Advertisement

நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் பூங்கா இதழ் (தமிழ்), நுகர்வோர் பூங்கா (தமிழ்), பூங்கா இதழ் (ஆங்கிலம்) மற்றும் நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) ஆகிய வெகுஜன இணைய இதழ்கள் (popular journals) வெளியாகி வருகின்றன. மக்களுக்கு செய்திகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும், கட்டணம் இல்லாமல் (no subscription charge) பயன்படுத்தக்கூடிய, பொது தளமாக (open access) இந்த இணைய இதழ்கள் செயல்பட்டு வருகின்றன.  ஓரிரு வாரங்களில் ஆறு ஆராய்ச்சி இதழ்கள் (research journals) தொடர்ந்து வெளியாக உள்ளன. சமூக மேம்பாட்டுக்கு ஆய்வுகள் மூலம் பங்களிக்க தகுந்த ஆதரவை வழங்குவது ஆராய்ச்சி இதழ்களின் நோக்கமாகும். 

கொள்கைகள்

அமைதிக்கான உத்திகள் அமைப்பின் முக்கிய குறிக்கோள் புதுமையானஉன்னதமான அமைதி கலாச்சாரத்தை உருவாக்குதல்“.  பொது நலன் (public interest) மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு (democratic values) அர்ப்பணிப்புடன் நேர்மையான நோக்கத்துடன் (bona fide Intention) நாங்கள் பணியாற்றி வருகிறோம்.உள்ளபடி சொல்வோம்ஆய்வும் செய்வோம் என்பதுதான் எங்களின் முதன்மைக் கொள்கை. நடுநிலை வெளியீடு, அங்கீகரிக்கப்பட்ட தகவல், தகவல் சார்ந்த செய்திகள், தரவு சார்ந்த கட்டுரைகள், எளிமையான படைப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணையுடன் வெளியீடு ஆகியவையும் எங்கள் கொள்கைகளாகும்.

நல்லெண்ண தூதர்- புரவலர்

வெகுஜன இதழ்கள் மூலம் மக்களுக்கு செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளை கொண்டு செல்வதை வலுப்படுத்தவும் ஆராய்ச்சி இதழ்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணியை மேற்கொள்ளவும் எங்களது 10 இணைய பத்திரிகைகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஒரு நல்லெண்ண தூதரை (Goodwill Ambassadors) நியமிக்கவும் இந்தப் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை கண்டறிந்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வளர்ச்சிக்கு தகுந்த பங்களிப்பை (contribution) வழங்க கூடிய ஓரிரு புரவலர்களை (Patron) நியமிக்கவும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையில் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு இடம் பெறும்.

கௌரவ விரிவாக்க அலுவலர்

அறிவை மேம்படுத்தவும் தகவல்களை வழங்கவும் கட்டணம் இல்லாமல் பொதுதளமாக செயல்படும் பொதுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகளை சமூக ஊடகங்கள் மற்றும் பிற உத்திகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்ல தகுந்த பங்களிப்பை வழங்க தன்னார்வலர்களாக (volunteer) பணியாற்ற விருப்பம் உள்ள கௌரவ விரிவாக்க (Honorary Extension Officers) அலுவலர்களை அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

வெகுஜன மற்றும் ஆராய்ச்சி பத்திரிகைகள் மூலமாக சமூக பங்களிப்பை புரிய ஆர்வம் உள்ளவர்கள் [email protected] or [email protected] or [email protected] or [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது அல்லது 9487665454 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களைப் பற்றிய விவரங்களையும் தங்கள் தொடர்பு எண்ணையும் தங்கள் விருப்பத்தையும் அனுப்பலாம் (இந்த எண் தகவலை அனுப்ப மட்டுமே – பேசுவதற்கு அல்ல). விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்.

வேண்டுகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த சமூக அர்ப்பணிப்பு உள்ளவர்களை தேர்வு செய்து, விரைவில் நல்லெண்ண தூதர்கள், புரவலர்கள் மற்றும் கௌரவ விரிவாக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

எங்களது பொதுஜன வெளியீடுகள் (Popular Park)

நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ்

நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ்

பூங்கா இதழ் (ஆங்கிலம்) – இணைய இதழ்

பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ்

தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App)

எங்களது ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park)

சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் 

சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் 

குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம் மற்றும் பாதிப்புகள் ஆராய்ச்சி இதழ்

அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் 

விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ்

வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ்

அமைதிக்கான உத்திகள் நிறுவனம் (Tranquility Strategies)

வெளியீடு மற்றும் ஊடகக் குழுவைத் தவிர (Publication and Media Group), எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குழு (Promotional Activities Group) மற்றும் சமூகப் பொறியியல் குழுவும் (Social Engineering Group) சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் செயல்பாடுகள் குழுவானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: மேம்பாட்டுத் திட்டங்கள், படத்தை உருவாக்குதல் மற்றும் நிகழ்ச்சித் திட்டமிடல்.

சமூகப் பொறியியல் குழுவின் எங்கள் அறிவுப் பூங்கா மற்றும் சமூக சேவைப் பிரிவுகள், தாராள மனப்பான்மையுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் சமூகத்திற்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்றன. எங்கள் சமூக பொறியியல் குழுவானது “அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்”, “விண்வெளி அமைதி மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்” மற்றும் ” வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் ” ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. எங்கள் சேவையைப் பற்றி மேலும் அறிய https://tranquilitystrategies.com/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். 

கே.பி. மனோகரன்
கே.பி. மனோகரன்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles