Friday, July 18, 2025
spot_img

காதல் ஜோடி கொலை. தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம். காவல்துறையின் மீது நடவடிக்கையை தேவையா? பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கும் தவறான கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் அப்பாவிகளுக்கும் என்ன தீர்வு? 

கடந்த 2011 மே 14 அன்று எழில் முதல்வன் என்ற இளைஞர் தனது தந்தையிடம் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வந்துள்ளார். அவரது காதலி அன்று காலையில் கல்லூரி செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார். வீட்டிலிருந்து வந்த காதலியை வழியில் எழில் முதல்வன் அழைத்துக்கொண்டு இருவரும் தேனி அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். 

காதல் ஜோடி கொலை

தனது மகள் வீட்டுக்கு திரும்பி வராததால் எழில் முதல்வன் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக எழில் முதல்வனின் காதலியின் தந்தை தேனியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரு இருசக்கர வாகனம்   நான்கு நாட்களாக சுருளி நீர்வீழ்ச்சி அருகில் அனாதையாக நிற்பதாக விசாரணையின் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்த போது எழில் முதல்வன் மற்றும் அவரது காதலியின் உடல்கள் துர்நாற்றத்துடன் காணப்பட்டுள்ளன.

மரண தண்டனை

இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். விசாரணையின் இறுதியில் கட்டவெல்லை என்ற தேவகர் என்பவரை காவல் துறை கைது செய்து அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வைத்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரால் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. இதன்பின்னர் தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கட்டவெல்லை என்ற தேவகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கில் கடந்த 15 ஜூலை 2025 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

மாவட்ட செசன்ஸ் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்துள்ளதாக தீர்மானித்து தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த தண்டனை என்பது முழுவதும் சந்தர்ப்ப சாட்சியங்களால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்டது சரியானதா? என்பதை ஆய்வு செய்வதில் காவல்துறையில் முறையாக புலன் விசாரணை செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்ததாக கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. டிஎன்ஏ பரிசோதனையும் முறையாக காவல் துறையால் மேற்கொள்ளப்படவில்லை. இறந்தவர்களின் ரத்தப் பரிசோதனை மற்றும் விந்து பரிசோதனை ஆகியவை முறையாக நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் இடமிருந்து கைப்பற்ற ஆயுதம் கைப்பற்றப்பட்ட ஆயுதம் உள்ளிட்டவை மூலமாக பொருத்தி (match) நிரூபிக்க காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முழுவதும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தண்டிக்க இயலாது என்று குற்றம் சாட்டப்பட்டவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது (Criminal Appeal No. 1672 OF 2019).

காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்த பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் ஒருவர் விடுதலை ஆகும் போது அவருக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்ய முடியாது. இத்தகைய நபர்களுக்கு, இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைக்கான   உரிமை பாதிக்கப்படுகிறது இந்த சூழலில் நீண்ட காலம் சிறையில் இருந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆகுபவர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வழக்கின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது நமக்கு எழுந்துள்ள மூன்று கேள்விகளுக்கு சரியான தீர்வு தேவை என்பது எதிர்பார்ப்பாகும்.

01. காவல்துறையினர் முழுமையாக சரியாக புலன் விசாரணை செய்ய தவறுவதால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்வதற்கு செய்யப்படும் போது காவல்துறையினரின் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும். 

02. ஒருவர் மீதான குற்ற வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறும்போது அவர் நீண்ட நாட்கள் சிறைச்சாலையில் இருந்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட வாழ்க்கைக்கான உரிமை பிரச்சனைக்கு எத்தகைய நிவாரணங்களை வழங்குவது? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.

03. குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது குடும்பத்தினருக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்? என்ற தெளிவான கொள்கையும் சட்டமும் அவசியமாகும்.

இந்த மூன்று கேள்விகள் குறித்த தங்களது கருத்துக்களை [email protected] or [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் இந்த மாத இறுதிக்குள்ளாக அனுப்பி வைக்கலாம். சிறப்பானதாக கருதப்பட்டு, தேர்வு செய்யக்கூடிய கருத்துக்கள் பூங்கா இதழில் வெளியிடப்படும். தங்களது புகைப்படத்தையும் தொலைபேசி எண்ணையும் முகவரியையும் கருத்துக்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கட்டுரையில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் சரியான தீர்வு காணும் வகையில் குற்றவியல் சட்டங்கள் அவசியமானது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles