இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்..
“பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை (லோக்சபா) தலைவராக சபாநாயகர் செயல்படுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்று முறை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை (ராஜ்யசபா) தலைவராக செயல்படுகிறார். மாநிலங்களவையின் தலைவரான இந்திய துணை ஜனாதிபதி மீது சுதந்திரம் பெற்ற முதல் தற்போது வரை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. தற்போது, எதிர் கட்சிகள் மாநிலங்கள் அவை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான அறிவிப்பை கொடுத்துள்ளன” என்றார் வாக்காளர் சாமி.
நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் அனைவரும் படியுங்கள் – “நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்” |
“கடந்த வாரம் நான் ஏற்கனவே கூறியதைப் போல மத்திய அரசும் பாராளுமன்றத்தில் ஒரே நாடு – ஒரே தேர்தலுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “அப்படியானால் மாநிலங்கள் அவை தலைவர் பதவியிலிருந்து துணை ஜனாதிபதி நீக்கப்பட்டு விடுவார், நாடு முழுவதும் ஒரே நாடு – ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்து விடும் இல்லையா! சாமி” என்றேன் நான்.
“மாநிலங்களவை தலைவரை நீக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை பலம் எதிர் கட்சிகளுக்கு இல்லை. இதனால், வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெறப் போவதில்லை இருப்பினும், இத்தகைய தீர்மான விவாதத்தின் போது மாநிலங்களவை தலைவராக உள்ள துணை ஜனாதிபதி வரம்பு மீறி செயல்படுகிறார் என பேசுவதற்கு வாய்ப்பாக எதிர்க்கட்சிகள் இதனை பார்க்கின்றன” என்றார் வாக்காளர் சாமி.
உங்கள் கருத்துக்கள் வெளியாக வேண்டுமா? “சரியும் புத்தக வாசிப்பால் ஏற்படும் தீமைகள்?” என்பது குறித்த தங்களது கருத்துக்களை நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் வரும் சனிக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் (Ms word type) வாசகர்கள் அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் கருத்துக்கள் நுகர்வோர் பூங்காவில் வெளியிடப்படும். தங்களது கருத்துக்கு கீழே பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் விரும்பினால் புகைப்படத்தை இணைத்து அனுப்பலாம். |
“ஒரே தேர்தல் மசோதா தாக்கல் – ஓட்டெடுப்பில் மத்திய அரசுக்கு வெற்றி – என்று பிரபல நாளிதழ் ஒன்று முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக இன்று வெளியிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு சாதாரண பெரும்பான்மை பலம் வாக்கெடுப்பில் கிடைத்துள்ள போதிலும் இந்த மசோதா அரசியலமைப்பு திருத்த சட்டம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வாக்களிக்க வேண்டும். ஆனால், அத்தகைய பெரும்பான்மை ஆளும் கூட்டணிக்கு இல்லை” என்றார் வாக்காளர் சாமி.
“தேசிய அளவிலும் தமிழகத்திலும் காலியாக உள்ள முக்கிய பதவிகளில் டிசம்பர் மாதத்துக்குள் நியமனம் செய்யப்பட வாய்ப்புண்டு என்று கடந்த செப்டம்பர் மாதம் சொன்னீர்களே, சாமி!” என்றேன் நான்.
கட்டுரைகளை வரவேற்கிறோம் ** சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான கட்டுரைகளை “பூங்கா இதழுக்கு” தாங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ** வெளியிட தகுந்தனவாக தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் “பூங்கா இதழ்” இணைய இதழில் வெளியிடப்படும். கட்டுரைகளுடன் தங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். ** தாங்கள் அனுப்பும் கட்டுரைகள் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 300 வார்த்தைகளுக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எம் எஸ் வேர்ட் (MS word) வடிவத்தில் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும் கட்டுரைகளை சுருக்கவும், திருத்தவும், நிராகரிக்கவும் ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. |
“இந்தியாவில் 18 வயது நிறைவடையாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 கோடி. தேசிய அளவில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனிலும் தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனிலும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனை ஒரே நாடு ஒரே நிலைமை எனக் கூறலாம். இதைப் போலவே, மத்திய தகவல் ஆணையத்திலும் காலியாக உள்ள எட்டு தகவல் ஆணையர்களுக்கு விளம்பரம் செய்யட்டும் இன்னும் நியமனங்கள் நடைபெறவில்லை. மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தற்போதும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ராணுவ தீர்ப்பாயம், கம்பெனிகள் தீர்ப்பாயம் போன்றவற்றிற்கு நீதி வழங்கும் சில உறுப்பினர்களை தேர்வு செய்யவும் விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில உணவு கமிஷன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் இந்த கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ள நிலையில் இதற்கு ஏற்கனவே விண்ணப்பங்களை தமிழக அரசு விளம்பரம் செய்து பெற்றுவிட்டது. விரைவில் இந்த பதவிகளில் தகுந்த நபர்களை தமிழக அரசு நியமனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றேன் நான்.
“ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதியை தேசிய நுகர்வோர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக செயல்படுகிறார். ஆனால், எந்த மாவட்டத்திலும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியால் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்படுவதாக தெரியவில்லை” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பூங்கா இதழில் வாக்காளர் சாமி தொடர்ந்து நாட்டு நடப்பை தெரிவித்து வருவதற்கு பூங்கா இதில் சார்பில் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website)
வெகுஜன வெளியீடுகள் (Popular Park)
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ் அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |
பூங்கா இதழ் படைப்புகளின் வகைகள் (Menu and Categories) வகைகளின் தலைப்புகளை தொட்டால் அந்தப் பகுதிகளுக்கு செல்லலாம்
நாட்டு நடப்பு | அரசியல் |
மாநிலம் தேசம் சர்வதேசம் சிறப்பு படைப்புகள் கருத்து நேர்காணல் அறிவு பூங்கா | அரசு நிர்வாகம் அரசியல் பிரச்சனைகள் பாதுகாப்பு அமைதி வாக்காளரியல் |
பொருளாதாரம் | சமூகம் |
நிதி உற்பத்தி சேவைகள் தொழில் வர்த்தகம் விவசாயம் உணவு -வீடு | மக்கள் கல்வி – வேலை ஆன்மீகம்-ஜோதிடம் வாழ்க்கை கலை – இலக்கியம் பொழுதுபோக்கு விளையாட்டு |
கதம்பம் | நாங்கள் |
நீதி -சட்டம் குற்றம் புலனாய்வு இயற்கை அறிவியல் ஆரோக்கியம் களஞ்சியம் | நாங்கள் புரவலர்கள் ஆதரிங்கள் பங்களியுங்கள் |