விவசாயியை வம்புக்கு இழுத்த படித்த மேதை என்ற தலைக்கனம் கொண்டவர்
ஒரு பேராசிரியர் ரயிலில் ஒரு விவசாயியின் அருகில் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். சலிப்படைந்த பேராசிரியர், நேரத்தை கடத்த ஒரு விளையாட்டை முன்மொழிய முடிவு செய்கிறார். A play between a farmer and professor.
“நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்,” என்று பேராசிரியர் கூறுகிறார். “உங்களால் பதில் சொல்ல முடியாவிட்டால், நீங்கள் எனக்கு ரூ 5 கொடுங்கள். பிறகு, நீங்கள் என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள். என்னால் பதில் சொல்ல முடியாவிட்டால், நான் உங்களுக்கு ரூ 500 தருகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” விவசாயி சம்மதத்துடன் தலையசைக்கிறார்.
பேராசிரியர், “பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் என்ன?” என்று தொடங்குகிறார். விவசாயி அமைதியாக ரூ 5 எடுத்து பேராசிரியரிடம் கொடுக்கிறார். இப்போது விவசாயியின் முறை. “மலை ஏறும்போது மூன்று கால்களும், கீழே வரும்போது நான்கு கால்களும் உள்ள விலங்கு எது?” என்று அவர் கேட்கிறார்.
பேராசிரியர் தடுமாறினார். அவர் தனது மூளையை குழப்புகிறார், தர்க்கரீதியான விளக்கங்களைத் தேடுகிறார், மேலும் தனது நோட்புக்கைக் கூட ஆலோசிக்கிறார், ஆனால் அவரால் ஒரு பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விரக்தியடைந்த அவர், விவசாயியிடம் ரூ 500 -ஐ கொடுக்கிறார். விவசாயி புன்னகையுடன் பணத்தை எடுத்துக்கொண்டு சாய்ந்து தூங்குகிறான்.
ஆர்வத்துடனும் அதை விட்டுவிட விருப்பமில்லாமலும், பேராசிரியர் விவசாயியை எழுப்பி, “சரி, அது என்ன விலங்கு?” என்று கேட்கிறார். விவசாயி அமைதியாக ரூ 5 எடுத்து, பேராசிரியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் செல்கிறார். Do not under estimate any one.
பொருளாதாரம் தெரியும் என்ற நினைப்பில் தந்தையின் பொழைப்பை கெடுத்த மகன்
ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார் ருசியான வித விதமான வடைகள் சுடுவதில் வல்லவர். அது தான் அவரது தொழிலும் கூட அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் எந்த செய்தித்தாள்களையும் அவர் படிக்க மாட்டார். அதனால் டிவி பார்க்கும் பழக்கமும் அவருக்கு இல்லை. அதனால் அவரது முழுக் கவனமும் அவரது வடை தொழிலில் மட்டுமே இருந்தது. விதவிதமான ருசியான வடைகளைத் தருவதால் அதுவும் குறைவான விலையில் தரமாகத் தருவதால் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது. வருமானமும் நிறைவாக இருந்தது அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் சென்னையில் மிகப் புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் பொருளாதாரப் (economics) படிப்பை படித்து வந்தான். பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பான். விடுமுறையில் ஊருக்கு வந்தான். அப்படியே தன் தந்தையின் கடைக்கும் போனான். அங்கே வடைகளுக்காக விதவிதமான மளிகை சாமான்கள், காய்கறிகள் எண்ணெய் வகைகள் என ஏகப்பட்ட சரக்குகளை தன் தந்தை வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தான்.
நேராக தந்தையிடம் சென்றான், “என்னப்பா நீ, முட்டாத்தனமா இருக்க, நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்குறது உனக்கு தெரியாதா? பல ஆட்டோமொபைல் கம்பனிங்க சங்கடத்துல இருக்கு. நிறைய ஷோரூம்களை மூடிட்டாங்க நிறைய பேருக்கு வேலை போச்சு. இது அப்படியே எல்லா இன்டஸ்ட்ரிக்கும் பரவ போகுதாம். பணக் கஷ்டம் வர போகுதாம், பேங்குங்க எல்லாம் திவாலாகப் போகுதாம். அதனால பணத்தை சேர்த்து வையி இப்படி கன்னாபின்னான்னு சரக்குகளை வாங்கி குமிக்காதே” என்று தான் படித்த மைக்ரோ எக்கனாமிக்ஸ் (micro economics) மற்றும் மேக்ரோ எக்கனாமிக்ஸ் (macroeconomics) கலந்து நீண்டதாக ஒரு ஸ்பீச் தந்தான்.

போதாக்குறைக்கு பொருளாதார மந்த நிலை பற்றி பேஸ்புக்கில் எழுதப்பட்ட ரைட்டப்களையும், வாட்சப்பில் வரும் தகவல்களையும் வேறு தன் தந்தைக்கு காட்டினான். இதையெல்லாம் பார்த்த அவனது தந்தையும், “ஆஹா நமக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாது, நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குறவன் அவன் சொன்னா தப்பா இருக்காது,,” என்று எண்ணினார். உடனடியாகத் தன்னிடம் இருக்கும் சரக்குகளைப் பாதியாக குறைத்தார். வாங்கிய இடத்திலேயே அதைத் திரும்பத் தந்தார்.
ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார். விற்பனையையும் குறைத்தார். அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார். உளுந்த வடையை மட்டுமே போடத் துவங்கினார். உளுந்த வடையை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்கு வந்தனர் அதைப் பார்த்ததும் மேலும் பதறினார். விற்பனை மந்தமாவதால் நாளை முதல் என் வடை கடை காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது என்ற போர்டை வைத்து கடையை மூடினார்.
தன் மகனை அழைத்தார், “ஆமாப்பா நீ சொன்ன மாதிரியே நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்கு நம்ம கடைக்கு வர்ற ஆட்கள் கூட குறைஞ்சுகிட்டே போயி கடைசில யாருமே வரலை. வியாபாரமும் படுத்திருச்சி இருக்குறதையாவது காப்பாத்தனும்ன்னு நானும் கடையையே மூடிட்டேன்” என்றார்.
நன்றாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்த வடை கடையை எதற்காக அவர் மூடினார் என்பது மட்டும் அவரது வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை. Reading economics, practice in economics are different experience.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: தமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை ஒருபோதும் வளர்ந்து கொள்ள கூடாது.