Sunday, May 4, 2025
spot_img

ஒரு நிமிட கதை: என்ன கணவனோ என நினைத்த சில நிமிடங்களில் கணவன் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி. ஒரு நிமிட கட்டுரை: வெற்றிக்கான பயணத்தில் உங்கள் நம்பிக்கையே முக்கியம்

தூரத்தில் பார்ப்பவர்களுக்கு இவனென்ன பெரிதாக செய்துவிடப் போகிறான் சுயநலமுடையவன் என்றுதான் தோன்றும்

ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென சடசடவென மழையும் சாரலுமாக வீசத்தொடங்கியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் பிறகு ஓடத்தொடங்கினர்.

வழியில் பழுதடைந்த ஒரு கயிற்றுப்பாலம் மழைநீரில் அடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இருப்பதை கண்ட கணவன் முதல் ஆளாக வேகமாக ஓடி பாலத்தை கடந்துவிடுகிறான். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போதுதான் மனைவி பாலத்தின் நடுவே நின்றுகொண்டு மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்துவிட்டதால் மனைவி மிதமிருக்கும் பாலத்தை கடக்க முடியாமல் பயந்து கொண்டாள், மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. 

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் எதிர் முனையில் நிற்பதை அறிந்தாள். தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை உதவிக்கு அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவுமில்லை, எந்த பதிலும் கொடுக்கவுமில்லை. “என்ன இந்த மனுசன் பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டுகொள்ளாமல்…” என அவளுக்குள் ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள், பாலத்தை கடக்கும்போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிடுகிறாள், கணவனை கோபத்தோடு பார்க்கிறாள்,

அங்கு கணவன் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை தனது வாயிலும், கையிலும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தான். மனைவியை கண்டு அவள் பாலத்தை கடந்த உடன் கயிற்றை விட்டுவிடுகிறான். வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நான் உனக்கு பக்க துணையாக இருக்க இயலாது. சில பிரச்சினைகளை நீயேதான் சமாளித்து கடக்க வேண்டும் என்கிறான். நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றவள் கட்டியணைத்து கண்ணீருடன் கணவனை முத்தமிடுகிறாள்.

சில சமயம் நிறைய பெண்கள் கண்ணிற்கு தன் கணவன் தங்கள் குடும்பத்தைக் கண்டுகொள்ளாத போலத்தான் தெரியும், இதனால் நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது. அதற்கு காரணம் புரிதல் இல்லாதவையே. உண்மையிலேயே தன் மனைவி மற்றும் குடும்பத்தை நேசிக்கும் ஆண்மகன் தன் மகிழ்ச்சியை தொலைத்து பிறருக்காக வாழ ஆரம்பித்தவிடுகிறான் என்பதேதான் உண்மை. அவன் ஒவ்வொரு பொழுதிலும் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்,

தூரத்தில் பார்ப்பவர்களுக்கு இவனென்ன பெரிதாக செய்துவிடப் போகிறான், சுயநலமுடையவன் என்றுதான் தோன்றும் அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவன் நிலை என்ன என்பது தெரியவரும். உண்மையான அன்போடும், நிலையான நம்பிக்கையோடும் கிடைத்த இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்…. படித்ததில் பிடித்தது.

வெற்றிக்கான பயணத்தில் உங்கள் நம்பிக்கையே மிகவும் முக்கியம்

இன்றைய உலகில் அனைவருக்கும் ஒரு குறிக்கோள், ஒரு கனவு இருக்கிறது. சிலர் அந்த கனவுகளுக்கு விரைவில் அடைய வேண்டும் என்று நினைக்கின்றனர், ஆனால் பலர் தங்களின் சொந்த நம்பிக்கையில் கூட சந்தேகங்கள் கொள்கிறார்கள். பலரின் சாதனைகள் எளிதாக பரப்பப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த வெற்றியின் பின்னால் இருக்கும் நம்பிக்கையை நாம் அதிகமாக கவனிப்பதில்லை.

உங்கள் பயணத்தில் முக்கியமானது நம்பிக்கை தான். நீங்கள் இன்று எதை நினைத்தாலும், அதை சாதிக்க முடியும் என்று நம்பினால், அது அடுத்து என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துங்கள். நம்பிக்கை என்பது கனவுகளுக்கு உயிரூட்டும் சக்தி. கடின நேரத்தில் கூட, உங்கள் மனதில் ஒரு சின்ன வெற்றியோ, ஒரு நம்பிக்கையோ இருக்கட்டும். இந்த மாற்றம் மட்டும் உங்களை வெற்றி பெறச் செய்யும். திடமாக கடந்து செல்லுங்கள்.

ஒரு தவறு, ஒரு தோல்வி என்பது நீங்கள் எதிர்கொள்ளும் அத்தியாயம் மட்டுமே. அது உங்களுடைய பாதையை மாறவோ அல்லது நிறுத்தவோ இல்லை. தோல்வியை பயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறுகளை எதிர்கொள்ளும் போது, அவை உங்களுக்கு கற்றுத்தரும். வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கவும்.

இந்த சிறிய வெற்றிகள் தான் உங்கள் முக்கியமான முன்னேற்றத்தை உருவாக்கும். நீங்கள் எவ்வளவு சாதித்தாலும், அதன் சிறிய வெற்றிகளை கொண்டாடுங்கள். உங்கள் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு எதிர்பாராத சக்தியை அளிக்க முடியும். நல்ல நண்பர்கள், குடும்பம் மற்றும் வழிகாட்டிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நம்பகமானவர்களுடன் இருக்கவும். ஒவ்வொரு செயலிலும், அது குறிக்கோளுக்கு ஒரு துவக்கம் ஆகும். திடமாக நிலைத்திருந்தால் உங்கள் வெற்றியும் உறுதி.

வெற்றி ஒரு பாதையில் பயணம் அல்ல, அது உங்கள் நம்பிக்கை மற்றும் உழைப்பின் தொடர்ச்சி. உங்கள் கனவுகளை நம்புங்கள். உங்கள் விருப்பங்களை முன்னிறுத்துங்கள். எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். கண்களை நம்புங்கள், அது உலகத்தை பார்க்க உதவும். ஆனால், மனதை நம்புங்கள், அது உங்கள் வருங்காலத்தை உருவாக்கும்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை துணைவரின் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றியை நோக்கி நகருங்கள்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles