இந்தியாவில் சரியாக தாய்ப்பால் ஊட்டாத பெண்கள் பாதிக்கும் மேல்? மிஞ்சும் தாய்ப்பாலை அரசிடம் வழங்கும் நாடு எது தெரியுமா?
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது தாய்ப்பால் அவசியமானது. ஆனால், இந்தியாவில் 58 சதவீத பெண்கள் முறையாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில்லை என்று நிகழ்ச்சியில் பேசிய தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விரிவான தாய்ப்பால் மேலாண்மை மைய திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் சுமார் 100 தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன.
பிரேசில் நாட்டில் குழந்தைகளுக்கு பால் பவுடர் மூலமாக பால் கொடுக்கும் பழக்கம் இல்லை. அங்குள்ள தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டியுடன் மீதமுள்ள தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்துபாட்டிலில் அடைத்து அவர்கள் பகுதிக்கு வரக்கூடிய அஞ்சல் காரரிடம் கொடுத்து தாய்ப்பால் வங்கியில் சேர்க்கிறார்கள் இவ்வாறான தாய்ப்பால் தானம் பிரேசிலில் உலகளவில் பிரேசிலில் அதிகம் நடைபெறுகிறது தாய்ப்பால் தானம் கொடுப்பதால் கொடுக்க கொடுக்க சுரக்கும் தாய்ப்பாலின் அளவு குறையாது என்பது பலருக்கு தெரிவதில்லை.
சிவன் கோவிலுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு நாடுகள் எவை தெரியுமா?
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே அந்த நாடுகளின் தற்போது உள்ள எல்லைப் பகுதியில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோவில்களின் சுவர்களில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவற்றின் புராண சிற்பங்கள் நிறைந்துள்ளது. தாய்லாந்திலும் கம்போடியாவிலும் புத்த மதம் வலுவாக உள்ள போதிலும் கம்போடியாவில் இந்து மத சம்பிரதாயங்கள் பலராலும் பின்பற்றப்படுகின்றன. பிரான்சின் ஆதிக்கத்திலிருந்து கம்போடியா விடுதலை பெற்ற போது கம்போடியாவின் எல்லை மறு வரையறை செய்யப்பட்டது. இதன்படி பிரச்சனைக்குரிய கோவில் கம்போடியா எல்லைக்குள்ளும் அதன் பயன்பாட்டு பகுதிகள் தாய்லாந்து எல்லைக்குள்ளும் வந்தன. அப்போது தோன்றிய பிரச்சனை தற்போதும் தொடர்கிறது.
இந்தக் கோவில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று கடந்த 1962 ஜூன் 15 அன்று சர்வதேச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த பகுதியில் உள்ள ராணுவத்தை தாய்லாந்து தற்போது வரை திரும்ப பெற மறுத்து வருகிறது. தற்போதைய பிரச்சினையாக இரண்டு நாடுகளும் எல்லைப் பகுதியில் உள்ள மக்களை வெளியேறச் சொல்லி போருக்கு தயாராக நிற்கின்றன. விட்டுக்கொடுத்து போங்கப்பா. அமைதிதான் முக்கியம்.
73 ஆயிரம் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டுகளை நிறைவேற்றாத காவல்துறை
குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்கள், தலைமுறைவானவர்கள், தண்டனை பெற்றவர்கள் உள்ளிட்ட உள்ளிட்டவர்கள் மீது கைது வாரண்டுகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்துவதும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் அடைப்பதும் காவல்துறையின் கடமையாகும்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகளில் கைது வாரண்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் இன்னும் கைது வாரண்டுகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இங்கு தரப்பட்டுள்ள செய்திகள் எடுத்துக்காட்டும் சங்கதிகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.