கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க – எப்படி எல்லாம் பண்றாங்க!
கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம். கல்யாணம் பன்ணனும் பணம் குடுங்க என ஒரு குயர் நோட்டுடன் இரு பெண்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டனர். அப்போது நடைபெற்ற உரையாடல் …..
“பாப்பா. எங்க பக்கம் ரெண்டு மூனு மாப்பிள்ளை இருக்காங்க. ஒருத்தர் பேங்குல மேனேஜர்..தங்கமான பையன் என்ன கோசாலை பக்கம் அடிக்கடி போகும்”…..”இல்லீங்க வேணாம். கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க” .
“இன்னொரு தம்பி அரிசிகடை வைச்சிருக்கு..எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன்”….இல்லீங்க வேணாம். கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க
“இன்னொரு சாமி கோயிலே கதியா கிடக்கும். இன்னொரு சார் ஏர்போர்ட்ல வயரிங் வேலை பாக்குறார்”…..இல்லீங்க வேணாம். கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க போதும்!

“பொட்டு தங்கம் போட வேணாம். கட்டுன புடவை சுடிதாரோடா வந்தாலே போதும். என்ன ஒகேவா?”… இல்லீங்க வேணாம். கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க.
“கல்யாண செலவு கூட நீங்க பார்த்துக்க வேணாம். எல்லாம் நம்மளே”….எங்க அம்மாவ விட்டுட்டு வர முடியாதுங்க…”உங்க அம்மாவையும் நல்லா வைச்சிகுவாங்கம்மா. உனக்கு சம்மதம்னா சொல்லு அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் முடிச்சிடலாம்”… இல்லீங்க வேணாம் கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க..
“என்னம்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க..நீ ஏன் தெரு தெருவா அலையறே. கல்யாணத்துக்கு தானே காசு கேக்கறே. நாங்க கல்யாணமே பண்ணி வைக்கிறோமே”……வேணாங்க…”ஏம்மா?”.. எங்க ஊட்டுகாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு..நான் கிளம்பறேன். (படித்ததில் மிகவும் சிரித்தது)
பழனி மாவட்டம் உதயமாவது எப்போது கணக்கன்பட்டி தாலுகா அந்தஸ்துடன் புதுப்பொலிவு பெறுமா?
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
தமிழகத்தில் பரப்பளவில் முதலாவது பெரிய மாவட்டமாக, 6266 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. பழனியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. பழனி மாவட்டமாக உதயமாகும் போது புதிய மாவட்டத்தில் எத்தகைய உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்? என்று பலரிடம் கேட்டபோது கிடைத்த கருத்துக்கள் இங்கு வழங்கப்படுகிறது
பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கல்லூரிகள் நடத்தப்படுகின்றன இவற்றை தரம் உயர்த்தி பழனி ஆண்டவர் பல்கலைக்கழகத்தை பழனியில் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் விருப்பமாக உள்ளது.

ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய வருகிறார்கள். பழனி முருகன் மலைக் கோயிலுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி பக்தர்களுக்கான உயர் வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழனியில் இருந்து கொடைக்கானல் செல்வதற்கு ரோப் கார் திட்டம் ஆய்வில் உள்ளது. இந்த திட்டத்தை விரைவுபடுத்தி தகுந்த நிதியை ஒதுக்கி உடனடியாக செயல்படுத்துவது மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என சமூக ஆர்வலரும் பூங்கா இதழின் ஆசிரியருமான நா. சின்னச்சாமி தெரிவிக்கிறார்.

புதிய தாலுகாக்களை அமைக்கும் போது கணக்கன்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு கணக்கன்பட்டி வருவாய் வட்டம் (தாலுகா) அமைக்கப்பட வேண்டும் அல்லது கணக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) உருவாக்கப்பட வேண்டும். கணக்கன்பட்டி முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கணக்கன்பட்டி வழியாக பயணிப்பதாலும் பேருந்து நிலையம் ஒன்றையும் புறக்காவல் நிலையம் ஒன்றையும் கணக்கன்பட்டியில் அமைப்பது மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என எல்ஐசி சி. ஈஸ்வரன் தெரிவிக்கிறார்.

கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, டிகேஎன் புதூர், ருக்குவார்பட்டி, எரமநாயக்கன்பட்டி ஆகியவற்றை இணைக்கும் வகையில் கணக்கன்பட்டியை சுற்றி சுற்றுவட்டச் சாலை (ரிங் ரோடு) அமைத்தால் மக்களின் போக்குவரத்துக்கும் வளமான வாழ்விற்கும் சிறப்பானதாக இருக்கும்.பழனி மாவட்டம் அமைய உள்ள பகுதிகள் விவசாய பூமி என்பதால் விவசாய வளர்ச்சிக்காக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆராய்ச்சி மையங்களை பழனி மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். பழனி மலைப்பகுதிகளில் உள்ள காடுகளில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நகராக பழனி விளங்கும் நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் உரிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
வரதமாநதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் ஆயக்குடி குளம். நல்லதங்காள் ஓடை மூலமாக கணக்கன்பட்டி பட்டிக்குளம், கஞ்சநாயக்கன்பட்டி குளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் செல்லும் பாதைகளை சீரமைக்க வேண்டும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பழனி மாவட்டம் உருவாக்கப்படும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு கூறப்பட்டுள்ளது போன்ற மேலும் பல திட்டங்களுடன் புதிதாக உருவாக உள்ள பழனி மாவட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை அரசு ஒரு விரைவில் உருவாக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: புதியன மலர்வதும் வளமான உலகை உருவாக்குவதும் அரசின் கடமையாகும்.
