தமிழர் பாரம்பரியம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் வெற்றிலை (Betel leaf), பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை வைத்திருக்கும் பிரத்யோகமான வெற்றிலை தட்டு, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை குத்தும் உழக்கு போன்றவை இருக்கும். திருமண வீடுகளிலும் இறப்பு உள்ளிட்ட துக்க வீடுகளிலும் காபி, டீ வழங்கப்படுவது போல வெற்றிலை தட்டும் வலம் வரும். தற்போதும் திருமண நிகழ்வுகளில் தேங்காய், பழம், மற்றும் இனிப்பு பண்டங்கள் மட்டுமல்லாது வெற்றிலை, பாக்கு ஆகியோவற்றையும் வைத்து தாம்பூலப்பை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் தாம்பூல பையில் உள்ள வெற்றிலை, பாக்கு உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.
ரசாயன கலப்பில்லாத – உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை கலவையாக மெல்லும் பழக்கத்தை தமிழர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இந்தியாவில் ஆண்டுகளுக்கு (அதாவது கி.மு. 400-க்கு) முன்பு இருந்தே வெற்றிலையின் பயன்பாடு இருந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகமாகவே இருந்துள்ளது.
தற்போது தாம்பூல பையில் வழங்கும் வெற்றிலை, பாக்கை கூட நாம் உபயோகிக்க தவிர்ப்பதற்கான காரணம் என்னவெனில் வெற்றிலை, பாக்கு தவறான ஒன்று என தற்போது உள்ள தலைமுறையினர் எண்ணுகின்றனர். ஆனால், உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பீடா என்ற பெயரில் வெற்றிலை, ரசாயனம் கலந்த பாக்கு மற்றும் சுவையூட்டும் ரசாயன பொருட்கள் அடங்கிய கலவையை உண்மையான மதிப்புக்கு அதிகமான பணத்தை கொடுத்து வாங்கி சுவைக்கிறார்கள். நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெற்றிலையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆண் வெற்றிலை
வெற்றிலை முதலில் மலேசியாவில் பயிரிடப்பட்டு பின்னர் இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்க்கப்பட்டன. வெற்றிலையின் உண்மையான பெயர் வீற்றிலை. வீறு என்பதற்கு வீரியம் மற்றும் காரம் என்று பொருள் உண்டு இதுவே காலப்போக்கில் வெற்றிலை என்று அழைக்கப்படுகின்றது. இது ஒரு மிளகு குடும்பத்தை சேர்ந்த தாவர வகையாகும்.
ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை, கற்பூரவள்ளி என்று பல வகையான வெற்றிலை உள்ளது. ஆண் வெற்றிலையின் தன்மை கருகருவென கரும்ப பச்சை நிறத்தில் இருக்கும். இதற்கு காரத்தன்மை சற்று அதிகமாக உண்டு. இவ்வகை வெற்றியை வட இந்தியாவில் அதிகமாக கொள்முதல் செய்கின்றனர். பெண் வெற்றிலை இளம் பச்சை நிறத்தில் காணப்படும் காரத்தன்மை சற்று குறைவாக இருப்பதால் இதை அனைத்து இடங்களிலும் பொதுவாக நாம் பார்க்கலாம். தமிழகத்தில் தஞ்சாவூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக வெற்றிலை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
புரதம் 3.49 கிராம். கொழுப்பு 0.73 கிராம், நார்ச்சத்து 1.96 கிராம், கார்போஹைட்ரேட் 7.33 கிராம், வைட்டமின் சி 20.66 மி.கி, பீட்டா கரோட்டின்- 3220 மி.கி உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ள 100 கிராம் வெற்றிலை 49.85 கிலோ (Kcal) கலோரியையும் ஆக்சிஜனேற்றத்தையும் வேறு சில தாது சத்துக்களையும் வழங்க கூடியதாகும்.
வெற்றிலை உண்ணுவதால் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்றவற்றின் வளர்ச்சியை தடுத்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்குகின்றது. அவற்றின் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கின்றது. சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகின்றது. நாம் உண்ணும் உணவினால் நம் உடலில் ஏற்படும் சர்க்கரை அளவின் உயர்வை சீராக வைக்க உதவுகின்றது. இது மட்டும் இன்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வெற்றிலை நமக்கு வழங்குகின்றது. செரிமானத்திற்கு உதவுவதால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
புறக்கணிப்போம்
வெற்றிலையை நன்றாக அரைத்து மெல்லுவது வாய் துர்நாற்றம் நீக்கவும் உணவு செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. சாராக குடிக்கும் பொழுது சுவாச மண்டலத்தை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. வெற்றிலையை பேஸ்ட் போன்று அரைத்து தோலில் ஏற்படும் காயங்களில் தடவினால் வலி மற்றும் காயம் சரி செய்யும் நிவாரணியாக செயல்படுகிறது. தோல் நோய் தொற்றுகள் மற்றும் தோல் எரிச்சல் உள்ள பகுதிகளில் இந்த பேஸ்ட்டை உபயோகிப்பதன் மூலம் தோளில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகின்றன. வெற்றிலையை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலமாக சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது.
வெற்றிலையுடன் புகையிலை சேர்ந்து உண்ணும் பழக்கம் கணையம் மற்றும் உணவு குழாய் புற்று நோய்களை உருவாக வழி வருகிறது. புகையிலை உடன் கலக்கும் பொழுது வெற்றிலை பாக்கு மெல்லும் பழக்கத்தை கைவிடுவது மிக கடினமாகும். வெற்றிலை ஆகிய மருந்தை அளவாக உட்கொண்டு பயனை பெறுவதே உடலுக்கு மிகச் சிறந்தது. உடல் நலத்துக்கு பலனளிக்கும் மறந்து போன தமிழர்களின் வெற்றிலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். ரசாயன கலவைகளை கொண்ட “பான்” போன்ற அந்நிய கலாச்சாரத்தை புறக்கணிப்போம்.
இல்லாத எய்ட்ஸ் – இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவு https://theconsumerpark.com/medical-negligence-wrong-diagnose-dr-v-ramaraj-consumer-court-namakkal