Saturday, April 19, 2025
spot_img

குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம். மனதை தொட்ட ஒரு நிமிட கதை. படிக்க தவறாதீர்கள்!

இனிய வணக்கம்….எதிலும் நம்பிக்கையுடனும்….ஈடுபாட்டுடனும் செயல்படும்போது…. அதனால் பெறப்படும் சாதனைகளுக்கு வரம்புகள் இல்லை….தாமஸ்ஜே.விலோர்ட There is no limit to what a man can achieve if he so believes this….Thomas J. Vilord

குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி  போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது  அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா “மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்”ன்னு சொன்னார்.

மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் “ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்”…ராஜா சொன்னான் “யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பாக்கலாம்”… வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி.

ராஜா கேட்டான் “யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?”. அந்த குருடன் சொன்னான் “அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும் அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிக்கும்”ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.

ராஜா குருடனை பார்த்து  “உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்” என்று கேட்க , குருடன் சொன்னான் “ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தா இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வெச்சிடுவான்”..

ராஜாக்கு சந்தோஷம். “இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு…” என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். “ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிறீங்களா”ன்னு கேட்டான்.

ராஜா ‘ இது அசலா? போலியா? எப்படி தெரிஞ்சிக்கிறது’ என்று  மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததாலே எங்கயாவது முழுங்கி  வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் “மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்”னான்.

மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் “டேய் இதுல அசலா வைரம்… போலி வைரம் கலந்து இருக்கான்னு பார்த்து சொல்லு”. அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொருத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா “இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி”ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் “எதோ தெரியாம நடந்துடுச்சு”ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான்.

ராஜாவுக்கு ஆச்சர்யம்.  ராஜா குருடன பார்த்து கேட்டான் “எப்படி கண்டுபிடிச்ச காரண காரியதோட சொல்லு…” குருடன் சொன்னான் “ராஜா வெயிலில்  வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்”..

ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து “போடா மேற்கு வாசலுக்கு. டோக்கனை குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு”ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு confusion. யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான்.

ராஜா பார்த்தான் “கூப்ட்றா அந்த கபோதியை..”. குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் “என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு” அப்படின்னான். குருடன் சொன்னான் “ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க”ன்னான். 

“அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்ததுப்பான்..”. ராஜாவுக்கு  ஒரே குஷி. “சபாஷ். இந்தாடா டோக்கன்… வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு” அப்படின்னான்.  குருடனும் போய்ட்டான்.

கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னான்.  “டேய் நான் ஒண்ணு கேட்பேன்… சரியா காரண காரியதோட சொல்லணும்” அப்படின்னான். குருடனும் சரின்னான். “இந்த ஊர்ல என்னை எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?..

குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்…குருடன் சொன்னான் “ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்” அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். “ஏன்டா”ன்னு கேட்டான்.

“ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா குடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு.  ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை குடுத்து இருப்பான்… அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜா வா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பான். ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்…

மூணாவது ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எழுதி  குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்… இதுலேர்ந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு…  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல”….அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்.

Dr.V.Ramaraj, Tamil Nadu Lokayukta
Dr.V.Ramaraj, Tamil Nadu Lokayukta

பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாக்குரிமை மக்களாட்சியில் மக்களின் உச்ச அதிகாரம் என்பதை மறந்து விடக்கூடாது. வாக்காளரியல் (Voterology) கல்வி மக்களுக்கு மிகவும் அவசியமானது – பல ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் எழுதிய வெளியான கருத்து.

பன்முகத் திறன் உதவியாளர்கள் (Multi Skill Assistants) தேவை. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முன்னுரிமை

பீஸ் ஸ்ட்ராட்டஜிஸ் (Peace Strategies) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடப்படுகின்றன. சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு இரண்டு பன்முகத்திறன் உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 

கணினி வேலைகள் மற்றும் சமையல் பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். கார் ஓட்டுநர் திறன் பெற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தொடர் படிப்புகளை மேற்கொள்ள உரிய நேரம் இந்த பணியில் இருப்பதால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் நாமக்கல் மாவட்டத்திலும் அலுவலக பணிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால் திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் திறமைக்கு ஏற்ப ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணியாற்றும் இடத்தில் தங்கியிருக்கும் வகையில் இருப்பிட வசதிகளும் உணவும் வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் வரும் 2025 மே 10ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் 8825579768 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்வது இயக்குனர் குழுவின் முடிவுக்கு உட்பட்டது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles