Wednesday, July 23, 2025
spot_img

உலகச் செய்திகள், தேச செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி! 

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “என்ன சாமி செய்திகள்?”என்றதும் “செய்திகள் இல்லாத நிமிடம் கிடையாது” என கூறிவிட்டு கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

“ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துமாறு உக்ரைன் அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டது சில மாதங்களுக்கு முன்பு, ஆனால், இன்று வரை போர் நிற்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்றார் அமெரிக்க அதிபர். இதில் யாருடைய தலையீடும் இல்லை, பாகிஸ்தான் இந்தியா ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடங்கியதால் போரை நிறுத்தினோம் என்று கூறிவிட்டார் இந்திய பிரதமர். ஈரான் இஸ்ரேல் போரை நான் தான் நிறுத்தினேன் என்றார் அமெரிக்க அதிபர். அமெரிக்கா கெஞ்சியதால் நாங்கள் போரை நிறுத்தினோம் என்று அறிவித்தார் ஈரான் அதிபர். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர புறப்பட்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் 56,000 உயிர்கள் பலியாகி உள்ளன. அங்கு பசியும் பட்டினியும் தாண்டவம் ஆடுகிறது. எப்படியாவது காசாவில் உள்ளவர்களை காலி செய்துவிட்டு அந்த பிராந்தியத்தை தமது ராணுவ தளமாக துடிக்கிறார் அமெரிக்க அதிபர். அமைதியான நாடுகளில் ஒன்றாக விளங்கும் டென்மார்க் கிரீன்லாந்தில் போர் பயிற்சிகளை மேற்கொள்கிறது. ஏனெனில், டென்மார்க்கின் கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கிறார் அமெரிக்க அதிபர். ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டிருக்க வேண்டும் தனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நோபல் பரிசு தேர்வு குழு தாராளமய சிந்தனைகளை கொண்டவர்களாக உள்ளதால் தமக்கு தரவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார் அமெரிக்க அதிபர். ஒருபுறம் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆனால், சிந்திக்க பல சங்கதிகள் உள்ளன” என்றார் வாக்காளர் சாமி. 

“தெற்காசியாவில் இந்தியாவின் மதிப்பை குறைக்க சீனா ஏதோ முயற்சிப்பதாக தெரிகிறதே சாமி” என்றேன் நான். “இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டதாக சார்க் (SAARC)  எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் விதிகளின்படி ஆண்டுதோறும் இந்த நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்பட வேண்டும் ஒரு நாட்டின் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அந்த மாநாடு ரத்.து செய்யப்படும். இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதால் அடிக்கடி இந்த மாநாடு நடப்பதில்லை. இதனால், தெற்கு ஆசியாவில் ஒரு நாடுகளின் சங்கத்தை புதிதாக ஆரம்பிக்க பாகிஸ்தானும் சீனாவும் முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது. இதற்காக பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு தொடங்கினால் மாலத்தீவும் இலங்கையும் நேபாளமும் அந்த அமைப்பில் உறுப்பினராகி விடுவார்கள் என்பதில் மாற்றம் இல்லை. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் தவிர்த்து விட்டு ஒரு அமைப்பை உருவாக்க சீனா முயற்சிப்பதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.

“சர்வதேச செய்திகள் போதும் சாமி! உள்ளூர் செய்திகளுக்கு வாருங்கள்” என்றேன் நான். “அரசியலமைப்பு சின்னங்களை தவிர்த்து விட்டு காவி வர்ண கொடியை தாங்கி இருக்கும் சாமி ஒன்றின் சிலையை கேரளாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஆளுநர் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக போராட்டங்கள் கேரளாவில் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த விழாவில் விவசாய துறை அமைச்சர் பிரசாத் பங்கேற்றார். அப்போது காவிக் கொடியுடன் கூடிய பாரத மாதா  படத்திற்கு ஆளுநர் மாலை அணிவித்து மரியாதைசெய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பிரசாத் விழாவை புறக்கணித்தார். ஆளுநர் மாளிகையில் சாரண சாரணியர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள கேரள பொது கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி  பங்கேற்றார்.. பரிசளிப்பு தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த காவி கொடி யுடன் கூடிய பாரத மாதா உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை கண்டித்து அமைச்சர் சிவன் குட்டி விழா நிகழ்ச்சிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். பொதுவான நிகழ்ச்சியில் மத மற்றும் அரசியல் சின்னங்களைப் பயன்படுத்தக்கூடாது. அரசியலமைப்பு அங்கீகாரம் செய்யாத, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சின்னமான பாரத மாதா சிலையை ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தக்கூடாது. ஆளுநர் மாளிகையை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவான இடமாக ஆளுநர் கூடாது மாற்ற முயற்சிக்க கூடாது என்கிறார்கள் கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சியான காங்கிரஸும்.” என்றார் வாக்காளர் சாமி

“தெலங்​கானா பாஜக எம்​எல்​ஏ​வான ராஜாசிங் நேற்று பாஜக​விற்கு ராஜி​னாமா செய்​தார். இது குறித்துராஜாசிங் கூறுகையில், நான் பாஜக​வின் எம்எல்​ஏவாக இங்கு உள்​ளேன். கட்​சிக்​காக பாடு​பட்டு வரு​கிறேன். மாநில பாஜக தலை​வ​ராக பதவி வகிக்க எனக்கு முழு தகு​தி​யும் உள்​ளது. இதற்​காக நான் விண்​ணப்​பிக்க விரும்​பினேன். ஆனால், என்னை பாஜக​வினர் தடுத்து விட்​டனர். ஆதலால் நான் பாஜக​விலிருந்து வில​கு​வ​தாக மாநில கட்சி தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான கிஷண்​ ரெட்​டிக்​கு கடிதம்​ எழு​தி உள்​ளேன்​ என தெரிவித்துள்ளார்​” என்றார் வாக்காளர் சாமி. 

சமீபத்தில் பாண்டிச்சேரியில் பாஜகவின் இரண்டு நியமன எம்எல்ஏக்களும் ஒரு அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார்கள் சாமி” என்று என்றேன்.“ ஆந்திராவில் பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது அதிருப்தியால், ஆனால், பாண்டிச்சேரி நிலைமை வேறு. அதற்கும் இதற்கும் எதற்கு முடிஞ்சு போடுகிறாய்” என செல்லமாக கூறிவிட்டு அடுத்த செய்திக்கு தாவினார் வாக்காளர் சாமி

“போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் திரிபுராவை சட்டவிரோத போதை பொருள் கடத்தலுக்கான வழித்தடமாக பயன்படுத்துகின்றன என்று கடந்த 26 ஆம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தின விழாவில் கலந்து கொண்ட திரிபுரா முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 103 சதவீதம் இந்த ஆண்டு திரிபுரா வழியாக போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது என்று அவர் பேசி உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது” என்றார் வாக்காளர் சாமி. “கொஞ்சம் தமிழ்நாட்டுச் செய்திகளையும் சொல்லுங்கள் சாமி” என்றேன் நான்.

“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதிமுகவிலிருந்து ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் பேசியது பல அதிர்வலைகளை தமிழக அதிமுகவில் ஏற்படுத்தி உள்ளது. இதனை மனதில் கொண்டு அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் பேசியுள்ளார். விரைவில் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தை கூட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவிக்கக்கூடும். புது தில்லிக்கு சென்ற அன்புமணி ராமதாஸ் திரை மறைவில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை பார்த்து பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலை ஏற்பட்டால் வரும் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.

“சிவகங்கையில் காவல் நிலையத்தில் வாலிபர் மரணம் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதே சாமி” என்றேன் நான். “காவல் நிலையத்தில் வாலிபர் இறந்த செய்தி கேட்டு சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட காவலர்களை   இடைநீக்கம் செய்திருக்கிறது மாநில அரசு. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை எடுத்துக்கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கருத்து தெரிவித்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்களை கொலை குற்றத்திற்கான பிரிவின் கீழ் தனிப்படை கைது செய்துள்ளது. இதனுடைய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கி இருக்கிறது” என்றார் வாக்காளர் சாமி. 

“திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று மதிமுக அறிவித்துள்ளதே சாமி” என்றேன் நான். “திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அந்த கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியில் செல்வதாக தெரியவில்லை தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன திமுக கூட்டணியில் இணைய முயற்சிப்பதாக தெரிகிறது அதே சமயத்தில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் வந்து விட வேண்டும் என்று அதிமுகவும் பாஜகவும் கருகின்றன. அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும் அவ்வாறு கூட்டணி ஏற்பட்டால் திமுகவுக்கு கடுமையான போட்டியாகவே அண்ணா திமுக கூட்டணி இருக்கும்” என கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாக்காளர் சாமியின் செய்திகள் பல உண்மைகளை தொகுத்து வழங்குகிறது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles