Advertisement

பழனி,  அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமியை கவிபாடி  சிறப்பித்த புலவர்கள்

தமிழ்நாடு அரசின்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான  பழனியில் நடைபெறவுள்ளது. 

சிவனும் பார்வதியும் இளம் குழந்தையாகிய முருகனை ‘ஞானப்பழம் நீ’ என  அழைத்தமை காரணமாக முருகன் வீற்றிருக்கும் திருத்தலம் ‘பழம் நீ‘ என வழங்கப் பெற்றுப் பின்னர் அச்சொல் மருவி ‘பழனி’ என வந்ததாக பக்தி உலகில் கூறப்படுகிறது. பழனி என்னும் திருத்தலம் சங்க காலத்தில் ‘பொதினி’ என்றும் ‘பழனம்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் ‘திருவாவினன்குடி’ எனவும், அகநானூற்றில், ‘முழவுறழ்’ திணிதோணெடு வேளாவி, பொன்னுடை நெடுநகர்ப்பொதினி, ‘முருகனற்போர் நெடு வேளாவி, யறுகோட்டி யானைப் பொதினி யாங்கண் எனவும் வருகின்ற குறிப்புகள் கவனிக்கத்தக்கவையாகும். சிலப்பதிகாரத்தில் வேளாவிக்கோ மாளிகை காட்டி எனவும் பழனி என்னும்  திருத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 

முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. அருள்மிகு பழனி முருகனை போற்றிப் பாடிய புலவர்கள் மற்றும் புலவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களின் விவரங்கள் பின்வருமாறு.

பழநியாண்டவர் பதிகம்-முருகேச செட்டியார்,

பழநியாண்டவர் பதிகம்-துரைசாமிக் கவிராயர்

பழநியாண்டவர் பதிகம்-வா. மகாதேவ முதலியார்

பழநியாண்டவர் பவனிக் கொம்மி – வே.முத்தனாசாரியார்

பழநியாண்டவர் பாராயணத் திரட்டு-கா. நா. நெல்லையப்ப பிள்ளை, 

பழநியாண்டவர் போற்றிக் கலிவிருத்தம்- துரைசாமிக் கவிராயர், 

பழநியாண்டவர் மாலை-கி.சுப்பநாயக்கர், 

பழநியாண்டவூர் மாலை -அ. சண்முகஞ் செட்டியார்

பழநியாண்டவர் மாலை-ஞானசித்தர் 

பழநியாண்டவர் மாலை – சொக்கனாண்டிதாஸ்

பழநியாண்டவர் மாலை – துரைசாமிக் கவிராயர்,

பழநியாண்டவர் வண்ணம்-சேலம் குமாரசாமி முதலியார்,

பழநியாண்டவர் விறலிவிடு தூது-வே. முத்தனாசாரியார்

பழநியாண்டவர் வெண்பாவந்தாதி – துரைசாமிக் கவிராயர்

பழநி வகுப்புகள்- தண்டபாணி சுவாமிகள்,

பழநி வழிநடைச் சிந்து – பு. உருத்திரகோடிப் பிள்ளை

பழநி வெண்பா-அ. நாராயண பிள்ளை

பழநி வெண்பாப் பதிகம்-மனோன்மணியம்மையார்

பழநி வெண்பாமாலை – தண்டபாணி சுவாமிகள்

பழநீ வெண்பாமாலை -பு.அ.சபாபதி முதலியார் 

பழநி வெண்பாமாலை – கச்சபாலய தேவர் 

பழநி வெண்பாவ்ந்தாதி -மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

பழநி வெண்பாவந்தாதி – தண்டபாணி சுவாமிகள்

பழநி கலவி மகிழ்தல் வண்ணம்-தண்டபாணி சுவாமிகள்

பழநி குருபர மாலை–தண்டபாணி சுவாமிகள்,

பழநிக் கலம்பகம் – தண்டபாணி சுவாமிகள்

பழநி குழந்தைவேலர் பஞ்சரத்தின மாலை-தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்

பழனிக் குறவஞ்சி நாடகம்- வே.முத்தனாசாரியார்

பழநிக்கோயில் விண்ணப்பம்-மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

பழநிச் சந்நிதி முறை-மனோன் மணியம்மையார்

பழநிச் சிங்காரமாலை-மனோன் மணியம்மையார்

பழநிச்சித்தி மாலை-தண்டபாணி சுவாமிகள்

பழநிச் சுப்பிரமணியர் பதிகம் தெய்வங்கள் பெருமாள் பிள்ளை

பழநிச் சோடசமாலை -கு. சண்முகாநந்த அடிகள், 

பழநி தண்டாயுதக் கடவுள்பத்து-தி. செ.பாலப்பிள்ளை

பழநி தண்டாயுதபாணி பதிகம்-ரா. இராமசாமி ரெட்டியார்

பழநி திரிவுமஞ்சரி- தண்டபாணி சுவாமிகள்

பழநித் தண்டபாணி பதிகம்- வேலாயுதம் பிள்ளை

பழநித் தலபுராண உரை- நா. கதிரைவேற் பிள்ளை

பழநித் திருவருட் பாசுர அந்தாதி-சிவசூரியம் பிள்ளை,

பழநி நடுவொலியலந்தாதி- தண்டபாணி சுவாமிகள்

பழநீ நவமணி மாலை-தண்டபாணி சுவாமிகள்

பழநி நவரசம் — தண்டபாணி சுவாமிகள்

பழநி நான்மணிமாலை -மாம்பழக் கவிச்சிங்க நாவலர்,

பழநி நான்மணி மாலை – வா.மகாதேவ முதலியார்,

பழநி பால நீதி-தி.ஐ. பழநிச் செட்டியார்

நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச்  சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத்  தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக  வழிபாட்டுச் சான்றோர்  திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆய்வரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தனியே விருதும் வழங்கப்பட உள்ளது.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles