Thursday, July 3, 2025
spot_img

பட்டா பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவது? பசலி என்றால் என்ன? வேளாண்மை ஆண்டு என்பது என்ன? சம்பா சாகுபடி, குறுவை சாகுபடி என்றால் என்ன?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மார்ச் இறுதி நாள் வரையான 12 மாதங்களை நிதியாண்டு என்று அழைக்கிறோம். இதே போலவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் இருந்து மே இறுதி நாள் வரையான 12 மாதங்களை கல்வி ஆண்டு என்று அழைக்கிறோம். இதைப்போல 12 மாதங்கள் கொண்ட வேளாண்மை ஆண்டையே பசலி என்று வருவாய் துறையில் கணக்கிடப்படுகிறது. 

இந்த வேளாண்மை ஆண்டு என்பது கடந்த 1435 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவானது இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவில் உள்ள நிலங்களை நிர்வாகம் செய்யும் அமைப்பும் நிலங்களுக்கான வரிகளை வசூலிப்பதற்கான அமைப்பும் உருவாக்கப்பட்டு தற்போது வருவாய்த்துறையாக செயல்பட்டு வருகிறது. இதன் தோற்றத்தையும் சரித்திர பின்னணியையும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

வருவாய்த்துறையின் தந்தை என அழைக்கப்படும் ராஜா தோடர்மால் அக்பரின் நவரத்தின மந்திரி சபையில் 1560 ஆம் ஆண்டு குவாஜா மாலிக் இதிமாத் கானுக்குப் பிறகு  பதவியேற்றார். ராஜா தோடர் மால் நிலையான எடைகள் மற்றும் அளவீடுகள், நில அளவீடு மற்றும் தீர்வு முறை, வருவாய் மாவட்டங்கள் மற்றும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.  பட்வாரியின் இந்த பராமரிப்பு முறை இன்னும் இந்திய துணைக் கண்டத்தில் பயன்படுத்தப்படுகிறது, இது பிரிட்டிஷ் ராஜ் மற்றும் இந்திய அரசாங்கத்தால் மேம்படுத்தப்பட்டது.

அக்பரின் நிதியமைச்சராக இருந்த ராஜா தோடர் மால், ஜப்த் எனப்படும் புதிய வருவாய் முறையையும், தஹ்சாலா எனப்படும் வரிவிதிப்பு முறையையும் அறிமுகப்படுத்தினார். அவரது வருவாய் வசூல் ஏற்பாடு “தோடர்மால் பந்தோபஸ்த்” என்று அறியப்பட்டது.  1570–1580 வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு பயிரிடப்பட்ட பயிர் விளைச்சல் மற்றும் விலைகளை அவர் கவனமாக கணக்கெடுத்தார். இந்த அடிப்படையில், ஒவ்வொரு பயிருக்கும் ரொக்கமாக வரி நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு பசலி  ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30 அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள் இருக்கும் – ஒன்று கரீப் பருவம்  எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று ராபி எனப்படும் சம்பா சாகுபடி. இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் அந்த வருட நிலவரி வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு மாகாணமும் வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் சொந்த வருவாய் விகிதங்கள் மற்றும் தனிப்பட்ட பயிர்களின் அட்டவணையுடன் இருந்தன. முகலாய நிர்வாகம் நிலத்தை ஆய்வு செய்து கவனமாக கணக்குகளை வைத்திருக்கக்கூடிய இந்த முறை பரவலாக இருந்தது. வருவாய் அமைப்பிற்காக, அக்பரின் பிரதேசம் 15 சுபாக்களாகப் பிரிக்கப்பட்டது, அவை 15 சுபாக்களில் மொத்தம் 187 சர்க்கார்களாக மேலும் பிரிக்கப்பட்டன, மேலும் அந்த 187 சர்க்கார் (சர்க்கார்) மொத்தம் 3367 மஹால்கள் அல்லது பர்கானாவாக மேலும் பிரிக்கப்பட்டன. 

பல மஹால்கள் மஹாலுக்கும் சிர்காருக்கும் இடையில் ஒரு அலகான தஸ்தூர்களாக தொகுக்கப்பட்டன. பெரிய மஹால் அல்லது பர்கானாவின் ஒரு பகுதி தாராஃப் என்று அழைக்கப்பட்டது. மஹால்கள் தரப்படுத்தப்பட்ட பிகாக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிகா 3600 இலாஹி கஜால் ஆனது, இது நவீன ஏக்கரில் பாதி. அளவீட்டு அலகு இலாஹி கஜ் என தரப்படுத்தப்பட்டது , இது 41 விரல்களுக்கு (29-32 அங்குலங்கள்) சமம். டெனாப் என்று அழைக்கப்படும் ஈய அளவிடும் கயிறு, மூங்கில் துண்டுகளை இரும்பு வளையங்களுடன் இணைப்பதன் மூலம் தரப்படுத்தப்பட்டது, இதனால் டெனாபின் நீளம் பருவகால மாற்றங்களுடன் மாறுபடாது. 

1582 மற்றும் 1584 க்கு இடையில், நிதியமைச்சராக இருந்த ராஜா தோடர் மால், அனைத்து முகலாய நிர்வாகமும் பாரசீக மொழியிலும் “ஈரானிய பாணியிலும்” எழுதப்பட வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டார். முகலாய நிர்வாகம் ஈரானிய மற்றும் இந்து எழுத்தர்கள், செயலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டது.  வருவாய் வசூலில் அவரது முறையான அணுகுமுறை எதிர்கால முகலாயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.

ராஜா தோடர்மால் அக்பர் மந்திரி சபையில் சேரும் முன் ஷெர் ஷா சூரி மன்னரின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தார். அப்போதே நில அளவை நில வரி ஆகியவற்றை உருவாக்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை நிர்வாகத்தை மேம்படுத்தியவர்களில்  குறிப்பிடதக்கவர்கள்  வெல்லிங்ஸ்டன். ராபர்ட் கிளைவ் தாமஸ் மன்றோ ஆவர். 

தாமஸ் மன்றோ ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். எனவேதான் மவுன்ட் ரோட்டில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். ராபர்ட் கிளைவ் தனது அடாவடி நடவடிக்கைகள் மூலம் சட்டத்திற்கும் கொண்டு வந்தார். அவரின் நோக்கம் சரியாய் இருப்பினும் செயல்முறைகளால் கெட்ட பெயர் வாங்கினார். சுதந்திர இந்தியாவில் குறிப்பிடும் படியான நிர்வாக சீர் திருத்தம் மேற்கொள்ளப்படவிலாலை. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட ஒரு குழு 25 வருடங்கள் செயல் பட்டு ஏற்றுக்கொள்ள முடியாத சீர் திருத்தங்களை பரிந்தூரை செய்தது.

தமிழ் நாட்டில் நிர்வாக சீர்திருத்தம் குறிப்பிடும்படியான மாற்றத்தை கண்டது. மறைந்த தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிரடி நடவடிக்கையாக கிராம் கர்ணம், மணியம் பணியிடங்களை ஒழித்தார். அவரது ஆட்சி காலத்தில் மாவட்டங்கள் வட்டங்கள், உள்வட்டங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் 1967 க்கு பிறகு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சிரமங்களுக்கிடையில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பட்டா பிரச்சினைகளுக்கு யாரை எனது அணுகுவது என்ற ஓரம் கீழே விவரம் கீழே பூங்கா இதழ் கருத்தாக உள்ளது.

(தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சங்கத்தைச் சார்ந்த திரு கே ராஜ்குமார் அவர்களின் பதிவில் இருந்து பெறப்பட்ட தகவல்கள். நன்றி திரு கே ராஜ்குமார்)

பூங்கா இதழ் (The News Park) கருத்து:  நிலங்களுக்கு பட்டா எனப்படும் சொத்துரிமை ஆவணம் ஆனது நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறையில் வட்டாட்சியர் (தாசில்தார்) அவர்களால் வழங்கப்படுகிறது. இதில் தவறு இருந்தால் வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) மேல் முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டின் தீர்வு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை எனில் சீராய்வு மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் (டிஆர்ஓ)தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மேலும் வருவாய் நிர்வாக சீர்திருத்த ஆணையரை அணுகலாம். இதையே வருவாய்த்துறை நீதிமன்றம் என்று அழைக்கிறோம். 

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles