கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் விண்வெளி அறிவியல் (space science) ஆராய்ச்சியின் விளைவாக கடந்த 70 ஆண்டுகளாக விண்வெளி தொழில்நுட்பத்தில் (space technology) சாதனைகளை படைத்து வருகிறது அறிவியல் உலகம். இதன் விளைவாகவே தொலைக்காட்சி (television) மொபைல் போன் (mobile phone), இணையதளங்கள் (websites) போன்ற ஏராளமான நன்மைகளை பெற்றுக் கொண்டிருக்கிறது மனிதகுலம். இந்நிலையில் விண்வெளி சட்டங்களும் (space law) சர்வதேச அளவில் தோன்ற தொடங்கிவிட்டன.
வாழக்கூடிய செயற்கைக்கோள்
விண்வெளியை ஆய்வு செய்வதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட வீடு தான் ஸ்பேஸ் ஸ்டேஷன் (International space station) எனப்படுவதாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் வாழக்கூடிய மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். இதன் அளவு சுமார் 500 சதுர மீட்டர் மற்றும் 445 டன் எடை கொண்டது. மாருதி காரை விட 50 மடங்கு பெரியது. பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ் ஸ்டேஷன் மகத்தான சாதனைகளை விண்வெளி ஆராய்ச்சியில் புரிந்து வருகிறது. விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் பெறக்கூடிய அனைத்து தகவல்களும், எதிர்கால விண்வெளி பயணத் திட்டங்களான சந்திரன், செவ்வாய் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரூ 87,00,00,00,00,000/-
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

அமெரிக்காவின் நாசா (NASA) ஆய்வு விண்வெளி நிறுவனமும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் ஆய்வு விண்வெளி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (ESA) ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) கனடாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (CSA) இணைந்து இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. கண்டுபிடிப்புகளைச் செய்வதற்காகக் கட்டப்பட்ட இதன் விலை சுமார் 100 முதல் 160 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (ரூ 87,00,00,00,00,000/- முதல்).
தினசரி வாழ்க்கை
விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்கும், நிலையத்திலிருந்து பூமிக்கும் கொண்டு செல்ல விண்வெளி ஓடங்கள் (space shuttles) பயன்படுத்தப்படுகின்றன, விண்வெளி வீரர்கள் ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஒரு விண்வெளி வீரரின் நாள் காலை 6 மணிக்கு எழுந்தவுடன் தொடங்குகிறது.
- காலை எழுந்தவுடன் அதிகாலை வழக்கங்கள் மற்றும் நிலைய ஆய்வு.
- காலை உணவு
- அனைத்து விண்வெளி வீரர்களுடனும் அன்றைய திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து காலை 8 மணிக்கு ஆலோசனை
- பின்னர் பல்வேறு சோதனைகள், மேலாண்மை / செயல்பாடு குறித்து ஆலோசனை
- பிற்பகல் 2 மணிக்கு – மதிய உணவு, பிற்பகல் 3 மணிக்கு – ஒரு மணி நேரம்
- இடைவேளைக்கு பின்னர் பிற வேலைகள் மற்றும் உடற்பயிற்சி
- இரவு 8 மணிக்கு- இரவு உணவு
- இரவு 9 மணிக்கு -ஆலோசனை, பின்னர் தூக்கம்
உணவு
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)


விண்வெளி நிலையத்தில் சில நிரந்தர உறுப்பினர்களும், சிலர் சில நாட்களுக்கும் உள்ளனர். இதன்படி, தூங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர உறுப்பினர்களுக்கு நிலையான குடியிருப்புகள் வழங்கப்படுகிறது. தற்காலிக உறுப்பினர்கள் தூங்கும் பைகளில் (air bags) தூங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உணவு நிபுணர்களின் ஆலோசனைபடி உணவு தயாரிக்கப்படுகிறது. அதன்படி விண்வெளி வீரர்களுக்கு தனிப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இது ஊட்டச்சத்துக்களின் அளவு மற்றும் தூய்மையைப் பராமரிக்கிறது. விண்வெளி வீரர்கள் உணவுப் பொட்டலங்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள். நிலையத்தில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உணவு வெப்பமூட்டும் சாதனங்கள் உள்ளன.
கழிப்பறை
விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ரேடியோ அலைகள் மூலம் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வசதியானது விண்வெளி வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பூமியில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் இடையே தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. பூமியைப் போலவே, விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்கள். நுண் புவியீர்ப்பு விசை நிலைமைகளில் கழிப்பறைக்குச் செல்ல அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக சிறப்பு கமோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விண்வெளி நிலையம் பெரியதாக இருப்பதால், வெளிப்புற மேற்பரப்பு பல உலோகப் பொருட்களால் ஆனது மற்றும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் மிகப்பெரிய சூரிய பேனல்களைக் கொண்டுள்ளது. இந்தக் காரணத்தினால், விண்வெளி நிலையம் பூமியிலிருந்து கண்ணாலும் தொலைநோக்கியாலும் தெரியும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு செயல்பாடுகளை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இந்தியாவின் கனவு திட்டமான ஸ்பேஸ் ஸ்டேஷன் திட்டம் விரைவில் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

