Friday, April 25, 2025
spot_img

ஐந்து அமைச்சர்கள் விடுவிப்பு, அரசு பணிக்கு ஆப்பு, காத்திருந்த மூவருக்கு ஏமாற்றம், கூட்டணி தடுமாற்றங்கள்,  பல்கலைக்கழக துணைவேந்தர்களின் குழப்பம், போர் பதட்டம் உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சாமி + முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை.

அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “ஜம்மு காஷ்மீரில் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சாமி” என்றதும் கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.

இனிய
வணக்கம்….
சுய நம்பிக்கை…
வாழ்க்கைக்கு பாதுகாப்பான…
சிறப்புமிக்க …

ஒழுங்கான வழியாகும்….
- ஏஞ்சலோ
Faith in oneself is
the best and safest course
of life….
— Angelo

“ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்டு அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாக   மாற்றப்பட்ட பின்னர் நடைபெற்றுள்ள பெரிய தாக்குதல் இது.  சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த பிரதமர் உடனடியாக பாகிஸ்தான் விமான பாதை வழியை தவிர்த்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். உள்துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர்,   ராணுவ அமைச்சர் உள்ளிட்ட உயர் உள்ளிட்டோ உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகிப்பதாகவும்   இந்தியாவில் உள்ள  பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படாது என்றும் பஞ்சாபில் உள்ள பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கியமான மையமான வாகா எல்லை மூடப்படுவதாகவும் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப வேண்டும் என்றும் இந்த கூட்டத்திற்கு பின்பு இந்திய அரசு அறிவித்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. 

“காசா போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட பின்னும் இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவின் வர்த்தகப் போர் உலகம் முழுவதும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டம்  கவலை  அளிக்கிறது. இவ்வாறான சர்வதேச பிரச்சனைகள் ஏற்படும் போது விலைவாசி உயர்வு என்ற தாக்குதல் மக்கள் மீது அல்லவா ஏற்படுகிறது” என்றேன் நான்.

“ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்படாத மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒப்புதல் அளித்ததன் மூலம் தமிழக அரசு அந்த மசோதாக்களை அரசு இதழில் வெளியிட்டது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் இருந்த நிலைமை மாற்றப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை உதகமண்டலத்தில் ஆளுநர் நடத்த உள்ளது பெரும் சர்ச்சையாக நிலவுகிறது. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்  பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் என்றும்  தெரிவிக்கப்பட்டது சர்ச்சையின் உச்சத்தை தொட்டது. இத்தகைய  ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்டவை கடுமையாக கண்டித்தன.   ஆளுநரின் போக்கு அரசுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் நியமனம் செய்யப்பட்ட மாநில ஆளுநருக்கு மோதலை   வலுவடையச் செய்கிறது என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநர்கள்   பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார் என்றும் ஆளுநருக்கு அரசுக்கும் மோதல் என்பது தவறான வதந்தி என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் உச்ச நீதிமன்றம் அரசின் முடிவே இறுதியானது என்று தீர்ப்பு வழங்கிய பின்னர் தமிழக ஆளுநர் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்பாகாதா? என்று விவாதம் தொடர்ந்து கொண்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. 

“வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை போல உச்ச நீதிமன்றம் என்ன சொன்னாலும் சரி சரி எனக்கு கேட்டுக் கொண்டு மீண்டும் மரத்தின் மீது ஏறும் நிகழ்வு போல இது தொடர்கிறது சாமி. இனி வரும் காலங்களில் உதவியாளர், காவலாளி, தூய்மை பணியாளர்கள் போன்ற சில வகை பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதை போலவே தமிழக அரசின் அனைத்து துறைகளும் அறிவிக்கப்படும்     அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.   சுமார் 1.5 லட்சம் இத்தகைய பணியிடங்கள் தமிழக அரசில் உள்ளன.  அரசின் நிரந்தர பணிக்காக காத்திருப்போருக்கு அரசின் நிலைப்பாட்டால் கவலை ஏற்பட்டுள்ளது” என்றேன் நான்.

“அதிமுக – பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்கள் கூட்டணியில் உறுதியாக இருக்கக்கூடும் என்று திமுக கருதுகிறது. அதே சமயத்தில் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தங்களோடு கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று முழக்கமிட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் நம்பி நாங்கள் அரசியல் நடத்தவில்லை என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. எவ்வாறு இருப்பினும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அண்ணா திமுக – பாஜக கூட்டணி, தமிழக வெற்றி கழக கூட்டணி, என்ற மூன்று அணிகள் உறுதியாகி விட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுவது தற்போது வரை உள்ள நடைமுறையாக இருந்தாலும் சீமானை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக பாஜக தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பாமக தங்கள் கூட்டணிக்கு வருமா? அல்லது விஜய் பக்கம் சென்று விடுமா? என்ற கேள்வியும் அதிமுக தலைமைக்கு எழுந்துள்ளது. அடுத்து ஆறு மாதங்களுக்கு அரசியல் களம் சூடாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார் வாக்காளர் சாமி.

“ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சராக அவர் அவருக்கு பதவி வழங்கப்படும் என்றும் செய்திகள் வரும் நிலையில் பெங்களூர் வழியாக அமெரிக்கா செல்லும்போது அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் நான் உள்துறை இணை அமைச்சராக மாட்டேன் என்றும் தமிழகத்தில் மக்களோடு இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் இதுதான் பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றுங்கள் என்பதா சாமி” என்றேன் நான்.

“தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின்   நயினார் நாகேந்திரனும் தனியாக சந்தித்து 30 நிமிடங்கள் பேசியுள்ளார்கள். இதில் விஜய் நம்மோடு வருகிறாரா? என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகவும் அதற்கு பொது மனிதர்கள் மூலம் முயற்சி செய்து கொண்டுள்ளோம் என்று  நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாகவும் ஒன் இந்தியா செய்தி தளம் தெரிவிக்கிறது. இதற்கிடையே   அதிமுக எம்எல்ஏக்களுக்கு நேற்று எடப்பாடி பழனிச்சாமி அசைவ விருந்து அளித்துள்ளார். இதில் செங்கோட்டையன்   பங்கேற்காததும் பேசு பொருளாகி உள்ளது. என் துறைக்கு நிதியும் இல்லை அதிகாரம் இல்லை அதிகாரமும் இல்லை என்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது கோவையில் பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை சென்ற போது அளிக்கப்பட்ட வரவேற்பில் அண்ணாமலை கலந்து கொள்ளாததும் வானதி சீனிவாசன் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்ப்படித்ததும் வரவேற்பு அளித்ததும் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி.

“அதிமுகவை கைப்பற்றி விடுவோம் என்று கொக்கு போல் காத்திருந்த அம்மையாரை டெல்லி கைவிட்டு விட்டதாக அவர் கருதுகிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தாங்கள் போட்டியிட வேண்டிய நிலைமை உருவாகிவிட்டது என்று   ஓபிஎஸ் அவர்களும் தினகரன் அவர்களும் கருதுவதாகவும் தெரிகிறது. அமைச்சராக தொடர விருப்பமா? அல்லது சிறைக்குச் செல்ல விருப்பமா? என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது சாமி” என்றேன் நான்.

“அது மட்டுமா? நேற்று (ஏப்ரல் 23)   துரைமுருகன் சொத்து   குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் பொன் முடியின் மீது வெறுப்பு பேச்சு அடிப்படையில் பதிவாளர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்   என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் மக்களிடையே கடும் அதிருப்தி உள்ளாகி இருப்பதாக முதலமைச்சர் கருதுவதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவரோடு சேர்ந்து குறைந்தது 5 அமைச்சர்களை கட்சிப் பணிக்காக    அமைச்சர் பதவியில் இருந்து விடுவிப்பதாக முதலமைச்சர் முடிவெடுக்க கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை.

ஒரு பணக்காரரும் அவர் பொண்டாட்டியும். ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம்.

ஊரில் அரசால் புரசலாக பணக்காரர். பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம். இதை மறைக்க, ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து. வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும், இவரா. கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் (சோற்றால்) மறைத்த கதை.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாக்காளர் சாமியின் கடந்த இரண்டு வாரங்களாக வரவில்லை. ஒவ்வொரு வாரமும் வர வேண்டும் என்பது வாசகர்களின் கருத்தாகும்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles