ஊஞ்சலாடுவதால் இவ்வளவு நன்மைகளா?
முன்பெல்லாம் கிராமங்களில் வசதியானவர்களின் பல வீடுகளின் முற்றத்தில் ஊஞ்சல் இருக்கும். வீட்டில் ஊஞ்சல் இல்லாதவர்கள் ஊரில் உள்ள ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஆனால், இந்த ஊஞ்சல் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து விட்டது. பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (இதனால்தான், நாம் ரயிலில் பயணம் செய்யும்போது, பயணத்தின் போது நாம் உண்ணும் உணவு எந்த உடல்நலக் குறைவும் இல்லாமல் முழுமையாக ஜீரணமாகிறது. பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இதை அனுபவித்திருப்பார்கள்).
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள். ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை (நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
உற்சாகமானவர்களுக்கு இந்த உலகம் சொந்தம்
மனிதப் பண்புகளில் உற்சாகம் என்பது இன்றியமையாத ஒன்று. எந்தச் செயலையும் உற்சாகத்தோடு செய்தால் அதில் பெறக்கூடிய வெற்றிக்கும் ,மன நிம்மதிக்கும் ஈடு இணையே கிடையாது. உற்சாகம்தான் சிறந்த உந்து சக்தி!
முறையான உற்சாகத்தை கொண்டால் நம்பிக்கைத் தளிர்கள் தானாக வெற்றியை கொடுக்கும். தேனீக்கு தேன் சேகரிப்பது ஒரு கட்டாயமான பணி அல்ல. இங்கு மங்கும் ஆனந்தமாக பறந்து மலர்களில் தேனை உறிஞ்சி அதனால் பரவசம் அடைந்து அரிய மருத்துவ குணம் கொண்ட பொருளை அதனால் சேகரிக்க முடிகிறது.
விவேகம் இல்லாத உற்சாகம் என்பது தப்பியோடும் குதிரையை போன்றது. விவேகம் இல்லாத ஆர்வம் வெறியில் தான் முடியும். உற்சாகம் என்பது எஞ்சினுக்கு நீராவி போன்றது. வாழ்க்கையில் உற்சாகம் கலந்த ஊக்கத்தோடு செயல்பட்டால் வலிமையை கொண்டு வந்து சேர்க்கும்.
ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், உற்சாகத்தை மட்டும் ஒரு போதும் இழக்க் கூடாது. காரணம் இழந்து விட்ட அனைத்தையும் மறுபடியும் மீட்கும் வல்லமை உற்சாகத்திற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எண்ணற்ற வெற்றிகளை எல்லையில்லா வானம் போல் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆர்வம் என்கிற அடித்தளம் இல்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது. இந்த உலகின் மிகப்பெரிய சொத்து ஆர்வம் தான். அது பணம் பதவி செல்வாக்கு ஆகிய அனைத்தையும் முறியடிக்க கூடிய வல்லமையைக் கொண்டது.
வெற்றி பெற வேண்டுமானால் நம்மைச் சார்ந்தவர்களையும் உடன் பணி புரிபவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். உற்சாகம் ஊட்ட வேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைத்து வெற்றி எனும் சிகரத்தில் சாவகாசமாக அமர முடியும்.
பிறரை ஊக்கப் படுத்தும் முன்பு நம்மை நாமே முதலில் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊக்கம் இல்லாத செல்வந்தர் முதலாளியாக முடியாது. ஊக்கம் இல்லாத படிப்பாளி அதிகாரியாக முடியாது. ஊக்கம் இல்லாத தொழிலாளி தொழிலில் வெற்றி பெற முடியாது. ஊக்கத்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிகளை அடைய முடியும்.
துடி துடிப்பானவர்களுக்கு இந்த உலகம் சொந்தம். பசிக்கு உணவு போல வாழ்க்கைக்கு உற்சாகம் தேவை. ஒவ்வொரு நாள் விடியலிலும் இதயத்திற்கு ஊக்கம் எனும் சிறகு முளைக்கிறது. அந்த நாளுக்கு நன்றி சொல்லி அந்த சிறகுகளை பயன்படுத்தி உயரத்தை அடைவோம் உற்சாகம் பெறுவோம்.
நாமக்கல்லில் நடைபெற்ற இதயபூர்வமான பிரிவு உபச்சாரம்