Advertisement

குப்பைதொட்டிகாட்டியவாழ்க்கை, தேடல் சரியானதாக இல்லையா?

குப்பை தொட்டி காட்டிய வாழ்க்கை

ஒருவன் தன்னுடைய தொழிலில் படுதோல்வியடைந்த நிலையில், தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். 

சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது. 

கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது. இதைப் பார்த்த, படுதோல்வியடைந்த அந்த நபர், கூறிய வார்த்தைகள் ‘ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம்’ என்று, தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது. இனி வரும் காலங்கள் பொற்காலமே, மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்கச் சென்றார். 

தேடல் சரியானதாக இல்லையா? 

கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போல் பலவித இரைச்சல்களோடு நிரம்பி வழிந்தது கூட்டம். மன்னார்குடி பஸ் நிற்கிறதா என பார்த்துக்கொண்டே வேகமாக நடந்து சென்றாள் காவியா.

காவியா டிக்கெட்டை வாங்கி கொண்டு பஸ்சில் ஏறி லக்கேஜ்யை மேலே வைத்துவிட்டு பக்கத்து சீட்டில் உள்ளவரை. ஜன்னல் ஓர இருக்கையில் வெள்ளைத் தலையுடன் நல்ல சிவப்பு நிறத்தோடு அறுபத்தைந்து வயதுடைய பாட்டி அந்த இடத்தைப் பிடித்திருந்தார். வேர்வை கொட்ட துடைத்துக்கொண்டு பஸ் எடுத்தாதான் காத்து வரும் என சொல்லிக்கொண்டு இருக்கையில் பக்கத்தில் இருந்த பாட்டி மெல்ல பேச்சுக்கொடுத்தார்.

” நீ எங்கம்மா போறே…”

” மன்னார்குடி பாட்டி “

“சென்னையில் வேலை பார்க்குறீயா..?”

“ஆமா பாட்டி இங்கதான் வேலை பார்க்கிறேன். நீங்க எங்க போறீங்க? ” பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள் காவியா.

“நான் கும்பகோணத்தில் இறங்கிடுவேன் அதுதான் சொந்த ஊர். பொண்ணு போன் பண்ணி திருவிழாவுக்கு வாம்மான்னு ஒரே தொந்தரவு அதான் ஆபிஸ்ல லீவு சொல்லிட்டு வந்திருக்கேன்” என்று லேசா தலையை ஆட்டியபடி நீட்டி முளக்கி சொன்னது.

“ஆபிஸ்ல வேலை பார்க்குறீங்களா? எங்க என்ன வேலை? ” ஆச்சரியதோடு கேட்டாள் காவியா.

“ஆபிஸ்ல கூட்டுற வேலைதான் பார்க்கிறேன். காப்பி போடுறது, ரூமை கூட்டி பெறுக்குறதுதான் வேலை. நான் இல்லன்னா பாவம் ரொம்ப கஷ்டபடுவாங்க எல்லாம் ஆம்பளபுள்ளைங்க குப்பையில கிடந்து வேலை பார்க்க முடியுமா? அதான் நான் எப்பவும் லீவு போடமாட்டேன். வேற வழியில்லாம கெஞ்சி லீவு வாங்கிட்டு வந்திருக்கேன். ரெண்டு நாள்ல திரும்பிடனும் இல்லன்னா நம்ம வேலைய யாராவது தட்டிகிட்டு போய்டுவாங்க ” என்று ஒன்று விடாமல் சொன்னது. 

“அப்போ… நீங்க சென்னையில தனியாவா இருக்குறீங்க, இங்கே வீட்டு வாடகையெல்லாம் ரொம்ப அதிகமாச்சே எப்படி சமாளிக்கிறீங்க?” என்றாள் காவியா.

“ம்…ம்… நான் தனியாதான் இருக்கேன் மாடில தான் வீடு நாலஞ்சு குடித்தனம் இருக்கு. மாசம் மூவாயிரத்து ஐநூறு வாடகை ஒரே ரூம்தான் அதுலையே சமைச்சு அதுலையே சாப்பிட்டுக்கனும். சாமான் பெருசா ஒன்னுமில்ல ஒரு கட்டில் கிடக்கு சமைச்சு சாப்பிட்டுட்டு போய் படுத்துருவேன். ரெண்டு ஆபிஸ்ல கூட்டுறேன் மாசம் மூவாயிரத்து ஐநூறு குடுக்குறாங்க மேல ஆயிரம் போட்டு நாலாயிரத்து ஐநூறா கேட்டு இருக்கேன் தர்றேன்னு சொல்லியிருக்காங்க அதுபோக மூனுவீட்டுல வீடு பெருக்கி பாத்திரம் கழுவுற வேலை ஒவ்வொரு வீட்டுலையும் மூவாயிரம் தர்றாங்க. முதியோர் பணம் ஆயிரம் வருது அத வாங்க நான் பட்ட பாடு கொஞ்சம் இல்ல, ஒருத்தன் வாங்கி தர்றேன் வாங்கி தர்றேன்னு சொல்லி என்கிட்ட ரெண்டாயிரம் வாங்கிட்டான் ஆனா, அவன் வாங்கி தரல அப்புறம் ஒரு டீச்சர் வாங்கம்மா நான் வாங்கி தர்றேன்னு கூட்டிபோய் எல்லாம் எழுதிக்கொடுத்துச்சு இப்ப ஒரு வருஷமா வாங்கிட்டு இருக்கேன்…” என்று சொல்லி முடித்தது.

“அப்பறம் பாட்டி நீங்க தனியா இருக்குறீங்க உடம்புக்கு முடியலன்னா என்ன செய்வீங்க. பக்கத்துல இருக்கிறவங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்களா”.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  Click Here!  
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  Click Here!
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர்ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

“இதுவரைக்கும் எதுவும் வந்தது இல்ல, நான் யார் வீட்டுக்கும் போகமாட்டேன், அவங்களும் வரமாட்டாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க வந்து கேட்பாங்க நீங்க ஒரு ஆளுக்கு ஏன் சமைக்கிறீங்க நான் தர்றேன் சாப்பிடுங்கபாங்க நான் வேண்டான்னு மறுத்துடுவேன். அவங்க என்ன ஆளுங்களோ இங்கே எல்லாம் தெரியாது அதனால நான் எதுவும் வாங்கிக்க மாட்டேன். இந்த பாட்டி எப்பவும் இப்படிதான்னு சொல்லிட்டு கோச்சுகிட்டு போய்டுவாங்க என்ன பண்றது “

“வெள்ளம் வந்துச்சே அப்ப என்ன செஞ்சிங்க வீட்டுக்குள்ள தண்ணீர் வந்திடுச்சா…. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா போயிருக்குமே ” என்றாள் காவியா.

“அந்த கதைய கேளுங்க நான் அரிசி, பருப்பு, காய்கறின்னு எல்லாமே வாங்கி வச்சுருந்தேன்.. இட்லிமாவு வேர அரைச்சு வச்சுருந்தேன். அதனால எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல, மழைக்கு முன்னாடி தக்காளி கிலோ அஞ்சு ரூபான்னு சிரிப்பா சிரிச்சுது அந்த நேரம் பார்த்து ரெண்டு கிலோ வாங்கி வச்சேன். அது சமயத்துல உதவிச்சு. பக்கத்து வீட்டு காரவங்களுக்கு எல்லாம் நான்தான் அரிசி, காய்கறியெல்லாம் கொடுத்தேன். பாவம் புள்ளக்குட்டிகாரங்க நம்மளால முடிஞ்சது அதுதான். நான் தூங்குறேன் நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டு தூங்கிபோனது.

காவியாவுக்குதான் தூக்கமே வரவில்லை மண்டைக்குள் பாட்டியின் பேச்சு இடித்துக்கொண்டே இருந்தது. இந்த வயசுல இரண்டு ஆபிஸ்ல வேலை அது மாசம் ஒன்பதாயிரம் கிடைக்குது, மூனு வீட்டுல வீட்டு வேலை அது ஒன்பதாயிரம் கிடைக்குது எல்லாம் சேர்த்தா ஒரு மாசத்திற்கு பதினெட்டாயிரம் சம்பாதிக்குது. இந்த பாட்டியால் இந்த. வயதில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமெனில் படித்த இளைஞர்களால் ஏன் ஒரு வேலைக்கு கூட. ஒழுங்கா போக முடியவில்லை.

அப்போ இவர்களின் தேடல் சரியானதாக இல்லையா? அல்லது வாய்ப்புகள் இருந்தும் அவர்களுக்கு பயன்படுத்த தெரியவில்லையா? மனசுக்குள் ஆயிரம் கேள்விகள். தூரத்தில் சிறுபுள்ளியாய் ஏதோ ஒரு வெளிச்சம் பெரிதாகிக் கொண்டே வந்தது.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை!

https://chat.whatsapp.com/BU0pDJSOVSZIffDuD7PtS3
https://theconsumerpark.com/
https://researchpark.in/
https://whatsapp.com/channel/0029VaD1kU86rsR2aAgxQT1n

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles