மாணவனிடம் மாட்டிக்கிட்ட அப்பாவி டீச்சர்
டீச்சர்: ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் …
டீச்சர்: வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர்… முயற்சி பண்ணினேன். ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை.
டீச்சர் ;ஏன்டா?
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி.
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர். குளிக்கலல்ல, எப்பிடிப் போறது..?
டீச்சர் : குளிக்கலையா,ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல.
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?,சோம்பேறி
மாணவன்: டீச்சர், லூசு மாதிரிப் பேசாதீங்க, சொன்னேன்ல கரண்டு இல்லன்னு
டீச்சர்: அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன். எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே,பொய்யா சொல்ட்ற.
மாணவன்:உண்ம தான் டீச்சர், எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல, கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க.
டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல.
மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி… லைன் மேன் தான பீசு போடணும்… அவரு வரல.
டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான.
மாணவன்; வரச்சொல்லலாம்தான், ஆனா முடில.
டீச்சர்;ஏன், செல்லு ரீசார்ஜ் பண்ணலியா.
மாணவன்; அதுலாம் இருக்கு, செல்லுல சார்ஜ் தான் இல்ல.
டீச்சர்: அது ஏன்.
மாணவன்; டீச்சர் நீங்க லூசேதான். அதான் மொதல்லயே சொன்னேன்ல, எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு.
தற்காலிக அரசு ஊழியருக்கு இத்தனை கோடி சொத்துக்களா? அதிரடி காட்டிய லோக் ஆயுக்தா.
கர்நாடக அரசின் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கர்நாடகாவில் கொப்பல் மாவட்டம், நிலோஜிபுராவில் உள்ள அலுவலகத்தில் தற்காலிக எழுத்தாக பணியாற்றி வந்துள்ளார் கலகப்பா நெடகுந்தி. இவருக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூபாய் 15,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் ஒரு இன்ஜினியருடன் சேர்ந்து 96 உள்கட்ட அமைப்பு திட்டங்களுக்கு போலி ரசீதுகளை தயாரித்து ரூபாய் 72 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக கலகப்பா நெடகுந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடகா முழுவதும் லோக் ஆயுக்தா போலீஸாரால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அரசு அதிகாரிகளை குறிவைத்து அவரது வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
கலகப்பாவின் வீடு மற்றும் அவர்கள் அவருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸாரால் சோதனைகள் நடத்தப்பட்டன.. சோதனை முடிவில் நகை பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரூபாய் 15 ஆயிரத்தில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தவரிடம் நான்கு வீட்டுமனைகள், 24 வீடுகள், 40 ஏக்கர் விவசாய நிலம், கிலோ கணக்கில் வெள்ளி மற்றும் தங்க நகைகளும் கார்களும் இரு சக்கர வாகனங்களும் இருந்துள்ளது. அவர் பெயரிலும் அவரது மனைவி மற்றும் சகோதரர் பெயரிலும் சுமார் 30 கோடிக்கும் மதிப்புக்கும் அதிகமான சொத்துக்களை அவர் வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினரால் நடத்தப்பட்ட இந்த சோதனை பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாததால் புகார்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட பேராசிரியை வசந்தி தேவி காலமானார். இவர் இப்படிப்பட்டவரா?
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட பேராசிரியை வசந்தி தேவி அவர்கள் நேற்று முன்தினம் காலமானார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்பது பலருக்கு தெரிந்தாலும் அவரது திறமைகளும் தமிழகத்துக்கு ஆற்றியுள்ள சேவைகளும் பலருக்கு தெரியாது.
திண்டுக்கல்லில் நகராட்சி தலைவராக இருந்து வரும் வழக்கறிஞருமான வி. வெங்கடதாஸ் மகளான வசந்தி தேவி கடந்த 1938 ஆம் ஆண்டு பிறந்தவராவார். இவர் சென்னை ராணி மேரி கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் படித்த பின்னர் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவராவார் இந்தியா திரும்பிய பின்னர் அவர் படித்த ராணி மேரி கல்லூரியிலேயே பேராசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார் முன்னதாக கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
1992 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக திறம்பட பணியாற்றியவர் வசந்தி தேவி. பல்கலைக்கழகத்தில் பிரதான கட்டிட உருவாக்கமானது இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவரது காலத்தில் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வி திட்டங்கள் தீட்டப்பட்டன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோதுதான் மனித உரிமைகள் குறித்து அடிப்படை படிப்பு ஒன்றைத் துவங்கினார்.
கடந்த 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் வசந்தி தேவி. அப்போது பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதோடு பலதரப்பட்ட பெண்களின் கருத்துக்கு ஏற்ப கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தினார்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நேர்மையும் துணிச்சலும் அறிவாற்றலமிக்க சிறந்த ஆளுமையான வசந்தி தேவியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.