Advertisement

ஆறுகள், அருவிகள், காடுகள், விலங்குகள், பறவைகள் அடங்கிய இயற்கையை அனுபவிக்க, அகத்தியரை தரிசிக்க, மலையேற்றத்துக்கு  விருப்பமா?  

வனத்தின் வழியே

பொதிகை மலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. பொதிகை மலையின் உச்சியில் அகத்தியர் கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை மேற்கொண்டு அகஸ்தியர் கோவிலை அடைந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். 

இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனுமதி

மலையின் மறுபக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை சார்பில் பொதிகை மலையில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது. தனியாக மலையேற அனுமதிக்கப்படுவதில்லை, மாறாக பத்துபேர் கொண்ட குழுவாக மட்டுமே மலையேற முடியும். திருவனந்தபுரத்தில் உள்ள வன அலுவலகமான அகத்தியர் கூடத்தில் மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறை ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாட்கள் பொதிகை மலையில் ஏறலாம். இதற்கு இணையம் மூலம் பதிவு செய்து உரிய கட்டணத்தை செலுத்துவதன் மூலமும் பொதிகை மலை பயணத்தை மேற்கொள்ள முடியும்.

பூங்கா இதழ், நுகர்வோர் பூங்கா இணைய இதழ்களின் படைப்புகளை நேரடியாக தங்கள் அலைபேசியில் பெற வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும் (Click Here!)

மூன்று வகை பயணம்

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், ஜோதிடம் உள்ளிட்டவற்றை படைத்து சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை சித்த வழிபாட்டாளர்கள் இறைவனாக வணங்கி வருகின்றனர்.   கடல் மட்டத்திலிருந்து 6132 அடி உயரத்தில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்று முனிவரை தரிசிப்பது புனித பயணம் என்று இவர்கள் கருதுகிறார்கள். அதே வேளையில் மலையேற்ற பிரியர்கள் இந்த பயணத்தை சாகச பயணம் என்று நினைக்கிறார்கள்.   இந்த பயணத்தின் மூலமாக ஆறுகள், அருவிகள், காடுகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இயற்கையை ரசிக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் எண்ணுகிறார்கள்.

கராமடையாறு

திருவனந்தபுரத்தில் உள்ள வன காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று போனக்காட்டில் உள்ள வனத்துறை சோதனை மையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கிலோ மீட்டர் பயணம் செய்து போனக்காடு பிக்கப் ஸ்டேஷன் என்ற இடத்தை அடைய வேண்டும். இங்கிருந்து கேரளா வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகாட்டிகளுடன் அகத்திய மலைக்கு பயணம் தொடங்குகிறது. முதல் அரை மணி நேர நடை பயணத்தில் அங்குள்ள விநாயகர் கோயிலை அடைந்து அவரை வணங்கி விட்டு நடைபயணத்தை தொடரலாம்.  அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் நடை பயணத்தில் பிரமிக்க வைக்கும் அடர்ந்த வனப்பகுதியான கராமடையாறு பகுதியில் மலையேற்ற பாதை தொடங்குகிறது. 

இணைய வெகுஜன பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி பத்திரிகைகளிலும் பங்களிக்க விருப்பமா? இங்கே தொடுங்கள்! (Click here)

கராமடையாறு பகுதியில் இருந்து மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளிகள் உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் நடை பயணத்தை மேற்கொண்டு அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடையலாம். இங்கு கேரள வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்களுக்கான தங்கும் இடத்தில் முதல் நாள் இரவு தங்க வேண்டும். 

சங்கு முத்திரை

அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கி விட்டு இரண்டாம் நாள் நடை பணத்தை மக்கள் தொடங்குகிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்து சென்று பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் முழுமையான மூலிகை நீரை கொண்ட தென் பொதிகை மான்சரோவர் குளத்தில் குளித்து விட்டு முடித்துவிட்டு மீண்டும் தொடங்கலாம். 

தென் பொதிகையில் இருந்துசுமார் 15 நிமிட பயணம் நடை பயணத்தில் தமிழக வனப்பகுதியின் எல்லையில் உள்ள சங்கு முத்திரை என்ற இடத்தை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் சங்கு போன்ற அமைப்பை உடையதால் இந்த இடம் சங்கு முத்திரை என்ற பெயரை பெற்றுள்ளது. கேரள மக்கள் இந்த பகுதியை பொங்காலைபாறை எனக் கூறி அங்கு வந்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

பூங்குளம்

சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு புறம் உள்ள பள்ளத்தாக்கில் பொருநை என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்பட்ட ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் என்ற சுனை உள்ளது. இந்த இடத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இயற்கையான அழகை கண்டு ரசிக்கலாம். சங்கு முத்திரையிலிருந்து அகத்தியமலை உச்சியை அடையும் வரை உள்ள பாதையானது பெரும்பாலும் செங்குத்தான பாறைகளாக உள்ளன. இங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது சவாலாதானதாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிய பயணமாக இருந்தாலும் இந்தப் பயணத்தில் இந்தப் பகுதியில் வெயிலும் குளிரும் மாறி மாறி இருந்து கொண்டிருக்கும். இத்தோடு சூறாவளி காற்றும் அவ்வப்போது வீசும். இவற்றை தாங்கும் உடல்நிலை உள்ளவர்கள் மட்டுமே இங்கு பயணிக்க வேண்டும்.

“நுகர்வோர் பூங்கா” படிக்க  இங்கே தொடுங்கள்! (Click here)

மகாமுனி

பயணத்தின் இறுதி எல்லையாக குட்டையான மரங்களை கொண்ட சிறு சோலையில்   மகாமுனிவர் அகத்தியரின் சிலை அமைந்துள்ள கோவிலை அடையலாம். இங்கு வரக்கூடிய பலரும் அவரை தரிசித்து தாமிரபரணியில் எப்போதும் வற்றாத நீர் வேண்டும் என்றும் தங்களது சொந்த பிரார்த்தனைகளையும் அவரிடம் முன் வைக்கிறார்கள். பயண இலக்கை அடைந்த திருப்தியில் கவனமாக செங்குத்தான பாறைகளில் கீழே இறங்கி 5 மணி நேர நடைபயணத்துக்கு பின்னர் மீண்டும் அதிருமலை கேம்ப் செட்டுக்கு வந்து அங்கு நடைபெறும் இரவு கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு உணவு அருந்திவிட்டு இரவு அங்கு தங்கலாம். மூன்றாம் நாள் காலையில் மீண்டும் நீங்கள் திருவனந்தபுரம் நோக்கி பயணிக்கலாம்.

தூய காற்று, மூலிகை நீர், செல்போன் தொந்தரவு இல்லாத உலகம், இயற்கை அழகு ஆகியவற்றை அனுபவிக்க சிறந்த பயணமாக அகத்திய அகத்திய மலை பயணம் அமையும் என்றால் மிகை அல்ல.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இந்த பயணத்துக்கு அனுமதி வழங்கப்படுவதால் முழுமையான விவரங்களை கேரள வனத்துறையின் அல்லது சுற்றுலா துறையின் இணையதளத்தில் விரிவாக தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து பயணித்து மகிழ்வடையுங்கள்!

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உஷார்! முறையற்ற உணவு பழக்கத்துக்கு வழி வகுக்கும் ஆன்லைன் உணவு – அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்
 
உஷார்! பாட்டில், கேன் தண்ணீர் குடிக்கிறீர்களா? தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் – நுகர்வோர் நீதிபதி வலியுறுத்தல்
 
வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்!  

எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)

வெகுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ்
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon

ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ்
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்
 
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories). மெனுவுக்கு சென்று தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்புஅரசியல்
மாநிலம்அரசு
தேசம் நிர்வாகம்
சர்வதேசம்அரசியல்
சிறப்பு படைப்புகள்பிரச்சனைகள்
கருத்துபாதுகாப்பு
நேர்காணல்அமைதி
அறிவு பூங்காவாக்காளரியல்
பொருளாதாரம்சமூகம்
நிதிமக்கள்
உற்பத்திகல்வி – வேலை
சேவைகள்ஆன்மீகம்-ஜோதிடம்
தொழில் வாழ்க்கை
வர்த்தகம் கலை – இலக்கியம்
விவசாயம்பொழுதுபோக்கு
உணவு -வீடுவிளையாட்டு
கதம்பம்நாங்கள்
நீதி -சட்டம்நாங்கள் 
குற்றம்புரவலர்கள்
புலனாய்வுஆதரிங்கள்
இயற்கை பங்களியுங்கள்
அறிவியல்படியுங்கள் – நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்”, இணைப்புக்குச் செல்ல இங்கே தொடுங்கள்! (Click here)
ஆரோக்கியம்
களஞ்சியம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles