Monday, April 28, 2025
spot_img

சாதிக்க விரும்புகிறீர்களா? ஒரு நிமிடம் செலவு செய்து படியுங்கள் + திருமணத்துக்குப் பின்பு மனைவியின் வீட்டில் குடியேறும் தமிழர்கள்.

வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய நினைக்கிறீர்களா?

இனிய வணக்கம்….எதையும் தெளிவான….பலமான முடிவுடன் ஒரு தீர்மானத்திற்கு கொண்டு வராததுதான்…தோல்விக்கு காரணமாகிறது – ஜான் போவ்ஸ்
A failure establishes only this….That our determination to succeed was not strong enough…— John Boves
💐🎋🌹🌷🌾💐🎋🌹🌷🌾💐

ஒரே நேரத்தில் இருவர் ஒரே பள்ளியில் படித்தார்கள்.  ஒருவரின் தந்தை ஐஏஎஸ் அதிகாரி, மற்றொருவரின் தந்தை ஒரு டீ கடை நடத்துகிறவர். இருவரும் ஒரே வகுப்பில்,  ஒரே பாடங்களை, ஒரே ஆசிரியர்களிடமிருந்து கற்றனர். ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு ஒருவன் ஒரு கார் நிறுவனத்தில் CEO ஆனார்,  மற்றொருவன் கூடவே அந்த கம்பனியில் ஒரு டிரைவர். நாம் நினைப்பது போல வாழ்க்கை நியாயமானது அல்ல, ஆனால் அது சாத்தியமானது!

துவக்கம் (initiation) எங்கே இருந்து என்பதை விட, முடிவு (result) எங்கே இருக்கிறது என்பதுதான் வாழ்க்கையை அமைக்கிறது.   நீங்கள் இன்று எங்கு இருக்கிறீர்கள் என்பது எப்போதும் முக்கியம் இல்லை, நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பது தான் வாழ்க்கையை மாற்றும் முடிவு. 

உங்கள் பின்னணியை (background) மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள். பின்புலம் ஒரு நிலைத்த அடையாளம் அல்ல, அது ஒரு ஆரம்ப புள்ளி மட்டுமே. நீங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே வாழ்க்கையின் முதல் படி. சில சமயங்களில்ஏமாற்றங்கள் வரும். ஆனால், அவை உங்களை உருவாக்கும்.  எதிர்ப்புகள் ஒரு கதை சொல்லும். எவ்வளவு உறுதியுடன் எதிர்ப்புகளை வெல்வது என்பதே முக்கியம்.

உங்கள் கனவுகள்தான் (dreams) உங்கள் நிஜ அடையாளம். “நான் இப்படி இருக்கவே கூடாது” என்ற எண்ணம் வந்தால், அதுவே மாற்றத்தின் ஆரம்பம். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் – பெரிய மாற்றத்திற்கு வழி. ஒரு நாள் 1% முன்னேற்றம் மட்டும் செய்தால், ஒரு வருடத்தில் 365% முன்னேற்றம்  (consistency). மற்றவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். உலகம் உங்களைத் தான் பார்த்துக்கொள்வது இல்லை. உங்கள் செயல்கள், உங்கள் பயணம், உங்கள் வெற்றிகள் தான் பேசும்.

உண்மையான வளர்ச்சி   உங்களுக்குள் தான் நடக்கிறது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை விட,  உள் மனதில் என்ன வளர்கிறது என்பதே முக்கியம். வாழ்க்கையின் மாற்றம் (change) உங்கள் உள்ளத்தின் மாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது. நீங்கள் செய்த தவறுகளை வீண்பாடாக நினைக்காதீர்கள். அவை உங்கள் பாடங்கள் (mistakes are lessons)

ஒரு பெரிய கனவுக்கு சிறிய துடிப்பு போதும் நம்பிக்கையுடன். புதிய பாதைகள், புதிய சூழ்நிலைகள், புதிய உயரங்கள்   எல்லாம் உங்களுக்காக தான். துவக்கம் சிறியது என்றால் கவலைப்படாதீர்கள்.  முடிவு மிகப்பெரியது ஆகலாம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்ற முடியும். இன்றுதான் (today) சரியான நாள், என்றாவது ஒரு நாள் என்று நினைக்கும் போது, அதை இன்று மாற்றுங்கள். ஏனெனில் இன்று செய்யும் ஒரு செயல், நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும். உலகம் பாராட்டும் முன், நீங்கள் உங்களை நம்புங்கள். உங்களால் முடியும். இன்னும் அதிகம், மேலும் சிறந்ததைக் காண முடியும்.

நம்மை சுற்றியுள்ள அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தொடங்குகிறார்கள், ஆனால் சிலர் மட்டும் பெரிய வெற்றி அடைகிறார்கள். ஏன்?  கனவுகளை தைரியமாக நினைக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் சிறிய கனவுகளை இல்லை, பெரிய கனவுகளை நினைக்கிறார்கள். “என்னால் முடியும் (confidence)” என்று நினைக்கிறார்கள்!

வெற்றி பெற்றவர்கள் வெறும் கனவுகளோடு நிற்கமாட்டார்கள். அவர்கள் திட்டமிட்டு (plan) செயல்படுவார்கள். அன்றாட இலக்குகளை நிர்ணயித்து அதன்படி செயல்படுவார்கள். திட்டமில்லாமல் முன்னேற முடியாது, வெற்றிக்கு ஒரு திட்டம் தேவை. வெற்றி பெற்றவர்கள் நேரத்தை (time management) வீணாக்குவதில்லை. தோல்வியால் (failure) பயப்படமாட்டார்கள். வெற்றி பெற்றவர்கள் தோல்வியை ஒரு படியாக பார்க்கிறார்கள். அவர்கள் மீண்டும் முயற்சி செய்வார்கள், தோல்வியை ஒரு பாடமாக பார்ப்பார்கள். தோல்வி வந்தாலே வெற்றி நெருங்கி வந்துவிட்டது என்று நம்புவார்கள். தோல்வி என்பது கடைசி அத்தியாயம் அல்ல, வெற்றிக்கு வழிகாட்டும் பாதை. 

பிறரின் விமர்சனங்களை (criticism) பரிவாக எடுப்பார்கள்.  வெற்றி பெற்றவர்கள் எந்த விமர்சனத்தையும் வளர்ச்சிக்கான சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள். விமர்சனங்களை ஏற்று, தங்களை மேலும் மேம்படுத்துவார்கள். காலத்திற்கேற்ற புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் (learning). புத்தகங்கள், பயிற்சிகள், ஆன்லைன் கற்றல் – எதுவாக இருந்தாலும், கற்றுக்கொள்வதை தொடருவார்கள். கற்றல் நிறைவடையும் நாள் வளர்ச்சி முடிவடையும் நாள். 

 சரியான மக்களைச் சுற்றி வைத்துக்கொள்வார்கள் (public relations). உங்களை ஊக்குவிக்காத மக்களை விட்டுவிடுங்கள். வெற்றி பெற்றவர்கள் தங்களை ஊக்குவிக்கும் மக்களை சுற்றி வைத்திருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் வந்தாலும், விடாமல் தொடர்ந்து போராடுவார்கள்.  “இது கடினம்” என்று சொல்லாமல், “இதற்கான வழி என்ன?” என்று கேள்வி கேட்பார்கள். வெற்றியாளர்கள் வழிகளை தேடுவார்கள், தோல்வியாளர்கள் காரணங்களை தேடுவார்கள். 

வெற்றியாளர்கள் எதையும் பொறுமையாக (patience) அணுகுவார்கள்.  அவர்கள் விரைவில் கைவிட மாட்டார்கள்.  நன்றாக யோசித்து, தெளிவாக முடிவெடுப்பார்கள். வெற்றி பொறுமையை நேசிக்கும்.  வெற்றியின் ரகசியம் உங்கள் கையில். 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய நினைக்கிறீர்களா? இன்று முதல் செயல்பட ஆரம்பியுங்கள். ஒவ்வொரு நாளும் சிறிய முன்னேற்றம் கண்டால், நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறலாம்.

திருமணத்துக்குப் பின்பு மனைவியின் வீட்டில் குடியேறும்  தமிழர்கள். எங்கு தெரியுமா?

பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்வதைத் தவிர்த்து ஆண்கள் திருமணமாகி மனைவியின் தாய்வீடு சென்றால் என்ன?. இலங்கையில்   தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்வதில்லை. அதே வீட்டில்பெற்றோர்களுடன் இருப்பார்கள் அல்லது பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வேறு வீடு கட்டிக் கொடுப்பார்கள் அல்லது மணமக்கள் விரும்பிய இடத்தில் வாழ்வார்கள். (தனிக்குடித்தனம் போதல்)

கணவனின் அம்மாவுடன் சண்டையிடுதல், நாத்தனார் கொழுந்தனார் பிரச்சனைகள் என்று எதுவும் இருப்பதில்லை. ஆண்களை வீட்டில் இருக்கும் வரை பெற்றோர்களே கவனித்துக்கொள்வார்கள். முக்கியமாக பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரித்துப் பார்ப்பதும் இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளை காசுக்காக வளர்ப்பதும் இல்லை. வரும் மருகள் அந்நிய பெண் என்று நினைப்பதில்லை. முக்கியமானது ஒரு திருமணம் நடந்துவிட்டால் அந்த கணவன் மனைவிக்கிடையில் ஆலோசனை சொல்ல எவருமே முனைவதில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ வழிவிட்டு செல்வார்கள்..!

மிகவும் சாதாரணமாக எந்தவித இறுக்க நிலைகளும் அற்று வாழும் பழக்கம் இலங்கைத் தமிழர்களுடம் உண்டு. எந்தக் குழந்தையும் தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டதாகச் சரித்திரத்தில் நான் அறியவில்லை. உழைப்பு வேறு, அறிவு வேறு, உணர்வு வேறு என்பதை புரிந்த உறவு முறைகளில் வாழ்பவர்கள். தாய் மாமன்தான் சீர் செய்யவேண்டும் என்ற ஓர் அவசியம் இல்லவே இல்லை. எல்லோரும் எல்லோருக்கும் எல்லாம் செய்வார்கள்..

உறவுகள் எல்லாம் சமநிலையோடே பேணப்படும். பேரப்பிள்ளைகள் எல்லோரும் ஒன்றுதான். இதில் மகன் வழி உறவு மகள் வழி உறவு என்ற பேதம் இருப்பதில்லை என்றாலும் குழந்தைகள் தாய் வழி உறவோடே அதிக நெருக்கம் உடையவர்கள். பெற்றோர்கள் ஆண்பிள்ளைகள் தனித்துவாழ்ந்தால் கூட பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெண்பிள்ளைகளை அவர்கள் வாழுங்காலங்களில் பிரிவதில்லை. 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: இலங்கைத் தமிழரின் வாழ்க்கை முறை கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles