr. V. Ramaraj and he has defined voterology as the study of vote, votes, and elections. The term “Voterology” made its debut in a publication on August 20, 1999 in Dinamani, Tamil newspaper, by the Indian Express Group. In 2000, conclave of participating voluntary organizations of national voter’s awareness campaign, conferred the title “Father of Voterology” to him. Since 1999, he advocates for voterology to be recognized as an academic field and insists that study of voterology is road to the real democracy, good governance and peace.

In last 33 years, Dr. V. Ramaraj has served as a lawyer, member of the Tamil Nadu Commission for Protection of Child Rights and a Consumer Court Judge.  He is currently serving as a member of the Tamil Nadu Lokayukta, the state-level body that inquire corruption complaints against public servants. Hon’ble Dr V. Ramaraj He is holding doctorate in Administration of Justice. He is post graduate in Constitutional and International law, Labour and administrative law, Police Administration, Human Rights, Criminology and Police Science, International Relations, Political Science, Public Administration and Journalism and Mass Communication.  Further, he obtained post graduate diplomas in Criminal Justice, Child Rights and Protection and Journalism.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles