30 ஜூலை – 1886
இந்தியாவில் முதன் முதலாக மருத்துவர் பட்டத்தை பெற்ற முதல் பெண்மணி தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராாயணசாமி – சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். முத்துலட்சுமி.
பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் சின்ன தாத்தா (தாத்தாவின் தம்பி) முத்துலட்சுமியின் அப்பா. ஆக, ஜெமினி கணேசனுக்கு முத்துலட்சுமி அத்தை முறை. ஜெமினி கணேசன் மீது அன்பு கொண்ட முத்துலட்சுமியின் அப்பா, இறக்கும் முன்பு ஜெமினி கணேசனுக்கும் சில சொத்துகளை எழுதி வைத்து கார்டியனாக முத்துலட்சுமியை நியமித்தார் என்று ஜெமினி கணேசன் தமது சுயசரிதையில் எழுதியிருப்பார்.
கல்வி
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பு இருந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது. ஏனெனில், அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் படித்ததில்லை. அவர் பிற ஆண் மாணவர்களின் படிப்பு கெட காரணமாக இருப்பார் என்று கல்லூரி முதல்வர் கருதினார். ஆனால் மகாராஜா பைரவத் தொண்டைமான் தலையிட்டு அவர் படிக்க அனுமதித்ததோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கினார். 1912ல் அவர் மருத்துவர் ஆனார்.
திருமணம்
மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28-வது வயதில் சாதி மறுத்துத் திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி. தம்மை சமமாக நடத்தவேண்டும், தனது விருப்பங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு அவர் ஒப்புக்கொண்டார்.
சட்ட மேலவை துணைத் தலைவர்
1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது.
சமூகப் பணி
தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்கு தமது வீட்டில் அவ்வை விடுதி என்ற பெயரில் 1930ல் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி. 1936ல் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாறுக்கு மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.
மருத்துவப்பணி
புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்திருந்த டாக்டர் முத்துலட்சுமி, புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார். நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. நாட்டு மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிக்காக, 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
இறப்பு
22, ஜூலை, 1968 அன்று முத்துலட்சுமி ரெட்டி உயிரிழந்தார். அப்போது வானொலியில் பேசிய இந்திரா காந்தி, முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று உயர்ந்த இடங்களைப் பிடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினார்.
முதலில் இனிக்கும் காதலும் நட்பும் போகப்போக எப்படி மாறுது பாருங்கள் உங்களுக்கும் இந்த அனுபவம் இல்லாமல் இருக்காது – தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளரான திரு சிவ கணபதி
மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஆமாங்க நிலையில்லாமல் மாறுவதுதான் நிலையானது. உருண்டோடிடும் பணம் காசு போல மனசும் மாறிக்கொண்டேதான் இருக்கும். இந்த நட்பு இருக்கிறது பாருங்க, நினைவு தெரிந்த காலத்தில் இருந்து எத்தனை பேரோடு ஒட்டி உறவாடி பட்டுப் பழகி இருப்போம். இன்று அவர்களின் பல பேரை நினைத்துப் பார்த்தால் நினைவுக்கு வரவே மறுக்கிறார்கள் .
புதிதாகப் பழகும் பொழுது துவக்கத்தில் என்ன சொன்னாலும் கேட்பார்கள். இந்த இடத்தில் அரை மணி நேரம் உட்காருங்கள், சிறு வேலையை முடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னால் அரை மணி நேரம் என்ன அரை நாளும் கூட சலியாது காத்திருப்பார்கள். அதிக நேரம் போன் பாக்காதீங்க, அது நல்லது இல்லை என்று சொன்னால் ஆரம்பத்தில் காதிலே வாங்கி கையிலே தொடக்கூட மாட்டார்கள். நம்முடைய பேச்சுக்கும் மதிப்பு மரியாதையும் இருக்கும்.
நம் கிட்ட பேசினால் மனசுக்கு நிம்மதியாக இருக்கு என்று சொல்லுவார்கள். நாம் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். வாழ்க்கை நெறியிலும் இதை எல்லாம் செய்யாதே. இது நல்லதல்ல என்று சொன்னால் கருத்துடன் கேட்பார்கள். கேட்டபடி நடப்பார்கள். அவர்கள் வீட்டில் என்ன நடந்தாலும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுவார்கள். நம்மை பார்க்காமல் உறங்கப் போக மாட்டார்கள். அவ்வளவு அதிக பாசப்பிணைப்பு இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள். நமக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்.
சிறிது காலத்துக்குப் பிறகு நாம் ஏதாவது சொல்லும் போது எதிர்ப்பு வரும். ஏன்? எதற்காக செய்ய வேண்டும்? என்று. அரை மணி நேரம் போன் பார்த்தால் உனக்கு என்ன பிரச்சனை? என்று கேட்பார்கள். நீ அதைச் செய்யாதே என்று முதலில் சொன்னபோது கேட்டவர்கள் இப்பொழுது அதனால் உனக்கு என்ன பிரச்சனை? என்று நம்மையே மடக்கி விடுவார்கள். நீ என்னை சந்தேகப்படுகிறாயா ? என்று நம் மனதில் முள்ளாய் குத்துவார்கள். என்னை கொஞ்சம் நிம்மதியாக விடு என்று சொல்வார்கள். பிறகு நமக்கும் மரியாதை இருக்காது. நமது பேச்சுக்கும் மரியாதை இருக்காது. அவர்கள் வீட்டு விசேஷத்தைக் கூட மூன்றாவது நபர் சொல்லித்தான் தெரிய வரும். அந்த அளவுக்கு நாம் வேண்டாத மனிதனாகி விடுவோம்.
அப்படி மாறும் உறவுகள், கணவன் மனைவியாக கூட இருக்கலாம். பெத்த பிள்ளைகளாக கூட இருக்கலாம். உற்ற உறவினர்களாக கூட இருக்கலாம். இணைபிரியாத நண்பர்களாகவும் தோழியாகவும் இருக்கலாம். இது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும். உண்டா இல்லையா? மாறிவரும் மாற்றத்தை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட முத்துலட்சுமி அவர்களின் சமூக பங்களிப்பை போற்றுவோம்.