நீங்கள் சாப்பிட்ட தட்டை கழுவுங்கள்! சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்!
இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். “அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்” என்று சொல்லியும் கேட்பதில்லை. “ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா ” என்று கேட்டேன். “இல்ல… இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது”.
மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்…
நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்” |
சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்…. மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது… முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,…
சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்….பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்…
நமது பார்வை எப்படியோ அப்படியே எல்லாமும் – சிந்தனையை தூண்டும் ஒரு நிமிடக் கதை
கங்கை ஆற்றங்கரையில் உள்ள கிராமத்தில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தன் சீடர்களோடு கங்கையாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற ஒரு வழிப்போக்கர் அவரிடம் கேட்டார், ”குரு, இந்த கிராமத்தில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்? நான் இப்போது இருக்கின்ற இடத்தை விட்டு, வேறு எங்காவது சென்று குடி அமர வேண்டும்.”
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா? “சரியும் புத்தக வாசிப்பால் ஏற்படும் தீமைகள்?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம். |
ஞானி, “இப்போது நீ வசித்துக் கொண்டு இருக்கின்ற கிராமத்தில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்? “. “குரு, அங்கே இருப்பவர்கள் பொல்லாதவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், மோசமான மக்கள்” என பதில் சொன்னான் வழிப்போக்கன். ஞானி, “இந்த கிராமத்திலும் மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். நய வஞ்சகர்களும், பொல்லாதவர்களும், ஒழுக்கம் கெட்ட மக்கள்தான் இருக்கிறார்கள்” என்றதும் வழிப்போக்கன் பெருமூச்சு விட்டபடி அந்த இடத்தைக் கடந்து சென்றான்.
சற்று நேரத்தில் அங்கே இன்னொரு வழிப்போக்கன் வந்தான். ஞானியிடம், அதே கேள்வியைக் கேட்டார், “நான் ஒரு புது இடத்திற்கு சென்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். எப்படிப்பட்ட மக்கள், இந்தக் கிராமத்தில் வாழ்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?” அதே கேள்வியை, ஞானி இந்த வழிப்போக்கனிடமும் கேட்டார், “நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?“
“அங்கே மக்கள் பண்பாடு மிக்கவர்கள், விவேகமானவர்கள், நல்லவர்கள்” என அந்த மனிதன் பதில் அளித்தான். “அதே போன்ற மக்களையே, நீ இங்கும் பார்க்க முடியும். நாகரீகமும், அமைதியும் மிக்கவர்கள், மிகவும் நல்லவர்கள், நல்லிதயம் கொண்டவர்கள் இங்கே இருக்கின்றார்கள்” என்றார் ஞானி.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
சீடர்கள் கேட்டார்கள், “குரு தேவா, ஒரே இடத்தில் உள்ள மக்களைப் பற்றி, இரண்டு வழிபோக்கர்களிடமும் இரண்டு விதமாக எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள். இது ஏன் குருவே?“
ஞானி, “என் அன்பானவர்களே, வழக்கமாக உலகம் எப்படி இருக்கிறதோ, அப்படி அதனை நாம் பார்ப்பது இல்லை. நாம் நமது உள்ளே எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் அதனை நாம் காண்கிறோம். எல்லா இடங்களிலும் எல்லா வகையான மக்கள் இருக்கிறார்கள். நாம் எப்படிப்பட்ட மக்களைக் காண விருப்பம் கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்த விஷயம் ஆகும். நாம் எப்படிப் பட்ட கண்ணோட்டத்தில் இருக்கிறோமோ, அப்படியே மற்றவர்களையும் பார்க்கின்றோம். முதல் வழிப்போக்கனைப் பொறுத்தவரை, எல்லா கிராமத்தவருமே நயவஞ்சகர்கள், கொடுமையானவர்கள், தீயவர்கள். காரணம் என்னவெனில், அவரது சொந்த சுபாவமே. அதே வேளையில் இன்னொரு வழிப்போக்கன், அங்கே எல்லோரையுமே பண்பாடு மிக்க மக்களாகப் பார்க்கின்றான். வசதியானவர்களாக, நல்ல இதயம் படைத்தவர்களாகப் பார்க்கின்றான். காரணம், அவனே பண்புமிக்கவன், அமைதியானவன், விவேகம் மிக்கவன், நல்ல எண்ணங்களைக் கொண்டு இருந்தான். நம்முடைய பார்வை எப்படியோ, அப்படித்தான் உலகமும் இருக்கும்.“
பூங்கா இதழ் (The News Park) கருத்து:ஒவ்வொருவரும் அவரது அவரது உணவு தட்டுகளை கழுவும் பழக்கம் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நமது பார்வை எப்படியோ அப்படியே விளைவும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories)
நாட்டு நடப்பு | அரசியல் |
மாநிலம் தேசம் சர்வதேசம் சிறப்பு படைப்புகள் கருத்து நேர்காணல் அறிவு பூங்கா | அரசு நிர்வாகம் அரசியல் பிரச்சனைகள் பாதுகாப்பு அமைதி வாக்காளரியல் |
பொருளாதாரம் | சமூகம் |
நிதி உற்பத்தி சேவைகள் தொழில் வர்த்தகம் விவசாயம் உணவு -வீடு | மக்கள் கல்வி – வேலை ஆன்மீகம்-ஜோதிடம் வாழ்க்கை கலை – இலக்கியம் பொழுதுபோக்கு விளையாட்டு |
கதம்பம் | நாங்கள் |
நீதி -சட்டம் குற்றம் புலனாய்வு இயற்கை அறிவியல் ஆரோக்கியம் களஞ்சியம் | நாங்கள் புரவலர்கள் ஆதரிங்கள் பங்களியுங்கள் |