Advertisement

திட்டமிடப்பட்ட பாலியல் தாக்குதல்களா? பொருளாதார மந்தமா? யார் ஆதவ் அர்ஜுன்? சர்வதேச படிப்பு என்றால்? என்பது உள்ளிட்ட பல கருத்து மூட்டையுடன்  வாக்காளர் சாமி.

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்.. 

“கடந்த சில தினங்களில் உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சி கவிழ்ப்புகள் நடந்துள்ளது.   பிரான்ஸ் (France) நாட்டில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வாக்களித்தன.  பிரதம அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் ஆதரவின்றி தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன” என்றார் வாக்காளர் சாமி.

“சிரியாவின் (Syria) அரசை எதிர்த்து போராடி வந்த அமைப்பு சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி ஆட்சி செய்த வந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரையும் கைப்பற்றியுள்ளது.  நாட்டின் தலைநகரம் கைப்பற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அந்த நாட்டின் அதிபர் ரகசியமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சென்ற விமானம்   ரேடாரில் இருந்து காணாமல் போனதால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எனக் கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ரஷ்யா (Russia) அரசியல் அகதியாக அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதே சமயத்தில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு குழப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம் அந்த நாட்டுக்குள் நுழைந்து சில நிலப்பரப்புகளை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சுவாமி.

“தென்கொரியாவில் (South Korea) அந்த நாட்டு அரசாங்கத்தால் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவசரநிலை அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் அவசரநிலை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் தோன்றியுள்ளன. தென்கொரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான காட்சிகள் நிலவுகின்றன.  உக்கரைன் (Ukraine) தொடர்ந்து போரை நடத்தக் கூடாது என்று அமெரிக்கா (America) அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த நாட்டிலும் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றார் வாக்காளர் சாமி.

“அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 அன்று டிரம்ப் (Donald Trump) பதவி ஏற்க உள்ளார். இதன் பின்னர் அமெரிக்காவில் சமீப காலத்தில் குடியுரிமை பெற்றவர்களின் நிலை பரிசீலிக்கப்பட்டு குடியுரிமை ரத்து செய்யப்படுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.  அமெரிக்காவில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் (Africa, Latin America) இருந்து எவ்வித ஆவணங்களும் இல்லாமல் அமெரிக்காவில் வசித்து வரும் மக்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதி.  அமெரிக்காவில் ஏற்கனவே குடியுரிமை (citizenship) பெற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி (illegal immigration) வசிப்பவர்களை உடனடியாக வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் சவால்கள் உள்ளன. அமெரிக்கா அரசாங்கத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனை கடுமையான பொருளாதார மந்தத்தை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி (tax) விதிக்கப்படுமோ? என்ற அச்சம் வெளிநாட்டு வர்த்தகர்களுடைய ஏற்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.

“உலகச் செய்திகளாகவே வாசிக்கிறீர்களே, உள்ளூர் செய்திகள் எதுவும் இல்லையா?” என்றேன் நான். “உனக்கு எப்போதுமே அவசரம்தான்” என்று செல்லமாக கோபித்துக் கொண்டு தொடர்ந்தார் வாக்காளர் சாமி. “மகாராஷ்டிராவில் மத்தியில் ஆளும் கட்சியில் தேர்தல் வெற்றி அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதே சமயத்தில் இந்தியா கூட்டணியில் தான் தலைமை வைக்க தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளதும் அதற்கு சரத்பவர் ஆதரவு தெரிவித்துள்ளதும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் நடைபெற்ற தேர்தல்களில் இறுதி நேரத்தில் வாக்குப்பதிவு அதிகரித்து வாக்குப்பதிவில் மோசடி செய்யப்பட்டதன் காரணமாகவே பெரும்பாலான இடங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றதாக கருத்துக்கள் பரவத் தொடங்கி இருக்கின்றன இருப்பினும் இத்தகைய கருத்துகள் நிரூபிக்கப்படும் வரை அவற்றிற்கு உயிர் கிடையாது” என்றார் வாக்காளர் சாமி.

“அதானி விவகாரம் உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளால் கையில் எடுக்கப்பட்டு பாராளுமன்றத்தின் குளிர்காலம் கூட்ட தொடர் தொடங்கியது முதலே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில மசோதாக்களை சட்டமாக நிறைவேற்றுவதில் ஆளும் கட்சி தொடர்ந்து பணியாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ஒரே நாடு – ஒரே தேர்தல்” (one nation-one election) நடைமுறைக்கான அரசியலமைப்பு சட்ட மசோதா இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவதாக தெரியவில்லை. இருப்பினும் இறுதி நேரத்தில் திடீர் நிகழ்ச்சி நிரல் (agenda) மாற்றம் மூலமாகவும் கொண்டுவரப்படலாம்” என்றார் வாக்காளர் சாமி.

“தமிழகச் செய்திகளை கூறுங்களேன் சாமி” என்றேன் நான். “தமிழகத்தில் தொடங்கியுள்ள சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் (winter session), மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்று தமிழக முதலமைச்சராக அறிவித்திருப்பது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதங்களுக்கு நிவாரணம் எதுவும் மத்திய அரசால் தற்போது வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது.  பேரிடர் (disaster) நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறவும் பொது பிரச்சனைகளை சரி செய்யவும் இயலும்” என்றார் வாக்காளர் சாமி.

“திருப்பூர் மாவட்டத்தில் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டிருப்பது கொங்கு மண்டலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விவசாய நிலங்களில் அங்கேயே வசித்து வரும் மக்களுக்கு இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இத்தகைய சம்பவங்கள் சில நடந்துள்ளதால் வட இந்திய பவேரியா கொள்ளையர்களால் இந்த சம்பவங்கள் நடக்கிறதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். மீண்டும் வட இந்திய கொள்ளையர்கள் தமிழகத்தில் இச்சம்பவங்களை அரங்கேற்றினால் அதனை முன்னெச்சரிக்கையாக (prevention) தடுக்கவும் கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை (action) எடுக்கவும் அரசு தகுந்த ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.

தமிழர்கள் உட்பட இந்தியராயினும் நான்கு  இந்திய மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி பெற வேண்டும்.   குறைந்தபட்சம் தமிழகத்தில் நுழையும் வெளிமாநிலத்தவர்கள் புள்ளி விவரம் பராமரிக்கப்படுமா?

“விசிக தலைவர் டபுள் கேம் (double game) என திமுகவில் கொதிப்பு. ஆதவ் அர்ஜுனாவை நீக்க நெருக்கடி என முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ஒரு பிரபலமான பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது. இத்தகைய யூக செய்திகளும் கருத்தை உருவாக்கலும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று விசிக தலைவர் தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனாஅந்த கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த கட்சியில் சேருவதற்கு முன்பாக வியூக தேர்தல் வியூக அமைப்பாளராக (strategy frame) பணியாற்றி வந்துள்ளார். கட்சியில் சேர்ந்த பின்னரும் வாய்ஸ் ஆப் காமன் (voice of common) என்ற வியூக நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இடைநீக்கத்தால் அதிருப்தி விஜயின் கட்சியில் இணைந்து விடுவாரோ? என்று சிலர் கருதுகின்றனர். அவரது கருத்துக்கள் விசிக தலைவரின் ஆதரவோடவே ஆதரவுடன் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேரத்துக்காக பேசப்பட்டது என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.  விசிக்காவிலும் அடிமட்ட தொண்டர்களிடம் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்துக்கள் சரியானதுதான் என்று கருத்து நிலவுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். அரசியலில் விளையாட்டு (political game) சகஜம்தான். இந்த விளையாட்டை அர்ஜுன் ஆதவ் தொடங்கி வைத்தார். எப்படி தொடர்ந்து விளையாடுவார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.

“நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2  சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாக சரிந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை திரும்ப பெறுவதால் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 1.3 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரம் பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இந்த எதிர்மறை போக்குகள் (negative trends) பின்னடைவு அல்ல என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் என நேற்று பிரபல நாளிதழ் முதல் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இத்தகைய போக்கு பொருளாதார மந்தத்தை (economic recession) உருவாக்குமோ? என்ற அச்சமும் சிலரிடம் காணப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.

Dr. V. Ramaraj, Former Member, State Child Rights Commission – At present, District Consumer Court Judge, Namakkal

10 வயது முதல் 20 வயது வரையான இளம் பெண்களை குறி வைத்து சமூக வலைத்தளங்களில் (social media) அவர்களை நட்பாக்கி பாலியல் தாக்குதல்கள் நடத்தும் திட்டமிட்ட போக்கு தொடர்ந்து இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.  இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டியதும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் இளம் பெண்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியதும் இதுகுறித்த போக்சோ (pocso) வழக்குகளை கண்காணிப்பதும் குழந்தைகள் உரிமைகள் கமிசனின் பணியாகும். ஆனால், தேசிய குழந்தைகள் ஆணையத்திலும் தமிழக குழந்தைகள் ஆணையத்திலும் (child rights commission) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எவரும் இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழக குழந்தைகள் ஆணையத்துக்கு நியமனம் செய்ய விரைவில் விளம்பரம் வரும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், ஆணையத்தை வலுப்படுத்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருந்த  டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V.Ramaraj) சமர்ப்பித்த வரைவு விதிகளை (Draft Rules) உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகிறார்கள். உடனடியாக மத்தியிலும் மாநிலத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.

“சாமி! ஒரு சந்தேகம் லண்டனுக்கு அரசியல் தலைவர் ஒருவர் படிக்க சென்றாரே, இது போன்ற படிப்புகள் குறித்து ஏதாவது தெரியுமா? என்றேன் நான். “இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் சில தலைப்புகளில் குறுகிய கால படிப்புகளை (International short term courses) கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றன. சர்வதேச அரசியல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் இந்த பல்கலைக்கழகங்கள் குறுகிய கால படிப்புகளை நடத்துகின்றன இவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு இணையதளம் போன்றவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை (admission) நடைபெறுகிறது. பெரும்பாலும் இத்தகைய குறுகிய கால படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் (university) கல்வி கட்டணங்களை பொறுத்த அளவில் உதவித்தொகை வழங்குகின்றன” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: அன்றாட நிகழ்வுகளையும் செய்திகளையும் பின்னணி தகவலுடன் தகவல்களுடன் வழங்கும் வாக்காளர் சாமி கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளன

இதையும் படிக்கலாமே: 
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா – கனவா? சாத்தியமா?

கம்பெனி செயலாளராக படிப்பது எப்படி? 

விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரிப்பு – காரணம் என்ன? தங்கள் கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் 13 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் பூங்கா இதழில் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். தங்களது கருத்துக்களுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில்  இணைத்து அனுப்பவும்.
இதையும் படிக்கலாமே:
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!
 
நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு
 
கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு
எங்களது வெளியீடுகள்படிக்கத் தவறாதீர்கள்

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்நுகர்வோர்
பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம்,பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles