படைப்புத்திறனுள்ள ஒருவரால் குழப்பமான சூழ்நிலையைக்கூட சிறப்புமிக்க கலைப்படைப்பிற்கான காரணியாகவும் மாற்றமுடியும் – நிக்கி ரோவ் The creative mind can turn chaos into a master piece and call it Art – Nikki Rowe 🌹🌷💐🌾🎋🌸🌺🌻☘🥀🎋 |
நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி! இந்தக் கேள்வி ‘திங் அவுட் ஆப் பாக்ஸ்’ வகையை சேர்ந்தவை என கூறப்படுகிறது எப்படி வெற்றியாளர்கள் பதிலளித்து இருப்பார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற சிறப்பாகப் படித்தால் மட்டும் போதாது. சில சாதுரியமான விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். சரியாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தவறாக போக வாய்ப்புள்ளது. ஐஏஎஸ் என்பது கடக்கக முடியா தீவில்லை. ஆனால் அதனை சரியாக முறையில் கணக்கிட்டுக் கடந்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். கடந்த கால ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட சுவரஸ்யமான கேள்விகள் சில.

கேள்வி 1: நான் உங்கள் தங்கையை அழைத்துக் கொண்டு ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: என் தங்கைக்கு உங்களை விட சிறந்த வாழ்க்கை துணை வேறு யாராக இருக்க முடியும்.
கேள்வி 2: ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால் உடையவில்லை ஏன்? பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
கேள்வி 3: பாதி ஆப்பிள் போல் இருப்பது? பதில்: இன்னொரு பாதி.

கேள்வி 4: 5+5+5=550? ஒரே ஒரு நேர்கோடு மட்டும் போட்டுக் கொள்ளலாம் ஆனால் விடை 550 வர வேண்டும். பதில்: 5 ஆம் எண்ணின் பக்கத்தில் உள்ள + குறியீட்டில் சாய்வாக ஒரு கோடு போடப்படுகிறது. இதன் பின் + சிம்பிள் 4 ஆக மாற்றப்படுகிறது. விடை 545+5=550?
கேள்வி 5: ராமன் தன்னுடைய முதல் தீபாவளியை எங்கு கொண்டாடினார்? பதில்: இந்தக் கேள்வி நாம் ஏற்கனவே பிரியமான தோழி படத்தில் பார்த்து விட்டோம் என நினைக்கிறீர்களா? அந்தக் கேள்விகள் யூபிஎஸ்சியில் கேட்கப்பட்டதுதான். நரகாசுரனைக் கொன்றதால் தீபாவளி கொண்டாடுகின்றோம் இல்லையா? நரகாசுரனை கொன்றது யார்? கிருஷ்ணன். ஆக கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம் எடுக்கப்பட்டது. எனவே ராமரருடைய காலத்தில் தீபாவளி இல்லை. சிம்பிள்.
கேள்வி 6 : செவன் ஈவன் நெம்பர் சொல்லுங்கன்னு. பதில்: சிம்பிள் சார் செவன்ல இருந்து ‘எஸ்’ ரிமூவ் பண்ணா ஈவன் நம்பர் கிடைத்து விடும்.
கேள்வி7: தொடர்ந்து வரும் மூன்று நாட்களை அவற்றின் பெயர்களின்றி எவ்வாறு சுட்டிக் காட்டுவீர்கள்? மூன்று நாட்கள் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டும். ஆனால் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரக்கூடாது? பதில்: நேற்று, இன்று, நாளை

கேள்வி 8: 1918 ஆம் ஆண்டில் முடிவு என்ன? பதில்: 1918 ஆம் ஆண்டின் முடிவு 1919 ஆண்டு தொடக்கம்.
கேள்வி 9: ஒரு மனிதன் 8 நாட்கள் தூங்காமல் வேலை செய்ய முடியுமா? பதில்: முடியும் இரவில் தூங்கிக் கொள்ளலாம்.
கேள்வி10: உங்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி காட்டுகிறார் என்ன செய்வீர்கள்? பதில்: அந்தத் துப்பாக்கியை பார்பேன் புடிச்சிருந்தா வாங்குவேன். புடிக்கலைன்னா சாரி சொல்லி நான் வாங்க விருப்பலைன்னு சொல்லிருவேன் –

பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஊக்கம் என்பது உள்மனதின் உந்துதல். ஊக்கம் இல்லாத வாழ்வில் சாதனைகளும் இல்லை, சரித்திரமும் இல்லை.
