Saturday, July 19, 2025
spot_img

கணவன் மனைவி என்றால் இப்படித்தானோ! ஒரு நிமிட கதையை படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!

அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். 

வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர்; அவனைப் பார்த்து, “ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்? என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன்” என்றார். அதற்கு அவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார். அவன், அந்தக் கணவனை ஏமாற்ற, “கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம்” என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் பக்கத்து வீட்டுக்காரர் அவரைப் பார்த்து, ”அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய், ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய், கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிக் குடிக்கிறாய்.. இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டுப் போய்விடுவாள்; அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்” என்றார்.

அதற்கு கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன் என்றார். தான் சொல்வதுதான் நடக்கும் என்றார் பக்கத்து வீட்டுக்காரர். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் கணவன் அவரது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்து விடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ தன் கணவனைப் பார்த்து “அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?” என்று அன்பொழுகக் கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.

பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து, ‘என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?’ என்று கேட்டான். ”அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு என் மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப் பிறர் முன்னால் காட்டிக்கொள்ள மாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்” என்றான் அந்த கணவன்.

எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்?

கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து,  நேரத்தை  செலவிடுவது குறைந்து போய் விட்டது. அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை. 

தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, ” உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும்.  இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து  உட்காரக்கூட நேரம் இல்லை” என்றாள்.  ” இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

 கணவர் தலையை அசைத்தார். மனைவி மேசையின் மீது இரண்டு டைரிகளைக் கொண்டு வந்து வைத்தாள். இந்த இரண்டு டைரிகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு. இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நம் சொந்த டைரிகளில் எழுதி வைப்போம்” என்றாள்.  மேலும், ” அடுத்த  ஆண்டு நமது திருமண நாள் அன்று அவற்றை நாம் திறந்து படிப்போம். ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும். மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் பணியாற்றலாம்.” கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் டைரிகளில் எழுத தொடங்கினர். காலம் விரைவாக சென்றது. 

அன்று அவர்களின் 26 ஆவது ஆண்டு திருமண நாள். கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் டைரிகள் அருகில் வைக்கப்பட்டு, அவற்றை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர். தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் டைரியைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன. “என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்ற வில்லை” என்பது போல…” இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாக பேசவில்லை.” என்று மற்றொரு புகார் கூறப்பட்டிருந்தது. “பல  மாதங்களுக்குப் பிறகு , நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ” ” இன்று நான் எனக்கு பிடித்த டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள்.” ” இன்றைக்கு சோபாவில் ஈரமான டவலை விட்டுட்டு போயிட்டீங்க…” டைரியில் இது போன்று பல புகார்கள் இருந்தன. 

கணவர் அவற்றை படிக்கும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.  அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், ” இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன் ” என்று உனக்கு உறுதியளிக்கிறேன் என்றார். இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது.  பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. 

ஆச்சரியப்பட்ட மனைவி, ” நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?” என்றாள். கணவர், ” கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன் ” என்று பதிலளித்தார். அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது. “இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய்.  இந்த டைரியில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் எந்த குறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை. உன்னிடம் எந்த குறைகளும் இல்லை என்பதல்ல. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எதுவும் அற்பமானவை. என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்? ” 

இப்போது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் டைரியை  வாங்கி கிழித்து அதை எரித்தாள்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கணவன் மனைவி இருவருக்கும் உள்ள புரிதல் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வெற்றியாகவும் இருக்கச் செய்யும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles