Advertisement

மரம்வளர்ப்பில் தமிழகத்துக்கு வழிகாட்டும் ஒட்டன்சத்திரம் தொகுதி – 20 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு

சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகளையும் வீடுகளையும் கட்டுதல், நீர் மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், சுரங்க தொழிற்சாலைகள் போன்ற பல காரணங்களுக்காக ஒவ்வொரு நாளும் பல மரங்கள் வெட்டப்படுகின்றன. வளர்ச்சிக்கு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மனித குலம் வாழ்வதற்கு அத்திவசியமான எவ்வளவு மரங்களை வெட்டுகிறோமோ, அதை காட்டிலும் அதிகமாக அதிகமான மரங்களை வளர்ப்பது அவசியமானது. வெட்டப்பட்ட மரம் எல்லாம் மனிதனுக்கு விட்டு செல்கின்ற விதைகளே. மரம் இல்லையேல் மனித இனம் இல்லை.

(கட்டுரை கீழே தொடர்கிறது)

இன்று (01 பிப்ரவரி, 2025) முதல் நுகர்வோர் பூங்கா (The Consumer Park – English) ஆங்கிலம் இணைய இதழ் வெளிவருகிறது. இணையதள முகவரி: https://english.theconsumerpark.com/

பிராணவாயு – பல்லுயிர் பாதுகாப்பு

உலகத்தில் மனிதனுக்கு முதல் நண்பன் மரம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 சிலிண்டர்கள் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறார்.  மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக இருக்கின்றன பூச்சிகளை பறவைகள் உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் இருக்கிறது. வனங்களில் மரங்கள் அழிக்கப்படும் போது அங்குள்ள விலங்குகள் அழியவும் இடம்பெறவும் நேரிடுகிறது.  மனித குலத்துக்கு பல்லுயிர் பாதுகாப்பு மிக அவசியமானதாகும்.

(கட்டுரை கீழே தொடர்கிறது)

https://chat.whatsapp.com/BU0pDJSOVSZIffDuD7PtS3

மழை

நாம் எல்லாரும், ‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழையால் நீர்நிலைகள் உருவாகின்றன. இந்த நீர்நிலைகள் கடலில் சென்று கலக்கின்றன. பின் இந்தக் கடல்நீர் ஆவியாகி மேகமாகிறது. அதிலிருந்து மழை பெய்கிறது. மழை பெறுவதற்கு மரம் வளருங்கள் என்று ஏன் சொல்லவேண்டும்? மேகங்களை உருவாக்குவதில் மரங்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. மரங்கள் நீரூற்றுகள்போலச் செயல்படுகின்றன. மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும். 

(கட்டுரை கீழே தொடர்கிறது)

மண் பாதுகாப்பு

காற்றினாலும் மழை நீரினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது.  இதனால் வளமான மண் ஆற்று நீரோடு அடித்துச் செல்லப்பட்டு கடலில் கடலில் கலக்கிறது.  இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு   மரத்தின் வேர்களும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்வதால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் மரங்களின் அழிவு மண் சரிவுகளுக்கும் காரணமாக அமைகின்றது. பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் மரங்கள் அவசியமாக உள்ளன.

சுற்றுச்சூழல்

பூமி வெப்பமயமாவதற்கு காரணமான வாழ்வுகளில் முதன்மையான கரியமில வாயுவை மரங்கள் உள் கொள்வதால் பூமியை மிதமான வெப்ப நிலையில் வைத்திருக்க மரங்கள் முதன்மையாக உதவுகின்றன. பூமி செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம் பூமி சூடாவதை எண்ணி கவலைப்படுவதில்லை. மரங்களின் அழிவு காலநிலை மாற்றத்திற்கும் முக்கியமான காரணமாகும். சுற்றுச்சூழல் அமைப்பின் இயற்கை சமநிலையை பராமரிப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

(கட்டுரை கீழே தொடர்கிறது)

https://researchpark.in/

மாசு

காற்று மாசு, நீர் நிலைகளில் மாசு என மாசடைந்த பூமியாக மாறி வருகிறது. மாசு அடைவதை தடுக்கும் கருவியாக செயல்படும் மரங்களை அதிகம் வளர்ப்பதோடு வனப் பகுதியையும் அதிகரிக்க வேண்டும். காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 17 லட்சம் மக்கள் இறப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவிக்கிறது இத்தகைய அழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றமரங்களின் வளர்ப்பு அவசியமாகும். 

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நன்மைகள் 

மரங்கள் வருமானத்துக்கு ஆதாரமாக திகழ்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சில மரங்கள் உணவு, மருந்து மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரமாக உள்ளன. மரங்களை நடுவது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு பயனளிக்கும் நிலையான வளங்களை வழங்கும். ஆரோக்கியமான சமூகத்திற்கு மரங்கள் அவசியம். அவை நிழல் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளை வழங்குகின்றன, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன.

(கட்டுரை கீழே தொடர்கிறது)

https://theconsumerpark.com/

20 லட்சம்

மரங்களின் அடிப்படை தேவையையும் நன்மையையும் கவனத்தில் கொண்டு கடந்த நான்காண்டுகளில் 20 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளின் இருபுறமும் சுமார் 4 லட்சம் மரக்கன்றுகளும் கோவில் நிலங்களில் 12 லட்சம் மரக்கன்றுகளும் அரசு புறம்போக்கு நிலங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளும் தனிநபர் விவசாய நிலங்களில் மூன்று லட்சம் மரக்கன்றுகளும் கடந்த நான்காண்டுகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. 

77 ஊராட்சிகள்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 23 டிசம்பர் 2022 அன்று 117 ஏக்கர் நிலத்தில் 6000 நபர்களைக் கொண்டு நான்கு மணி நேரத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்வாறு தொடங்கப்பட்ட பெரும் மர நடும் இயக்கம் கடந்த நான்காண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்களில் 804 ஏக்கர் பரப்புள்ள நிலங்களில் மரங்கள் நடப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டில் 10 லட்சம் பனை விதைகளும் 2022 ஆம் ஆண்டில் 20 லட்சம் பனை விதைகளும் 2023 ஆம் ஆண்டில் 5 லட்சம் பனை விதிகளும் ஒட்டன்சத்திரம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் விதைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள 77 ஊராட்சிகளில் இருந்த மனித குலத்துக்கு எதிரியான சீமை கருவேல மரங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 

அர. சக்கரபாணி

பராமரிப்பு

மரங்களை நடவு செய்தால் மட்டும் போதுமானதல்ல அவற்றை பராமரித்து வளர்ப்பது மிக அவசியமானது கடந்த நான்கு ஆண்டுகளில் மரம் நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக 8 ஜேசிபி இயந்திரங்கள், 18 தண்ணீர் லாரிகள், 6 தண்ணீர் டிராக்டர்கள் தினமும் பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்யப்பட்ட மரங்களின் பராமரிப்பு பணிகளை தினமும் 250 தொழிலாளர் விவசாய தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். 

இந்த மகத்தான பணிகளுக்கு காரண கர்த்தாவாகவும் இயக்குனராகவும் உள்ளவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி என்பது ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் அனைவரும் தெரிந்த உண்மையாகும். ஒட்டன்சத்திரம் தொகுதியின் மரம் வளர்ப்பை முன்னோடியாக கொண்டு தமிழகம் முழுவதும் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்! மண்வளம் பெற வேண்டும்! மனிதன் நலம் பெற வேண்டும்! என்பதே அனைவரும் ஆசையாகும்.

நா. சின்னச்சாமி

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!).

நா. சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் (பணி நிறைவு). கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தரவுகள் அவரால் திரட்டப்பட்டவை.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: கார்பன் பிரித்தெடுத்தல், பல்லுயிர் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, நீர் தர மேம்பாடு, நீர் சுழற்சி ஒழுங்குமுறை, காலநிலை ஒழுங்குமுறை, காற்றின் தர மேம்பாடு, பேரிடர் அபாயக் குறைப்பு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நன்மைகளுக்கு மரங்கள் அவசியம்.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles