Advertisement

அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே! மற்றவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்!

“என்னப்பா..முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?” என்றார் பண்டிதர்.  “முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி” என்று பணிவுடன் கூறினார் நாவிதர்.

பண்டிதர் சிரித்தபடியே, “அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு… என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்… வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… வேலையை ஆரம்பித்தார்… ‘நாவிதர் கோபப்படுவார்’ என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்…

நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்… “ஏன்டாப்பா  உன் வேலை முடி வெட்டுறது… உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே… அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க…?” இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை….

“நல்ல சந்தேகங்க சாமி… நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்… எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா…?

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்… “இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு… கோல் எங்கே போச்சு?”… இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து…. “சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்…இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. 

கட்டுரைகளை வரவேற்கிறோம்  

** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  

** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும்.  

** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

“எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற… ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப்பய போலருக்கு…” இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்… இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்… கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்….

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்… பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார், “சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?” பண்டிதர் உடனே, “ஆமாம்…” என்றார்… கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து, “மீசை வேணுமுன்னிங்களே சாமி.. இந்தாங்க…” பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்… அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்…

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்… அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார், “சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா.?” இப்போது பண்டிதர் சுதாரித்தார். ‘வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்…’ என்ற பயத்தில் உடனே சொன்னார், “இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்… வேண்டவே வேண்டாம்…”. நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித்தெடுத்தார்… “சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது…” என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. 

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்… முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்… அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்…

நம்முடைய அறிவும், புத்தியும், திறமையும், அதிகாரமும், அந்தஸ்தும், பொருளும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல… இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்… தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்…இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது…அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே… நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை.. ஆகவே, இயற்கையினால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்… மதிப்போம்…வாழ்வளிப்போம்…

பூங்கா இதழ் (The News Park) கருத்து: மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே?  

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென பல மடங்கு உயர்வது ஏன் தெரியுமா? இன்னும் மூன்று மாதத்தில் துவரம் பருப்பின் விலை மூன்று மடங்காகி விடுமா?  

ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
இதையும் படிக்கலாமே? வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!  

நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

கௌரவ ஆசிரியராக, ஆசிரியர் குழு உறுப்பினராக, எழுத்தாளராக, பயிற்சி கட்டுரையாளராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு  

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ்  குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்  

பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்

நாட்டு நடப்புஅரசியல்
மாநிலம்
தேசம்
சர்வதேசம்
சிறப்பு படைப்புகள்
கருத்து
நேர்காணல்
அறிவு பூங்கா  
அரசு
நிர்வாகம்
அரசியல்
பிரச்சனைகள்
பாதுகாப்பு
அமைதி
வாக்காளரியல்  
பொருளாதாரம்சமூகம்
நிதி
உற்பத்தி
சேவைகள்
தொழில்
வர்த்தகம்
விவசாயம்
உணவு -வீடு  
மக்கள்
கல்வி – வேலை
ஆன்மீகம்-ஜோதிடம்
வாழ்க்கை
கலை – இலக்கியம்
பொழுதுபோக்கு
விளையாட்டு  
கதம்பம்நாங்கள்
நீதி -சட்டம்
குற்றம்
புலனாய்வு
இயற்கை
அறிவியல்
ஆரோக்கியம்
களஞ்சியம்  
நாங்கள் 
புரவலர்கள்
ஆதரிங்கள் பங்களியுங்கள்  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles